»   »  ஓட்டுப் போடாதவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்... ஆர்ஜே பாலாஜி காட்டம்!

ஓட்டுப் போடாதவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்... ஆர்ஜே பாலாஜி காட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் மட்டுமே சென்னையில் பதிவானது. இது குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கடும் ஏமாற்றமும்,ஓட்டுப் போடாதவர்களுக்குக் கண்டனமும் தெரிவித்திருக்கிறார்.

தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் 100% வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்பதற்காக, கடுமையான முயற்சிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்தது.

'TN 100% is Absolutely Waste' says RJ.Balaji

இதற்காக ஏராளமான விளம்பரங்களையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட முயன்றது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களை விட குறைந்த சதவீத வாக்குகளே சென்னையில் பதிவாகியுள்ளது.

இதனால் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் மிகக்குறைந்த வாக்குப்பதிவு பெற்ற மாவட்டம் என்ற பெருமை தற்போது சென்னைக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் ஆர் ஜே பாலாஜி ''சென்னையில் 57 சதவீதம் தானா?அட போங்கடா டேய்.

தமிழ்நாட்டில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரம், உழைப்பு எல்லாம் வீண். மீதமுள்ள 43 சதவீத மக்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் " என கோபத்துடன் கூறியிருக்கிறார்.

சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது குறித்து விசாரணை நடத்தப்படும், என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor RJ.Balaji Says ''TN 100% is Absolutely Waste''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil