»   »  இன்றைய ரிலீஸ்... ஹரிதாஸ், ஆதிபகவன் உள்பட 4 படங்கள்!

இன்றைய ரிலீஸ்... ஹரிதாஸ், ஆதிபகவன் உள்பட 4 படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமீரின் ஆதிபகவன், ஜிஎன்ஆர் குமாரவேலனின் ஹரிதாஸ், அறியாதவன் புரியாதவன் மற்றும் பாட்டி ஆகிய நான்கு படங்கள் வெளியாகின்றன.

இவை தவிர, ஹாலிவுட்டின் புகழ்பெற்ற டைஹார்டு படத்தின் 5-ம் பாகம் வெளியாகியுள்ளது.

அமீரின் ஆதிபகவன்

அமீரின் ஆதிபகவன்

ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடித்துள்ள இந்தப் படம் இரண்டாண்டு தயாரிப்பில் இருந்தது. பருத்தி வீரனுக்குப் பிறகு 5 ஆண்டு இடைவெளியில் அமீர் இயக்கியுள்ள படம் இது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அன்பு பிக்சர்ஸ் சார்பில் ஜெ அன்பழகன் எம்எல்ஏ தயாரித்துள்ளார்.

ஹரிதாஸ்

ஹரிதாஸ்

ஜிஎன் குமாரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் கிஷோர் - சினேகா, பரோட்டா சூரி நடித்துள்ளனர். மிகச் சிறந்த, சர்வதேசத் தரத்தில் அமைந்துள்ள படம் என அனைத்துத் தரப்பும் பாராட்டியுள்ள படம் இது. விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார். டாக்டர் வி ராமதாஸ் தயாரித்துள்ளார்.

அறியாதவன் புரியாதவன்

அறியாதவன் புரியாதவன்

பைரவி பிலிம்ஸ் கலைஞானம் வழங்க ஜெ.கே. புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் ஜெ.கே. தயாரித்து, இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் அறியாதவன் புரியாதவன். உன்னி மாயா, சரிதா தாஸ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பாட்டி

பாட்டி

பாட்டியின் பாசத்தைச் சொல்லும் படம் இது. என் ரமேஷ் குமார் தயாரித்து இயக்கியுள்ளார்.

English summary
Today's Tamil releases are Ameerin Aadhi Bhagavan, Haridas, Paati and Ariyathavan Puriyathavan.
Please Wait while comments are loading...