Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நகைச்சுவை செய்வதற்கு முதலில் அறிவு இருக்க வேண்டும்... ஜி.பி.முத்து பற்றி நடிகை வனிதா
சென்னை: இதற்கு முந்தைய சீசன்கள் போல் இல்லாமல் பிக் பாஸின் இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே போட்டிகளை துவங்கிவிட்டனர்.
முதன் முறையாக பொது மக்களில் இருந்து ஒரு போட்டியாளர் தேர்வாகியுள்ளார். அது மட்டுமின்றி நமீதா மாரிமுத்துவை தொடர்ந்த்உ இரண்டாவது முறையாக ஒரு திருநங்கை போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை வனிதா இந்த சீசனில் இடம் பெற்றிருக்கும் ஜி.பி.முத்து பற்றி சில விசயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
தனுஷ்
படத்தில்
நடித்தது
எனக்கு
மன
உளைச்சலை
கொடுத்தது...
நடிகர்
போஸ்
வெங்கட்
வேதனை

ஜி.பி.முத்து
பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறில் பெரிதும் மக்களை கவர்ந்த போட்டியாளர் என்றால் அது ஜி.பி.முத்து என்று யோசிக்காமல் கூறிவிடலாம். எந்த விதமான சினிமா பின்புலமும் கலை ரீதியான வேறு துறையின் பின்புலமும் இல்லாமல் ஒரு ஆப் மூலம் பிரபலமடைந்து தற்சமயம் பிக் பாஸில் கலந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். அவரை நடிகர் கமல் அறிமுகப்படுத்திய அன்றிலிருந்தே கன்டென்ட் கொடுக்க துவங்கிவிட்டார்.

தனலட்சுமிக்கு எரிச்சல்
பொதுமக்களில் இருந்து ஒருவராக அந்த வீட்டிற்கு போட்டியாளராக சென்றிருக்கும் தனலட்சுமிக்கு, ஏனோ ஜி.பி.முத்துவை பிடிக்கவில்லை போலும். அவரைப் பார்த்தாலே காண்டாகிறது என்று அந்த பிக் பாஸ் வீட்டின் கேமரா முன்பு பேசியது மட்டுமில்லாமல் அவர் நன்றாக நாரதர் வேலை செய்கிறார். அது மட்டுமின்றி அவரது அணியில் இருப்பவர்களையும் அவருக்கு நாரதர் வேலையை செய்ய வைக்கிறார் என்று சைகையில் கூறியிருக்கிறார் தனலட்சுமி.

வனிதா பாராட்டு
இந்நிலையில் இதற்கு முன்னர் ஒரு சீசனில் பங்கு பெற்ற நடிகை வனிதா அவர்கள் ஜி.பி.முத்துவை பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். பொதுவாக நகைச்சுவையாளர் என்றால் மக்களை சிரிக்க வைப்பதற்காக தங்களது உயிரையும் கொடுக்கத் துணிவார்கள். மற்றவர்களை சிரிக்க வைக்க கூடிய அறிவு ஒருத்தருக்கு இருந்தால் மட்டுமே அதனை செய்ய முடியும். அந்த வகையில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் இவ்வளவு மக்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜி.பி.முத்து ஒரு அறிவாளிதான்.

ஏற்றுக் கொள்ள மாட்டேன்
அவரை அப்பாவி என்று கூறலாம். ஆனால் ஒன்றும் தெரியாதவர் என்று கூறி விட முடியாது. கிராமத்திலிருந்து வந்த ஒரு வெள்ளந்தியான மனிதனாகவே ஜி.பி.முத்து எனக்கு தெரிகிறார். ஆனால் அவரை மற்ற போட்டியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று வனிதா கூறியிருக்கிறார். வனிதா கூறியதில் உண்மை இருக்கிறது. காரணம், நட்பிற்கு இடம் பொருள் ஏவல் இருக்கக் கூடாது போன்ற ஞாயமான கருத்துக்களை முத்து கூறுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் அறிவாளியாகத்தான் இருக்க வேண்டும்.