»   »  வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... உப்புக் கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144!

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... உப்புக் கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று வெள்ளிக்கிழமை மூன்று நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. தீபாவளிக்குப் பின்பு முக்கியமான படங்கள் வெளியாவது இந்த வெள்ளிக்கிழமைதான்.

உப்புக் கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144 ஆகிய படங்கள் இன்று வெளியாகின்றன.


உப்புக் கருவாடு

உப்புக் கருவாடு

அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம் என தன் பாணியில் படங்கள் தந்து கவனிக்க வைத்த ராதா மோகன், கவுரவம் படத்தில் சற்று சறுக்கினார். இப்போது உப்புக் கருவாடு மூலம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள வந்துள்ளார். காமெடிப் படம். கருணாகரன், சாம்ஸ், குமரவேல், எம்எஸ் பாஸ்கர், நந்திதா என தெரிந்த முகங்கள். ரஷிதா, திண்டுக்கல் சரவணன், டவுட் செந்தில் என புதுமுகங்கள் அறிமுகம்.


இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

ரொம்பவே ஹைப் கொடுக்கப்பட்டு வந்த அனுஷ்கா - ஆர்யாவின் இஞ்சி இடுப்பழகி இன்று வெளியாகிறது. கேஎஸ் பிரகாஷ் ராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை பிவிபி சினிமாஸ் தயாரித்துள்ளது. மரகதமணி இசையமைத்துள்ளார். அனுஷ்கா மெனக்கெட்டு குண்டாகி நடித்ததற்கு ஏதாவது பலனிருக்கிறதா என்பது இன்று தெரிந்துவிடும்.


144

144

ஜி மணிகண்டன் இயக்கத்தில் சிவி குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் 144. மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா நடித்துள்ள இந்தப் படத்துக்கு இசை ஷான் ரோல்டன்.


வாலிப ராஜா

வாலிப ராஜா

இன்று வெளியாவதாக தியேட்டர் பட்டியலுடன் நேற்றுவரை விளம்பரம் செய்யப்பட்ட சந்தானத்தின் வாலிப ராஜா திடீரென்று பின்வாங்கிவிட்டது. காரணம் தெரியவில்லை.
தமாஷா

தமாஷா

ரன்பீர் கபூர் - தீபிகா படுகோன் நடித்த தமாஷா இந்திப் படமும் பத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் சென்னையில் வெளியாகியுள்ளது.


English summary
Today Friday there are 3 straight Tamil films releasing around the state. Santhanam's Vaaliba Raaja has been postponed for unknown reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil