இன்று பீஸ்ட் அப்டேட்...விஜய் ஃபேன்ஸ் ரெடியா?....சிறப்பான தரமான சம்பவம் காத்திருக்கு

சென்னை : பீஸ்ட் அப்டேட் இன்று வருவதாக டைரக்டர் நெல்சன் திலீப்குமாரே சொல்லி விட்டதால், ட்விட்டரை அலற விட்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். என்ன அப்டேட் வர போகுது, எப்போ வர போகுது என தெரிந்து கொள்ள செம ஆர்வமாக உள்ளனர்.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட் எப்போது வரும், டீசர் எப்போது வரும், டிரைலர் எப்போது என விடாமல் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால் எந்த தகவலும் வெளி வராததால் விஜய் ரசிகர்கள் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்கள்.

எங்களுக்கு பீஸ்ட் டீசர் வேணும்

எங்களுக்கு பீஸ்ட் டீசர் வேணும்

இந்நிலையில் நேற்று பீஸ்ட் டிரைலர் பற்றிய அறிவிப்பு வெளி வர உள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் அது பற்றி சன் பிக்சர்ஸ் இது வரை வாய் திறக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் விஜய் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் பீஸ்ட் அன்சீன் ஸ்டில் ஒன்றை மட்டும் வெளியிட்டார்கள். அதற்கு பிறகு எதுவும் சொல்லாததால் கடுப்பாகி WeWantBeastTeaser என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, தொடர்ந்து கருத்து பதிவிட்டு வந்தனர்.

நெல்சன் சொன்ன ஒரு வார்த்தை

நெல்சன் சொன்ன ஒரு வார்த்தை

சன் பிக்சர்ஸ் எதுவும் சொல்லாத நிலையில், டைரக்டர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை என்று மட்டும் போஸ்ட் போட்டார். இது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தாலும், வெறும் நாளை என்று மட்டும் போட்டுள்ளார். நாளை டீசர் அல்லது டிரைலர் ஏதாவது வெளியிட போகிறார்களா இல்லை அது பற்றிய அறிவிப்பு மட்டும் வர போகிறதா என கேட்டு குழம்பி வருகின்றனர்.

என்னப்பா பண்ணுறீங்க

என்னப்பா பண்ணுறீங்க

டீசர், டிரைலர் மட்டுமல்ல பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல் தவிர மூன்றாவதாக மற்றொரு பாடலும் உள்ளதாம். இந்த பாடல் க்ளைமாக்சில் இடம்பெற போகிறதாம். அதனால் இந்த பாடல் பற்றிய அறிவிப்பாக கூட இருக்குமோ என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். படம் ரிலீசாவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ளது. ஆனால் இதுவரை டீசர், மோஷன் போஸ்டர், க்ளிம்ஸ் என எதுவும் வெளியிடவில்லையே என கேட்டு பொங்கி வருகிறார்கள்.

Recommended Video

இது Beast vs KGF இல்ல.. Beast and KGF.. டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் Yash பேச்சு
தரமான சம்பவம் இருக்கு இன்னைக்கு

தரமான சம்பவம் இருக்கு இன்னைக்கு

எது எப்படியோ நெல்சன், இன்று ஏதோ அறிவிப்பு வர போவதாக சொல்லி இருப்பதால் இன்று சிறப்பான, தரமான சம்பவம் ஒன்று காத்திருக்கிறது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. இதனால் BeastUpdate, BeastTrailer,BeastTeaser போன்ற ஹேஷ்டேக்கள் தொடர்ந்து ட்விட்டரில் டிரெண்டிங்கில் டாப்பில் இருந்து வருகின்றன. இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் அப்டேட் வர உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X