twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்கும் ஒரே நாளில் அமைந்த பிறந்த நாள்!

    By Shankar
    |

    சென்னை: கவியரசர் கண்ணதாசனுக்கும் அவரை உயிராக நேசிக்கும் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனுக்கும் ஒரே நாளில் (ஜூன் 24) பிறந்த நாள் அமைந்துள்ளது.

    தமிழ் திரையுலகில் அமரத்துவம் வாய்ந்த ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி சகாப்தமாய் திகழ்பவர் கவியரசர் கண்ணதாசன். இன்றும் அவரது பாடல்கள்தான் தமிழர்களின் மனதை ஆளும் காவியப் பாடல்களாகத் திகழ்கின்றன.

    1927 ல்...

    1927 ல்...

    கவியரசர் பிறந்தது 1927-ம் ஆண்டு செட்டி நாட்டில் உள்ள சிறுகூடல்பட்டியில். பிறந்த தேதி ஜூன் 24.

    1928-ல்..

    1928-ல்..

    மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் பிறந்தது இதே ஜூன் 24-ம் தேதி பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில். எம்எஸ்வியை விட ஒரு வயது மூத்தவர் கவியரசர்.

    இரு மேதைகளும்...

    இரு மேதைகளும்...

    ஒரே தேதியில் அவதரித்த இந்த இரு மேதைகளும் தமிழ் சினிமா உலகை ஆண்ட மன்னர்களாகத் திகழ்ந்தனர் 50, 60 மற்றும் எழுதுபதுகளில். காலத்தால் அழியாத காவிய கானங்களைத் தந்தனர் இருவரும்.

    எம்ஜிஆர் - சிவாஜி

    எம்ஜிஆர் - சிவாஜி

    தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு, எம்எஸ்வி இசையில் கண்ணதாசன் எழுதிய கொள்கைப் பாடல்கள் பெரும் உதவியாய் திகழ்ந்தன. அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ்க் குடும்பத்தில் ஒருவராக மாற்றின கண்ணதாசன் - விஸ்வநாதன் இணையில் வந்த பாடல்கள்.

    புகழ் பாடும் எம்எஸ்வி..

    புகழ் பாடும் எம்எஸ்வி..

    கவியரசர் கண்ணதாசன் 1981-ல் சிகாகோவில் மரணமடைந்தார். அவரது மரணம் எம்எஸ்விக்கு பெரும் துயராக அமைந்தது. தன் ஆருயிர் நண்பரின் இழப்பை அவரால் மறக்க முடியவில்லை. தான் செல்லும் இடங்களிலும், பாடும் மேடைகளிலும் கண்ணதாசனின் புகழைப் பாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டார். தான் நடித்த ஒரு படத்தில் கண்ணதாசனின் தீவிர ரசிகராக அவர் நடித்தது நினைவிருக்கலாம்.

    ஒரு நிகழ்வு

    ஒரு நிகழ்வு

    எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்குமிடையே நட்பில் விரிசல் விழுந்த நேரம்... அப்போது எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்த படம் உரிமைக்குரல். அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும். வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்ஜிஆருக்கு.

    வந்தார் கவிஞர்

    வந்தார் கவிஞர்

    உடனே எம்எஸ்வி, அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர் கவிஞரை அழைத்தார். கவிஞர் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும்.

    பகையை மறக்க வைத்த பாட்டு வரி...

    பகையை மறக்க வைத்த பாட்டு வரி...

    முதலில் பாடலை எம்ஜிஆரிடம் காட்டினார் எம்எஸ்வி. பாடலைப் படித்ததும் எம்ஜிஆர் முகத்தில் பரம திருப்தி. இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும் என்று சொல்லிக் கொண்டே எம்எஸ்வியைப் பார்க்க, 'ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்... நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்," என்றாராம்.

    இதுவே இருக்கட்டும்...

    இதுவே இருக்கட்டும்...

    நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்த சூழலுக்கு சரியா இருக்கும் என்று கூறி அனுமதித்தாராம். இது அன்றைக்குப் பெரிய விஷயம். காரணம் எம்ஜிஆர் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்எஸ்வியாகத்தான் இருக்கும் என்பார்கள். காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ்.

    எம்ஜிஆர் மயங்கிய அந்த பாடல் வரிகள்... "விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"

    English summary
    Today, June 24 is the birth date of two legends of Tamil Cinema Great poet Kannadasan and M S Viswanathan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X