»   »  மாற்றம் எதற்கு தேவை? எல்லாம் நல்லாத் தானே இருக்கு: வாக்களித்த சிம்பு கேள்வி

மாற்றம் எதற்கு தேவை? எல்லாம் நல்லாத் தானே இருக்கு: வாக்களித்த சிம்பு கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பாட்டு பாடி வீடியோ வெளியிட்ட நடிகர் சிம்பு மாலையில் தான் வாக்களித்துள்ளார்.

சிம்புன்னா சும்மாவே கிசுகிசு எழுதுவாங்க என்று அவரே கூறியுள்ளார். இந்நிலையில் பீப் பாடல் ஒன்றை பாடி தனது பெயரை கெடுத்துக் கொண்ட அவர் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை பாடி வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. நெட்டிசன்கள் சிம்புவை பாராட்டினார்கள். போடு மாமா ஓட்டு அதுக்கு இந்த பாட்டு, ஓட்டு போடுவது நம்மோட கடமை என்று சிம்பு மிகவும் பெறுப்பாக பாடியிருந்தார்.

TN election: Finally, Simbu casts vote

சிம்புவுக்கு என்னா பொறுப்புணர்ச்சி, தம்பி அருமையா பாடியிருக்குப்பா என்று பெருசுகளும் பாராட்டும்படி நடந்து கொண்டார். இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடந்து கொண்டிருக்கிறது.

திரையுலக பிரபலங்கள் பலர் வாக்களித்துவிட்டனர். ஆனால் வாக்களிக்குமாறு வலியுறுத்திய சிம்பு இன்னும் வாக்களிக்கவில்லையே என்று பலரும் பேசிய நிலையில் மாலையில் தான் அவர் தி.நகர் இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நடிகர், நடிகைகள் எல்லாம் காலையிலேயே வாக்களித்துவிட சிம்புவோ மாலையில் வாக்களித்துள்ளார். எப்படியோ, வாக்களித்தால் சரி தான். சிம்பு வாக்களித்துவிட்டார் ஆனால் தனுஷ் இன்னும் வாக்களிக்கவில்லையே.

வாக்களித்த பிறகு சிம்பு கூறுகையில்,

மாற்றம் எதற்கு தேவை? எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது. நேரம் ஆகிறது சீக்கிரம் வந்து வாக்களியுங்கள் என்றார்.

English summary
Actor Simbu who released a video insisting people to vote has finally casted his vote.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil