நீ பிரச்சனையை கிளப்பவே இருக்கியா... பிரியங்காவை நேருக்கு நேராக கேட்கும் அண்ணாச்சி
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தை அடைந்துள்ளது. கடந்த நான்கு வாரங்களில் பல குழப்பங்கள், சண்டைகள், மோதல்கள் நடைபெற்றுள்ளன. 18 போட்டியாளர்கள் வந்த நிலையில், தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
இதுவரை நமீதா மாரிமுத்து மருத்துவ காரணங்களாலும், நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு ஆகியோர் எலிமினேஷன் மூலமும் வெளியேற்றப்பட்டுள்ளனர். வரும் வாரத்தில் வெளியேற போகிறவரை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று நடைபெற உள்ளது.

பிரச்சனையை சந்தித்த இசைவாணி
கடந்த வாரம் நெருப்பு ஆளுமைக்கான வாரம் என பிக்பாஸ் அறிவித்தார். இதனால் நெருப்பு காயினை வைத்திருக்கும் இசைவாணிக்கு வீட்டை அதிகாரம் செய்யும் பவர் வழங்கப்பட்டது. இதனால் இசைவாணிக்கு வீட்டில் உள்ள பலருடன் மோதல், கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த வாரம் நிரூப்பின் ஆளுமை
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 29 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில், இந்த வாரம் நிலத்தின் ஆளுமைக்கான வாரம் என பிக்பாஸ் அறிவிக்கிறார். நிலத்தின் காயினை வைத்துள்ள நிரூப்பிற்கு இந்த வாரம் வீட்டை ஆளுமை செய்யும் பவர் வழங்கப்படுகிறது. அதோடு, நிரூப் தனக்கு உதவியாக பெண் போட்டியாளர் ஒருவரை வைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நிரூப், அக்ஷராவை தேர்வு செய்கிறார்.

நிரூப் - அக்ஷரா மோதல்
ஆனால் நிரூப்புடன் நேற்று ஏற்கனவே அக்ஷரா சண்டையிட்டதால், நிரூப்பிற்கு உதவியாளராக இருக்க மறுப்பு சொல்கிறார். அதற்கு தண்டனையாக தன்னை வீட்டை விட்டு வெளியேற்றினாலும் பரவாயில்லை என்கிறார். அக்ஷராவை வெளியேற்றும் படி தான் பல நாட்களாக தான் சொல்லிக் கொண்டிருப்பதாக சொல்கிறார் நிரூப். இதனை ராஜு உள்ளிட்டோர் கலாய்க்கிறார்கள்.

பிரியங்கா மீது வருத்தம்
முதல் ப்ரோமோவில் நிரூப் - அக்ஷரா மோதல் காட்டப்படும் நிலையில், இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா - இமான் அண்ணாச்சி ஆகியோர் மோதிக் கொள்கிறார்கள். இந்த ப்ரோமோவில் அண்ணாச்சி, ஏய்...நீ எதுக்குடா உள்ள போற அப்படின்னு பேசக் கூடாதுல்ல. எனக்கு பிரியங்கா மீது கொஞ்சம் வருத்தம் என்கிறார்.

பிரியங்காவிற்காக பேசும் வருண்
அப்போது சிபி, நான் போனேன் தண்டனை அனுபவித்தேன். நீங்களும் வேண்டுமானால் போய் கொள்ளுங்கள். தண்டனை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்கிறார். அதை நான் வாய்ஸ் அவுட் பண்ணுவதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கிறார் பிரியங்கா. வருண், சிபியிடம் சென்று, அவர் வாய்ஸ்அவுட் பண்ண வேண்டாம் என சொல்கிறார். அது தான் தப்பு என்கிறார்.

பிரச்சனையை கிளப்புறியா
நான் இப்படி பண்ணுங்க என சொல்லவில்லை. தெரியாமல் போய் விட்டேன். அதை ஏன் ரூல் ப்ரேக் என எடுக்கிறீர்கள் என்று தான் கேட்கிறேன் என்கிறார் அண்ணாச்சி. அப்போது பிரியங்கா கோபமாக முகத்தை வைத்த படி, ரூல் ப்ரேக் தான் என்கிறார். அதற்கு அண்ணாச்சி, இப்படி பேசுறது தான்...நீ ஏதாவது பிரச்சனையை கிளப்பனும்னே இருக்கியா. எனக்கு ஒன்னும் புரியல என சிரித்தபடி கேட்கிறார். அதற்கு ச்சீச்சீ என மறுக்கிறார் பிரியங்கா.

பாவம் பிரியங்கா
இதை பார்த்த ரசிகர்கள், பிரியங்காவை இப்படி பார்க்கவே பாவமா இருக்கு. பாவம் பிரியங்கா அது பாட்டுக்கு இருக்கு. எல்லோரும் ஏம்ப்பா வம்பு பண்ணுறீங்க. அடுத்த சம்பவத்துக்கு விஜய் டிவி பிளான் பண்ணுறாங்க. இப்டியே பேசுனா எப்படி...அடிச்சுக்காட்டு யாரு பெரிசுன்னு. இந்த வாரம் அண்ணாச்சி வெர்சஸ் பிரியங்காவா என பலவகைகளிலும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











