»   »  இன்று பாகுபலி பிரமாண்ட ரிலீஸ்.. முதல் காட்சிக்கு அலைமோதிய கூட்டம்... ஒரு வாரத்துக்கு டிக்கெட் லேது!

இன்று பாகுபலி பிரமாண்ட ரிலீஸ்.. முதல் காட்சிக்கு அலைமோதிய கூட்டம்... ஒரு வாரத்துக்கு டிக்கெட் லேது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக இன்று அதிகாலையிலேயே பாகுபலி படம் வெளியாகிவிட்டது. இதுவரை இல்லாத பெரும் வரவேற்புக்கிடையில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.

Select City
Buy Baahubali 2: The Conclusion (Hindi) (U/A) Tickets

மக்கள் அதிகாலையிலிருந்தே பெரும் வரிசையில் காத்திருந்து படம் பார்க்கச் சென்றனர். நான் சொல்லும் காட்சிகளெல்லாம் ஆந்திராவிலோ தெலங்கானாவிலோ நடந்ததல்ல.. இங்கே தலைநகர் சென்னையில் நடந்தது!


தமிழ்ப் பதிப்பு 550 அரங்கிலும், தெலுங்குப் பதிப்பு 50 அரங்குகளிலும் தமிழகத்தில் வெளியாகியுள்ளன.


ஒரு வாரம் டிக்கெட் இல்லை

ஒரு வாரம் டிக்கெட் இல்லை

சத்யம் குழும அரங்குகளில் அடுத்த வாரம் வரைக்கும் டிக்கெட் இல்லை என்பதை நிலைமை. அடுத்த வாரம் கூட முன் வரிசை டிக்கெட்டுகள் மட்டும்தான் இப்போதைக்கு கிடைக்கின்றன.


மாயாஜாலில் 68 காட்சிகள்

மாயாஜாலில் 68 காட்சிகள்

மாயாஜாலில் நாளொன்றுக்கு 68 காட்சிகள் பாகுபலி திரையிடப்படுகிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த 68 காட்சிகளில் 46 காட்சிகள் தெலுங்குப் பதிப்புக்கு. மீதி 18 காட்சிகள்தான் தமிழுக்கு!


5 மணிக்கு முதல் காட்சி

5 மணிக்கு முதல் காட்சி

அதிகாலை 5 மணிக்கெல்லாம் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. முதல் காட்சிக்கு கூட்டம் அலைமோதியது. ரஜினி படங்களுக்கு மட்டுமே இப்படி ஒரு கூட்டம் வரவேற்பைப் பார்க்க முடியும் தமிழகத்தில்.


உலகெங்கும்

உலகெங்கும்

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மட்டுமில்லாமல், இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே போன்ற வரவேற்பு பாகுபலிக்கு கிடைத்துள்ளது. தென்னிந்தியப் படம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது இதுவே முதல்முறை. இந்தி பெல்ட் என வர்ணிக்கப்படும் வட இந்தியாவின் 5 மாநிலங்களில் மட்டும் 700-க்கும் அதிகமான அரங்குகளில் பாகுபலியை வெளியிட்டுள்ளனர்.


மகிழ்ச்சியில் ராஜமவுலி

மகிழ்ச்சியில் ராஜமவுலி

பாகுபலி தமிழ்ப் பதிப்புக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதை மிக ஆர்வத்துடன் கவனித்து வந்த ராஜமவுலிக்கு, இன்றைய நிலவரம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.


முதல் காட்சி முடிந்து, ரசிகர்களின் கருத்துகள் வர ஆரம்பித்துவிட்டன. இனி அவற்றைப் பார்ப்போம்.English summary
The much awaited Bahubali has arrived in theaters and the people thronged to watch the movie first day first show all over Tamil Nadu.
Please Wait while comments are loading...