»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
  • "ஷாஜகான்" படத்திற்காக சமீபத்தில் விஜய், மீனா நடித்த பாடல் காட்சி படமானது. 35 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஜிலு ஜிலு செட்டில் விஜய்யும், மீனாவும் கவர்ச்சி சொட்ட சொட்ட நடனமாடினார்கள். அமர்க்களம் லாரன்ஸ் ராகவேந்திரா நடனத்தை வடிவமைக்க, 50 டான்சர்கள் புடை சூழ விஜய்யும், மீனாவும் கலக்கலாக ஆட பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம்.
  • ஸ்னேகாவை புதிதாக இளம் புன்னகை அரசி என்று கோடம்பாக்கத்தில் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அவருடைய சிரிப்பு அப்படியே உள்ளத்தை அள்ளிக் கொள்கிறதாம். ரசித்தவர்கள் கூறுகிறார்கள். அடடே!.
  • "12-பி"யில் ஜோதிகாவும், சிம்ரனும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியிருக்கிறார்களாம் - பாடல் காட்சிகளில். டைரக்டர் ஜீவாவும் அவர்களை அனு அனுவாக ரசித்துப் படமாக்கியுள்ளாராம். பாடல் காட்சிகளில் ரிச்னஸ் இருக்க வேண்டும் என்பதற்காக செலவைப் பற்றிக் கவலைப்படாமல் புகுந்து விளையாடியிருக்கிறார்களாம். அப்ப, பாட்டுக்காக படத்தைப் பார்க்கலாம்னு சொல்லுங்க!
  • மந்த்ரா என்றால் உங்கள் ஞாபகத்திற்கு வருவது... வெயிட், வெயிட். அதையெல்லாம் தூக்கி மூட்டைக் கட்டி வைத்து விட்டு, "ஆடி18" படம் வந்தவுடன் பாருங்கள். சிவப்பு சேலையுடன், ஒரு கையில் வேப்பிலை, மறு கையில் தீச்சட்டியுடன், தலைவிரி கோலமாக சாமியாடியிருக்கிறார் மந்த்ரா. குலவை புடை சூழ, சூலங்களின் உக்கிரத்திற்கு மத்தியில் அம்மனிடம் இறைஞ்சும் பக்தையாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் மந்த்ரா. என்ன சார், படத்தைப் பார்ப்பீங்கதானே!
  • நடிகை ஜோதிகாவின் சம்பளம் கூடி விட்டதாம். முன்பெல்லாம் ஒரு படத்திற்கு ரூ.50 லட்சம் வரை வாங்குவாராம். இப்போது அதை ரூ.75 லட்சமாக ஏற்றி விட்டாராம். என்ன காரணம் என்று கேட்டால், "ஸ்டார்" நல்லா ஓடுது, அடுத்து வரும் "12பி"யும் என்னை சூப்பர் நடிகையாக மாற்றி விடும். அதனால்தான் இந்த சம்பள ஏற்றம் என்று கூறுகிறாராம்.
  • சின்னத் திரையில் பெண்களை சிந்திய கண்ணீரும், சீந்திய மூக்குமாக இருக்க வைப்பதில் பெரிய ஆளான சீரியல் டைரக்டர் ஹரிராஜன், விரைவில் பெரிய திரைக்கு வரவுள்ளார். தனது முதல் படத்தை காமடி கலந்த சென்டிமென்ட் படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். பிரபுதான் ஹீரோ என்று தெரிகிறது. இங்கயும் பெண்களை அழ வைத்து விடாதீங்க ஹரிராஜன்.
  • மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெற்றிகரமாக ஓடிய "ஹிட்லர்" படத்தின் தழுவல்தான் "மிலிட்டரி" படத்தின் கதை என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. சத்யராஜ்தான் "மிலிட்டரி"யின் ஹீரோ. என்டே குருவாயூரப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil