»   »  "வஞ்சிக்கோட்டை வாலிபன்" நம்மை விட்டுப் போய் ... 11 வருடங்கள் ஓடி விட்டன!

"வஞ்சிக்கோட்டை வாலிபன்" நம்மை விட்டுப் போய் ... 11 வருடங்கள் ஓடி விட்டன!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகை ஆண்டு வந்த இரு ஜாம்பவான்கள் சிவாஜி கணேசன் மற்றும் எம். ஜி. ஆர். இதில் தனது திறமையால் இந்த இருவருக்கும் நடுவே புகுந்து மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஜெமினி கணேசன்.

ராமஸ்வாமி கணேசன் என்னும் தன் பெயரை திரைதுறைக்காக ஜெமினி கணேசன் என்னும் பெயர் மாற்றம் செய்து 'மிஸ் மாலினி' என்ற படத்தின் மூலம் சிறு வேடத்தில் அறிமுகமானார்.

மனம்போல் மாங்கல்யம் என்ற படத்தில் முதல் முறையாக முழு நீள கதாநாயகனாக தன் பயணத்தை துவங்கினார். முதல் முறையாக 1970-ல் வெளிவந்த 'காவிய தலைவி' என்ற படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

காதல் மன்னன்

காதல் மன்னன்

தமிழ் சினிமாவில் 1950 - 60 களில், பல தரப்பட்ட கதைக்களங்களை கொண்டு வெளிவந்த படங்களில், பெரும்பாலான காதல் திரைப்படங்களில் ஜெமினி கணேசன் தான் கதாநாயகன். இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்களிலும் கதாநாயகியை துரத்தித் துரத்தி காதல் வயப்பட செய்வார். இதனாலேயே இவருக்கு 'காதல் மன்னன்' என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

சபாஷ் சரியான போட்டி :

சபாஷ் சரியான போட்டி :

இன்று யாராவது இரண்டு பேருக்கு சண்டை வந்தால் நாம் சொல்லும் வார்த்தை சபாஷ் சரியான போட்டி என்று தான். அந்த வசனம் இடம் பெற்ற படம் வஞ்சிக்கோட்டை வாலிபன். அதில் நம் "காதல் மன்னனை" அடைய இரண்டு பெண்கள் போட்டி போடுவர்.

காதல் மட்டுமல்ல :

காதல் மட்டுமல்ல :

ஒன்று இவர் காதலிப்பார்.. அல்லது பலர் இவரைக் காதலிப்பார்கள். இதையும் தாண்டி இவர் ஒரு நல்ல கணவனாகவும், அண்ணனாகவும், நண்பராகவும் நடித்த படங்களும் ஏராளம் ஏராளம்.. எல்லாமே ஹிட்டோ ஹிட்டும் கூட.

150 படங்கள்:

150 படங்கள்:

ஜெமினி கணேசன் சுமார் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் தமிழ் மட்டுமல்ல. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளும் அடங்கும்.

விருதுகள் :

விருதுகள் :

இவர் தன் வாழ்நாளில் பல விருதுகளை பெற்றுள்ளார். 1970-ம் ஆண்டு காவிய தலைவி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது, 1971-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது, 1974-ம் ஆண்டு நான் அவனில்லை திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகர் விருது, 1993-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது, எம் ஜி ஆர் தங்க பதக்கம், திரையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் கலைமாமணி விருது என பல உயரிய விருதுகளை தன் வசம் கொண்டவர் நம் ஜெமினி கணேசன்.

அரசியலுக்கு வராதவர்:

அரசியலுக்கு வராதவர்:

அந்த காலத்தில் முன்னனி நடிகர்களாக விளங்கியவர்களில் எம் ஜி ஆர் அரசியலில் ஈடுபட்டார். ஏன் சிவாஜி கணேசன் கூட அரசியல் பக்கம் வந்து போனவர்தான். ஆனால், ஜெமினி கணேசன் அரசியல் பக்கம் கூட தலைக்காட்டவில்லை. இறுதி வரை நடிப்பிலேயே தன் வாழ்நாளினை கழித்து முடித்தவர் இந்த "அவ்வை சண்முகி".

நிறைவேறாமல் போன கனவு:

நிறைவேறாமல் போன கனவு:

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்த ஜெமினியின் ஆரம்ப கால கனவு டாக்டராக வேண்டும் என்பது. ஆனால் அது முடியாமல் போய் விட்டது. படிப்புக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டதால், குடும்ப பொறுப்பினை கையில் எடுத்துகொண்டு தான் படித்த பட்டப்படிப்பினை வைத்துக்கொண்டு இந்திய விமான துறையில் வேலைக்கு சேர முயன்றார்.

நடிகரானார்:

நடிகரானார்:

ஆனால், அது கைகூடவில்லை என்றதும், ஆசிரியராக பணியாற்ற தான் படித்த கல்லூரிக்கே வந்தார். இறுதியில் அனைத்தும் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்தே இவர் ஜெமினி ஸ்டுடியோவில் வந்து சேர்ந்தார். அ்ப்படியே நடிகராகி விட்டார்.

47 டூ 88 வரை

47 டூ 88 வரை

1947-ம் ஆண்டு தன் நடிப்பினை தொடங்கிய ஜெமினி கணேசன்1988ம் ஆண்டு வரை இடைவிடாமல் நடித்தார். அதன் பின்னர் கேப் விழுந்தது. பின்னர் மீண்டும் நடிப்புக்குத் திரும்பினார். கடைசியாக இவர் நடித்த படம் ஜெமினி. 2005ம் ஆண்டு காதல் மன்னன் மறைந்தார்...

வாழ்நாளின் இறுதிவரை மனதை இளமையாக வைத்ததிருந்த வஞ்சிகோட்டை வாலிபனுக்கு இன்று 11-ம் ஆண்டு நினைவஞ்சலி.. வி லவ் யூ ஜெமினி சார்!

English summary
In 1950's the Top most Tamil actor was Gemini Ganesan. Who Called By a nick name Kadhal Mannan. Who acted more than 150 movies in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi. who acted most film in Tamil cinema. Today his 11th Death Anniversary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil