For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கேப்டன் விஜயகாந்துக்கு இன்று 68வது பிறந்த நாள்... கோலாகலமாக கொண்டாடி வரும் ரசிகர்கள்!

  |

  சென்னை : சிவந்த கண்கள், உயர்ந்த புருவம், மிடுக்கான நடை, கர்ஜிக்கும் குரல் என தமிழ் சினிமாவை தனது தனித்துவமான நடிப்பின் மூலம் மிரட்டி வந்தவர் நடிகர் விஜயகாந்த்.

  அரசியல் தொடங்கும் முன்னர் பிடித்தவர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன் - கமல்

  நடிப்பால் மட்டுமல்லாமல் குணத்தாலும் திரைப் பிரபலங்களையும் மக்களையும் அன்பால் கட்டிப் போட்டு வரும் இவர் இன்று வரை தன்னிகரற்ற புரட்சிக் கலைஞராக விளங்கி வருகிறார்.

  இவ்வாறு மக்களின் பெரும் அன்புக்கு சொந்தக்காரரான கேப்டன் விஜயகாந்த் ஆகஸ்டு 25 ஆம் தேதியான இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் திருவிழா களம் போல குதூகலமாக கொண்டாடியவாறு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து அதிரவைத்து வருகின்றனர்.

  நடிகர் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்.. ஊமை விழிகள் டு ரமணா.. அசர வைக்கும் அவரது டாப் 5 படங்கள்! நடிகர் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்.. ஊமை விழிகள் டு ரமணா.. அசர வைக்கும் அவரது டாப் 5 படங்கள்!

  ஒரு பொருட்டே அல்ல

  ஒரு பொருட்டே அல்ல

  பொதுவாக சினிமாக்களில் ஹீரோ என்றால் பளபளப்பான சிவந்த தோற்றமும், ஆறடி உயரமும் இருக்கவேண்டுமென ஒரு சிலரால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் அதை எல்லாம் உடைத்துக் கொண்டு நடிக்கத் தெரிந்தால் மட்டும் போதும் தோற்றம் மற்றும் நிறம் ஒரு பொருட்டே அல்ல என நிரூபித்த ஒரு சில நடிகர்களில் கேப்டன் விஜயகாந்த் மிக முக்கியமானவர்.

  முதல் வெற்றிப்படமாக

  முதல் வெற்றிப்படமாக

  வீரமிக்க மதுரை மண்ணிலே பிறந்த விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ் அழகர்சுவாமி. 1979ஆம் ஆண்டு "இனிக்கும் இளமை" திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய விஜயகாந்துக்கு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. மேலும் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முதல் வெற்றிப்படமாக அமைந்த சட்டம் ஒரு இருட்டறை தமிழ்நாட்டில் சக்கை போடு போட்டு வெற்றி நடை போட்ட நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

  ட்ரெண்ட் செட்டராக

  ட்ரெண்ட் செட்டராக

  வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதிலும் விஜயகாந்தை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. அந்த வகையில் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் படித்த மாணவர்களின் இயக்கத்தில் நடிக்க பல ஹீரோக்களும் தயங்கிய நிலையில், விஜயகாந்த் மாணவர்களின் திறமையை மட்டும் பார்த்து அந்த திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார். ஊமை விழிகள் என பெயரிடப்பட்ட அந்த திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று 1980களில் ட்ரெண்ட் செட்டராக மாறியது.

  மனக்கணக்கு

  மனக்கணக்கு

  எனினும் இதுவரை உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து "மனக்கணக்கு" என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே விஜயகாந்த் இணைந்து நடித்துள்ளார். வயதான தோற்றம், மிரட்டும் போலீஸ் அதிகாரி, வெகுளியான கிராமத்து ஆள் என எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் விஜயகாந்த் அதில் முழு ஈடுபாட்டுடன் கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுப்பதில் வல்லவர் ஆவார்.

  நானே ராஜா நானே மந்திரி

  நானே ராஜா நானே மந்திரி

  வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, நானே ராஜா நானே மந்திரி, பூந்தோட்ட காவல்காரன் மற்றும் செந்தூரப்பூவே உள்ளிட்ட பல படங்களில் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜயகாந்த் அதற்காக பல்வேறு விருதுகளையும் வென்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

  தேசப்பற்றை ஊட்டும்

  தேசப்பற்றை ஊட்டும்

  மேலும் போலீஸ் அதிகாரியாகவும், நாட்டைக் காப்பாற்றும் வீரராகவும் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கையை தொட இன்றுவரை யாராலும் முடியவில்லை. அவ்வாறு அதிரடியான சண்டை காட்சிகளுடன் தேசப்பற்றை ஊட்டும் வகையில் இவர் நடித்த கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வல்லரசு, நரசிம்மா, வாஞ்சிநாதன், சேதுபதி ஐபிஎஸ் உள்ளிட்ட பல படங்கள் இவரின் துடிப்பான நடிப்பின் மூலம் தேசப்பற்றை மக்கள் மத்தியில் விதைத்ததில் விஜயகாந்துக்கு பெரும்பங்குள்ளது.

  இன்றுவரை கம்பீரமாக

  இன்றுவரை கம்பீரமாக

  விஜயகாந்த் இயக்குனர் விக்ரமனுடன் இணைந்து நடித்த "வானத்தைப்போல" திரைப்படம் தமிழ் மக்களால் விரும்பி பார்க்கப்படும் ஆகச்சிறந்த குடும்பத் திரைப்படமாக இன்றுவரை விளங்கி வரும் நிலையில், இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளையும் விருதுகளையும் வென்று இன்றுவரை கம்பீரமாக நிற்கிறது. வானத்தைப்போல திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற நிலையில் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 250 நாட்களை தாண்டி வெற்றிகரமாக திரையில் ஓடி சாதனை புரிந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.

  வல்லரசு

  வல்லரசு

  சிறந்த நடிகராக இன்று வரை தமிழ் சினிமாவில் போற்றப்பட்டு வரும் கேப்டன் விஜயகாந்த் அதேசமயம் தயாரிப்பாளராகவும் வல்லரசு, நரசிம்மா, தென்னவன், எங்கள் அண்ணா, சுதேசி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளார்.

  போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது

  போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது

  தமிழ் சினிமாவில் பெரும்பங்காற்றி உள்ள கேப்டன் விஜயகாந்த் தற்பொழுது அரசியலிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் இன்று விஜயகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருவதையொட்டி, மதுரையில் இவரின் தொண்டர்கள் சார்பில் பல்வேறு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.

  ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை

  ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை

  ஏழைகளுக்கு என்றுமே உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை கொண்ட கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்தநாள் அன்று ஆண்டுதோறும் ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தவறாமல் செய்து வருகிறார்.

  68-வது பிறந்தநாள்

  68-வது பிறந்தநாள்

  திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாகவும், சிறந்த மனிதராகவும் இருந்து வரும் கேப்டன் விஜயகாந்த் ஆகஸ்ட் 25 ஆம் தேதியான இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் திருவிழா களம் போல குதூகலமாக கொண்டாடியவாறு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து அதிரவைத்து வருகின்றனர்.

  English summary
  Celebrities and Fans wishes Captain Vijayakanth 68th birthday Today
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X