»   »  அண்ணாதுரை vs திருட்டுப்பயலே vs கனமழை... ஜெயிக்கப்போவது யார்?

அண்ணாதுரை vs திருட்டுப்பயலே vs கனமழை... ஜெயிக்கப்போவது யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் சினிமாவில் புது ரிலீஸுக்கு ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு புது பட ரிலீஸ் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வாரத்துக்கு குறைந்தது இரண்டு பெரிய படங்களாவது ரிலீஸ் ஆகிவிடுகின்றன.

அந்த வகையில் இந்த வார கோட்டாவில் விஜய் ஆண்டனியின் அண்ணாதுரையும், சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலாபால் நடிப்பில் வெளியாகும் திருட்டுப்பயலே 2வும் சேர்ந்துள்ளன.

அண்ணாதுரை

அண்ணாதுரை

நான், சலீம், பிச்சைக்காரன் என்று மள மளவென்று ஏறிய விஜய் ஆண்டனியின் மார்க்கெட் அதே வேகத்தில் சைத்தான், எமன் என்று லைட்டாக சரிந்திருக்கிறது. இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் கூட பெரிதாக கையை கடிக்கவும் இல்லை. ஆனால் விஜய் ஆண்டனி தன் மார்க்கெட்டை அண்ணாதுரை மூலம் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மாஸ் - கமர்ஷியல்

மாஸ் - கமர்ஷியல்

அதற்கு தகுந்தாற்போல் அண்ணாதுரை மாஸ் கமர்ஷியல் படமாக இருக்கும் என்கிறார்கள். இதற்கு முன்பே சைத்தான், எமன் படங்களில் விஜய் ஆண்டனி இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தின் இரட்டை வேடம் அவருக்கு ஸ்பெஷல். அண்ணன், தம்பியாக நடித்திருக்கிறார். 2010 மற்றும் 2017 என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. ஒருவருடைய இறப்புக்கு இன்னொருவர் பழி வாங்கும் கதை என்று தகவல் வருகிறது. ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனியின் நடிப்பு + இசை + படத்தொகுப்பில் வரும் அண்ணாதுரை ரசிகர்களை பொறுத்தவரை விஜய் ஆண்டனியின் ஒன் மேன் ஷோ தான்.

திருட்டுப்பயலே 2

திருட்டுப்பயலே 2

அமலாபாலைத் தான் அதிகமாக நம்பியிருக்கிறது திருட்டுப்பயலே குழு எனலாம். பாபி சிம்ஹா, பிரசன்னா இருவருக்குமே பெரிய மார்க்கெட் இல்லை. சுசி கணேசன் 2009ல் தமிழில் கந்தசாமி படத்தை இயக்கினார். அதன் பின் திருட்டுப்பயலே ரீமேக்குக்காக ஹிந்தி சென்றவர் திருட்டுப்பயலே 2 மூலம் திரும்பியிருக்கிறார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் அதிகம் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட திருட்டுப்பயலே படம் பெரிய ஹிட் அடித்தது. அந்த டைட்டிலை மட்டும் எடுத்துக்கொண்டு அதே போன்ற செக்ஸ் க்ரைம் அல்லாத இன்னொரு வகை த்ரில்லரை எடுத்திருக்கிறார் சுசி கணேசன். டீசர் மற்றும் ட்ரெய்லரில் இருந்த கிளுகிளுப்பு படத்தில் இருக்காது என்கிறார்கள். ஆனால் அமலாபால் எல்லை தாண்டிய கவர்ச்சி காட்டியிருக்கிறார்.

எது ஜெயிக்கும்?

எது ஜெயிக்கும்?

இந்த பட்டியலில் இருந்த கொடிவீரன் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் சமீபத்திய வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி இன்று படங்களை ரிலீஸ் செய்கிறார்கள். தமிழ்நாடு முழுக்கவே கனமழை பெய்து வருகிறது. எனவே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவது சிரமம் தான்.இரண்டு படங்களுக்கான முன்பதிவுமே காற்று வாங்குகிறது. எந்த ஷோவுமே பாதி இருக்கைகள் கூட நிரம்பவில்லை. எனவே பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தால் மட்டுமே தப்பிக்கலாம் என்ற நிலை தான் இரண்டு படங்களுக்குமே... பார்ப்போம்!

English summary
Here is the details about today's new releases Thiruttupayale 2 and Annadurai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil