For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யாரைப்பார்த்து இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்? ..கோபப்பட்ட தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா

  |

  சினிமா படவிழாவில் கலந்துக்கொண்ட தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் செய்தியாளர் ஏடாகூட கேள்வி ஒன்றை கேட்டார்.

  என்னிடம் எப்படி இந்த கேள்வியைக் கேட்கலாம், இதற்காகத்தான் நான் பேட்டியே கொடுப்பதில்லை என அவர் கோபப்பட்டார்.

  நானே வருவேன் படம் தனது இரண்டு பிள்ளைகளின் எதிர்பார்ப்பு அந்தப்படம் நன்றாக வரவேண்டும் என்று தெரிவித்தார்.

  தமிழ் திரையுலகில் மண்மணத்துடன் படம் எடுத்த இயக்குநர் கஸ்தூரி ராஜா

  தமிழ் திரையுலகில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவை தெரியாதவர்களே இல்லை எனலாம். பிரபல இயக்குநர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர். ராஜ்கிரணின் முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தில் இயக்குநரானார். மீனாவுக்கும் இது முதல் படம். வடிவேலு அறிமுகமான படம், இளையராஜாவின் இசையில் முத்தான பாடல்கள் என படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து ஆத்தா உன் கோவிலிலே, நாட்டுப்புறப்பாட்டு, வீரத்தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரம் விளைஞ்ச மண்ணு, என் ஆசை ராசாவே உட்பட நிறைய படங்களை இயக்கினார். அனைத்தும் கிராமிய கதைகள் ஆகும்.

  படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்கள்!படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்கள்!

  தனுஷ் செல்வராகவனின் தந்தை கஸ்தூரிராஜா

  தனுஷ் செல்வராகவனின் தந்தை கஸ்தூரிராஜா

  இவரது மகன்கள் செல்வராகவன், தனுஷ். செல்வராகவன் மிகப்பெரிய இயக்குநர், தனுஷ் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து வருகிறார். தனுஷ் ரஜினிகாந்தின் மகளை மணந்தார். இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். மன வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்துள்ள்னர். செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை மணந்து பின்னர் மணமுறிவு ஏற்பட்டு 2010 ஆம் ஆண்டு பிரிந்தனர். 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி ராமன் என்பவரை மணந்தார். செல்வராகவனின் முதல் படம் துள்ளுவதோ இளமை. தனுஷுக்கும் அதுவே முதல் படம்.

  என் இரண்டு பிள்ளைகளும் வெற்றி பெற வேண்டும்- கஸ்தூரி ராஜா

  என் இரண்டு பிள்ளைகளும் வெற்றி பெற வேண்டும்- கஸ்தூரி ராஜா

  செல்வராகவன் தனுஷ் கூட்டணி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். கடைசியாக 2011 ஆ ஆண்டு இருவரும் இணைந்து மயக்கம் என்ன படத்தை கொடுத்தனர். அதன் பின்னர் 11 ஆண்டுகள் கழித்து அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகிறது. இதுகுறித்து நேற்று ஒரு படவிழாவில் கலந்துக்கொண்ட தனுஷ், செல்வராகவனின் தந்தை கஸ்தூரிராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

  பொன்னியின் செல்வனுடன் நானே வருவேன் போட்டியா?- கஸ்தூரி ராஜா

  பொன்னியின் செல்வனுடன் நானே வருவேன் போட்டியா?- கஸ்தூரி ராஜா

  நீண்ட காலத்திற்கு பின் தனது பிள்ளைகள் இருவரும் ஒன்றாக இணைந்து நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளனர். இது தமது இரண்டு பிள்ளைகளுக்கும் முக்கியமான ஒரு நிகழ்வு தானும் அதேபோல் ஆர்வத்துடன் படத்தை எதிர்பார்க்கிறேன் என்றார். பொன்னியின் செல்வனுடன் நானே வருவேன் மோதுகிறதா என்று கேட்டபோது நல்ல படங்கள் 2 படங்கள் வந்து ஓடியுள்ளது. அது மோதலும் இல்லை போட்டியும் இல்லை. நல்ல படமாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும். எனது நாட்டுப்புற பாட்டு படம் சின்னத்தம்பி, கேபடன் பிரபாகரன் வந்தபோது வந்தது நன்றாக ஓடியது.

  தனுஷை வைத்து படம் எடுப்பேனா?- கஸ்தூரி ராஜா

  தனுஷை வைத்து படம் எடுப்பேனா?- கஸ்தூரி ராஜா

  இதுபோல் திரைப்பட வரலாற்றில் பலருக்கும் நடந்துள்ளது. நல்ல படங்கள் கட்டாயம் மக்கள் வரவேற்பை பெறும். ஆனாலும் இன்றுள்ள பிரச்சினையில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. தாணு மிகப்பெரிய நபர் அவர் இதை சமாளிப்பார் என்று தெரிகிறது. நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸ் அடிப்பது பெரிய படம், பெரிய பட்ஜெட்டில் எடுத்தாலும் ஓடவில்லை என்றால் அது சின்ன பட்ஜெட் படம் தான். கட்டாயம் நான் படம் எடுப்பேன். தனுஷை வைத்து படமெடுக்கும் அளவுக்கு யோசனை இல்லை. ஆகவே எனக்கு சுதந்திரம் இருப்பதுபோல் படம் எடுப்பேன் என்றார்.

  இந்த கேள்வி எனக்கு தேவையில்லாதது-கோபப்பட்ட கஸ்தூரி ராஜா

  இந்த கேள்வி எனக்கு தேவையில்லாதது-கோபப்பட்ட கஸ்தூரி ராஜா

  அப்போது ஒரு செய்தியாளர் தனுஷ் - ஐஸ்வர்யா பற்றி கேட்டார், அப்போது சட்டென முகம் மாரி கோபப்பட்ட கஸ்தூரி ராஜா இது நமக்கு சம்பந்தமில்லாத கேள்வி என்னிடம் கேட்கக்கூடாது, இதனால் தான் மீடியாவை மீட் பண்ணுவதில்லை மன்னிக்கவும் என்று கூறிய அவர் இயல்பு நிலைக்கு மாறி மீண்டும் கேள்விகளுக்கு பதிலளித்தார். தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு சமயத்திலேயே இது அவர்கள் சொந்த விஷயம் என்று கஸ்தூரி ராஜா பதிலளித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அதே கேள்வி அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் அமைதியிழந்தார்.

  English summary
  A reporter asked a question to Dhanush's father Kasthuri Raja who attended the film festival. Kasthuri Raja got angry hearing that. "How can you ask me this question, this is why I don't give interviews," he got angry. He said that the expectation of his two children is that the film Nane Varavanh should do well.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X