»   »  தமிழ் ரசிகாஸ், நீங்க மரண கலாய் கலாய்த்த 2 தெலுங்கு படங்கள் என்னாச்சு தெரியுமா?

தமிழ் ரசிகாஸ், நீங்க மரண கலாய் கலாய்த்த 2 தெலுங்கு படங்கள் என்னாச்சு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் ரசிகர்கள் கலாய்த்த இரண்டு தெலுங்கு படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

மலையாள படமான பிரேமத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் மலர் டீச்சர், மலர் டீச்சர் என்று அவர் மீது பாசம் வைத்தனர். இந்நிலையில் பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார்கள்.

மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தமிழ் பெண்ணான ஸ்ருதி ஹாஸன் நடித்தார்.

ஸ்ருதி மீம்ஸ்

ஸ்ருதி மீம்ஸ்

மலர் டீச்சராக நடித்த ஸ்ருதி ஹாஸனை போதும் போதும் என்ற அளவுக்கு மீம்ஸ் போட்டு கலாய்த்தனர் தமிழ் ரசிகர்கள். ஹீரோ நாக சைதன்யாவையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

ஹிட்டு

ஹிட்டு

தமிழ் ரசிகர்கள் ஸ்ருதி ஹாஸனை எந்த அளவுக்கு கலாய்த்தார்களோ தெலுங்கு ரசிகர்கள் அந்த அளவுக்கு படத்தை கொண்டாடி சூப்பர் ஹிட்டாக்கிவிட்டனர்.

கத்தி ரீமேக்

கத்தி ரீமேக்

விஜய்யின் கத்தி படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அதை பார்த்த தமிழ் ரசிகர்கள் சிரஞ்சீவியை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்தனர்.

ரூ. 100 கோடி

ரூ. 100 கோடி

கைதி எண் 150 படம் ரிலீஸான இரண்டு நாட்களில் ரூ.50 கோடி வசூலித்தது. நான்கே நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடி வசூலித்துவிட்டது. தமிழ் ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்த இரண்டு தெலுங்கு படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: premam, பிரேமம்
English summary
Telugu movie Premam and Khaidi No 150 both are remakes have become hit. It is noted that tamil fans made fun of these two movies on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil