»   »  வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்.... ராஜா மந்திரி, மெட்ரோ முன் அம்மா கணக்கு எடுபடுமா?

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்.... ராஜா மந்திரி, மெட்ரோ முன் அம்மா கணக்கு எடுபடுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்ரோ, அம்மா கணக்கு, ராஜா மந்திரி என்று 3 புதிய படங்கள் இந்த வாரம் வெளியாகி இருக்கின்றன.

மெட்ரோ நகரங்களில் நடக்கும் கொள்ளை சம்பவங்களை வைத்து மெட்ரோ படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.


இதுபோல நகைச்சுவையை மையமாக வைத்து ராஜா மந்திரியும், செண்டிமெண்டை முன்னிறுத்தி அம்மா கணக்கு படமும் உருவாகியிருக்கிறது.


ராஜா மந்திரி, அம்மா கணக்கு இரண்டையும் பெண் இயக்குநர்கள் இயக்கியிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த 3 படங்களின் பலம், பலவீனம் குறித்து பார்க்கலாம்.


அம்மா கணக்கு

அம்மா கணக்கு

தனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் இயக்கியிருக்கும் படம் அம்மா கணக்கு. இதில் நடிகை அமலாபால் 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். குழந்தைகளை வளர்த்து ஆளாக்க பெற்றோர் படும் பாட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை அமைத்திருக்கின்றனர். இதுதவிர ரேவதி,சமுத்திரக்கனி நடிப்பு மற்றும் இசைஞானியின் இசை ஆகியவை இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளன.


தேசிய விருது

தேசிய விருது

தனுஷ் தயாரிக்கும் படங்கள் தொடர்ந்து தேசிய விருது பெறுவதால் இப்படமும் அந்த வரிசையில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. நடிகர் தனுஷும் இதில் நடித்த அமலாபாலுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஆரூடம் கூறியிருக்கிறார். அம்மா கணக்கில் தனுஷின் கணிப்பு பலிக்குமா?


மெட்ரோ

மெட்ரோ

சிரிஷ், பாபி சிம்ஹா நடிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது. 'ஆள்' புகழ் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருப்பது, பாபி சிம்ஹாவின் வில்லன் நடிப்பு ஆகியவை இப்படத்திற்கு பெரும்பலமாக மாறியிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட தணிக்கையில் இப்படம் பட்ட பாடே மெட்ரோவிற்கு நல்ல விளம்பரத்தை தேடிக் கொடுத்திருக்கிறது . ரசிகர்களும் இப்படத்திற்கு வரவேற்பு கொடுப்பார்களா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.


ராஜா மந்திரி

ராஜா மந்திரி

உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் காளி வெங்கட், கலையரசன் இணைந்து நடித்திருக்கும் படம் ராஜா மந்திரி. சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக இருந்த உஷா முதல் படத்தில் அதிகம் ரிஸ்க் எடுக்காமல் குடும்பக் கதையை கையிலெடுத்திருக்கிறார். நகைச்சுவை, காதல் என்ற ரீதியில் ராஜா மந்திரி வெளியாகியிருக்கிறது. சமீபகாலமாக நகைச்சுவைப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்த ராஜாவும், மந்திரியும் இணைவார்களா? என்பது ரசிகர்களின் கையில்தான் உள்ளது.


இது தவிர இண்டிபெண்டன்ஸ் டே, தி ஷாலோஸ் மற்றும் ப்ரீ ஸ்டேட் ஆப் ஜோன்ஸ் என 3 ஹாலிவுட் படங்களும் இன்று வெளியாகியுள்ளன.English summary
Today Released Movies Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil