»   »  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜூலி வெளியேறுகிறார்... வைரலாகும் படம்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜூலி வெளியேறுகிறார்... வைரலாகும் படம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மட்டுமே உண்மையை பேசி வரும் ஜூலியானா தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது போன்ற ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டுக்காக போராடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜூலியானா, செவிலியரான இவர், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஏற்ற இறக்கத்துடன் கோஷமிட்டதால் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது அவரும் ஒரு போட்டியாளர் என்று தெரிந்தபோது தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 Today Julie is going to evict: A photo goes viral

மேலும் ஜல்லிக்கட்டு பிரச்சினை குறித்து கேள்விகளையும், காயத்ரி, ஆர்த்தியின் தேவையில்லாத சீண்டுதல்களையும் ஜூலி சந்தித்ததால் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வந்தது. இந்நிலையில் கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று ஸ்ரீயிடம் கவலைப்பட்டது, ஒவ்வொருவரிடமும் மாறி மாறி பொய் பேசுவது, புறம் பேசுவது ஆகிய செயல்பாடுகளை பார்த்த மக்களுக்கு ஜூலி மீது வெறுப்பு ஏற்பட்டது.

அதுவும் ஓவியா விஷயத்தில் விளையாடிய விளையாட்டையும், அவரது போலித்தனத்தை ஆதாரத்துடன் தோலுத்துரித்து கமல் காட்டியதையும் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியிருப்பர். அந்தளவுக்கு வெறுப்பை சம்பாதித்தார் ஜூலி.

இந்த வார எவிக்ஷனில் ஜூலி, ஓவியா, வையாபுரி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது. வழக்கம்போல் ரசிகர்களின் பேராதரவுடன் கடந்த 4 வாரங்களை போல் ஓவியாதான் வாக்குகளை அள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மன உளைச்சல் காரணமாக ஓவியா நேற்று வெளியேறிவிட்டார். இது ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும், கட்டிப்புடிச்சியே கடுப்பேற்றும் ஜூலியானா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவது போன்ற புகைப்படத்தை கண்ட மக்கள் அப்பாடா பிக்பாஸ் வீடு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று பெருமூச்சு விடுகின்றனர். ஜூலியின் வெளியேற்றம் குறித்து இன்று இரவு நிகழ்ச்சியில் தெரியும்.

English summary
Juliana is evicted from Bigg boss house? A photo goes viral in social medias.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil