இன்று 5 புதுப் படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா பாலாவின் நாச்சியார்?
Recommended Video

சென்னை: இந்த வாரம் வெள்ளிக்கிழமை (இன்று) பாலாவின் நாச்சியார் உள்பட 5 புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

நாச்சியார்
தாரை தப்பட்டைக்குப் பிறகு பாலா இயக்கத்தில் வெளியாகும் படம் நாச்சியார். இளையராஜா இசையமைத்துள்ளார். ஜோதிகா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து இதுவரை எந்த செய்தியையும் பாலா பகிர்ந்து கொள்ளவில்லை. அதுவே படத்துக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

நாகேஷ் திரையரங்கம்
நெடுஞ்சாலை ஆரி நடித்துள்ள ஹாரர் படம் இந்த நாகேஷ் திரையரங்கம். ஆஷ்னா சவேரி நாயகியாக நடித்துள்ளார். முகமது ஐசக் இயக்கியுள்ளார்.

மேல்நாட்டு மருமகன்
ராஜ்கமல், ஆன்ட்ரேன் நடித்துள்ள புதிய படம் மேல் நாட்டு மருமகன். கௌதம் கிருஷ்ணா இயக்கியுள்ளார். மனோ உதயகுமார் தயாரித்துள்ளார்.

வீரா
யாமிருக்க பயமேன் படம் தந்த குழுவினரின் அடுத்த படம் வீரா. கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன் நடித்துள்ள இந்தப் படத்தை ராஜாராமன் இயக்கியுளஅளார். எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். நாச்சியாருக்கு அடுத்து அதிக அரங்குகள் வீரா படத்துக்குக் கிடைத்துள்ளன.

மனுசனா நீ
அறிமுக இயக்குநர் கஸாலி இயக்கி நடித்துள்ள படம் மனுசனா நீ. ஹெச் 3 சினிமாஸ் தயாரித்துள்ளது. மெடிக்கல் க்ரைம் தொடர்பான இந்தப் படத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் நடித்துள்ளனர். 70 அரங்குகளில் இன்று வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











