»   »  பரபரப்பாகிப் போன 'இது நம்ம ஆளு'.. எடுபடாமல் போன குட்டி பட்ஜெட் படங்கள்!

பரபரப்பாகிப் போன 'இது நம்ம ஆளு'.. எடுபடாமல் போன குட்டி பட்ஜெட் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 சிறு பட்ஜெட் படங்கள் இன்று ஒரே நேரத்தில் வெளியானாலும் கூட, இது நம்ம ஆளு படத்துக்கு முன்னால் அவை பெரிதும் எடுபடவில்லை.

தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஜெனிபர் கருப்பையா, சுட்ட பழம் சுடாத பழம், மீரா ஜாக்கிரதை, உரியடி போன்ற சிறு பட்ஜெட் படங்கள் இன்று வெளியாகின.


இப்படங்களுடன் சேர்ந்து இது நம்ம ஆளு என்ற பெரிய பட்ஜெட் படமும் ஆங்கிரி பேர்ட்ஸ், நிழல் யுத்தம் போன்ற ஹாலிவுட் படங்களும் வெளியாகின.


காதல்+ திகில்

காதல்+ திகில்

‘ஜெனிபர் கருப்பையா,‘உரியடி' என 2 படங்களும் காதல் மற்றும் காதலுக்கு உதவும் நண்பர்களை மையமாகக் கொண்டவை. சுட்ட பழம் சுடாத பழம் குழந்தைக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. திகில் கதையான மீரா ஜாக்கிரதையில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார்.


மீரா ஜாக்கிரதை

மீரா ஜாக்கிரதை

நடிக்க வந்த புதிதில் பாபி சிம்ஹா நடித்த மீரா ஜாக்கிரதை படம் இன்று வெளியாகி இருக்கிறது. மற்ற படங்களை ஒப்பிடும்போது இப்படத்திற்கு பாபியால் இலவச விளம்பரம் கிடைத்துள்ளது. ஆமாம் தான் இப்படத்தில் நடிக்கவேயில்லை என்று பாபி சிம்ஹா புகார் மேல் புகார் கொடுக்க அதுவே இப்படத்துக்கு நல்லதொரு விளம்பரமாக அமைந்து விட்டது. படத்தைப் பார்க்கத்தான் ஆளில்லை.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

இப்போதெல்லாம் பெரிய படம் , சிறிய படம் என்று ரசிகர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை. படம் நன்றாக இருந்தால் சமூக வலைதளங்களில் அப்படத்தில் தங்களைக் கவர்ந்த அம்சங்களைக் குறிப்பிட்டு பாராட்டி விடுகின்றனர். அந்த வகையில் 3 வருடங்கள் கழித்து இன்று வெளியாகியிருக்கும் இது நம்ம ஆளு படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


ஆங்கிரி பேர்ட்ஸ்

ஆங்கிரி பேர்ட்ஸ்

இது நம்ம ஆளு படத்தைத் தவிர மற்ற சிறு பட்ஜெட் படங்களை சமூக வலைதளங்களில் கூட ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. அதே நேரம் ஹாலிவுட் படமான ஆங்கிரி பேர்ட்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


English summary
Today 4 small-budget films Releasing Simultaneously.But fans did not welcome these Movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil