அதிரடியாக குறைக்கப்பட்ட வலிமை நேரம்...எவ்வளவு தெரியுமா ?

சென்னை : அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதால் சலிப்படைய வைப்பதாக பலர் கூறியதை அடுத்து, வலிமை படத்தின் நேரம் அதிரடியாக குறைக்கப்பட்டு, இன்று முதல் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது.

அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு எதிராக விமர்சனங்கள் பல எழுந்தாலும், அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் வெளியான படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை வலிமை முறியடித்துள்ளது.

வசூல் சாதனை படைத்த வலிமை

வசூல் சாதனை படைத்த வலிமை

வலிமை படம் முதல் நாளே தமிழகத்தில் மட்டும் 35 கோடிகளை வசூல் செய்துள்ளது. பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலும் வலிமை படம் வசூலை குவித்து வருகிறது. தமிழகத்தை விட வெளிநாடுகளில் வலிமை படத்திற்கு வரவேற்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் உலக தரத்திலான ஸ்டன்ட் காட்சிகள், பல காட்சிகளில் அஜித் டூப்பே போடாமல் நடித்திருப்பது ஆகியன அதிகமானவர்களை கவர்ந்துள்ளது.

லென்த்தாக போன ரன்னிங் டைம்

லென்த்தாக போன ரன்னிங் டைம்

வலிமை படம் இரண்டு மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடியது. ரஜினியின் படையப்பா, சிவாஜி போன்ற படங்களும் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் கொண்டதாகவே இருந்துள்ளன. இருந்தாலும் வலிமை படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் மிக அதிகமுள்ளதால் ரன்னிங் டைம் அதிகமாக உள்ளது சலிப்படைய வைப்பதாக பலர் விமர்சன ரீதியாக குறையாக கூறி இருந்தனர். இதனால் படத்தில் சில காட்சிகளை நீக்கி, ரன்னிங் டைமை குறைக்க படக்குழு முடிவு செய்தது.

வலிமை நேரம் குறைப்பு

வலிமை நேரம் குறைப்பு

அதன்படி வலிமை படத்தில் 14 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டரை மணி நேரம் கொண்ட படமாக வலிமை படம் இன்று முதல் திரையிடப்பட்டு வருகிறது. செகண்ட் ஆஃப்பை விட ஃபஸ்ட் ஆஃப்பில் நிறைய காட்சிகளை குறைத்துள்ளனர். இது படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்டி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஓடிடி ரிலீசுக்கும் தயாராகிறதா

ஓடிடி ரிலீசுக்கும் தயாராகிறதா

வார இறுதி நாள் என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகம் வரும், ரிலீஸ் நாளை விட கூடுதல் வசூல் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக படக்குழு நம்புகின்றனர். இதற்கிடையில் வலிமை படம் ஓடிடி ரிலீசுக்கும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X