twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்மர் ஸ்பெஷல் ஆரம்பம்... மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் இன்று ரிலீஸ்!

    By Shankar
    |

    சென்னை: தமிழ் சினிமா கோடை விடுமுறைக் கொண்டாட்ட மூடுக்குத் திரும்பியிருக்கிறது.

    சம்மர் ஸ்பெஷலாக எடுக்கப்பட்டு வந்த பெரிய படங்கள் இனி வாரந்தோறும் வெளியாகவிருக்கின்றன. கடந்த சில மாதங்களாக டல்லடித்துக் கிடந்த பாக்ஸ் ஆபீஸில், வசூல் மழை தொடங்கியிருக்கிறது.

    முதல் கட்டமாக இந்த வாரம் மொத்தம் 3 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

    ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்...

    ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்...

    இந்த வாரம் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என்ற புதிய படம் வெளியாகியுள்ளது. சிம்பு தேவன் இயக்கத்தில் அருள் நிதி நடித்துள்ள படம்.

    மான் கராத்தே

    மான் கராத்தே

    இன்று வெளியாகியுள்ள இன்னொரு முக்கியமான படம் மான் கராத்தே. சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம். பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறார்கள்.

    745 அரங்குகள்

    745 அரங்குகள்

    தமிழகத்தில் மட்டும் 352 அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே முதல் முறையாக அதிக அரங்குகளில் வெளியாகும் படம் இதுவே. உலகம் முழுவதும் சேர்த்து 745 திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.

    கூட்டம்

    கூட்டம்

    நவீன் - பியா நடித்துள்ள இந்தப் படம் ஆந்திர நக்சல்களின் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. எம் ஆர் ஜீவன் இயக்கியுள்ளார்.

    கேப்டன் அமெரிக்கா

    கேப்டன் அமெரிக்கா

    பிறமொழிப் படங்கள்தான் இந்த வாரம் அதிகம் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஹாலிவுட் படமான கேப்டன் அமெரிக்கா. தமிழில் எதற்கும் அஞ்சாதவன் என மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 150 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. பல நேரடி தமிழ்ப் படங்களுக்கு இத்தனை தியேட்டர்கள் கிடைப்பதே அரிது!

    மற்றவை

    மற்றவை

    வெற்றிப் பயணம் என்றொரு டப்பிங் படமும் வெளியாகியுள்ளது. இவை தவிர ஜல், மெய்ன் தேரா ஹீரோ ஆகிய இரு இந்திப் படங்களும், மோகன் பாபு நடித்த தெலுங்குப் படம் ரவுடியும் இன்று வெளியாகியுள்ளன.

    English summary
    Today, Friday there are 3 direct Tamil movies released as summer special.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X