»   »  பெண்ணும், பெண்ணும் ஃபயர் ஆகும் 'அஃபயர்': ரிலீஸுக்காக ஆசையாய் காத்திருக்கும் ரசிகர்கள்

பெண்ணும், பெண்ணும் ஃபயர் ஆகும் 'அஃபயர்': ரிலீஸுக்காக ஆசையாய் காத்திருக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கில் பெண்ணும், பெண்ணும் ஃபயர் ஆவது பற்றி வெளியாக உள்ள திகில் படம் அஃபயர்.

அஃபயர் என்ற தெலுங்கு படத்தின் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. காரணம் புகைப்படங்களை பார்த்த உடனே அது பெண்ணும் பெண்ணும் சேரும் படம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. புகைப்படங்களில் இருக்கும் இரண்டு நடிகைகள் மத்தியில் அப்படி ஒரு பிணைப்பு.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

அஃபயர்

அஃபயர்

பீமாவரம் டாக்கீஸ் சார்பில் ராமசத்யநாராயணா தயாரித்துள்ள அஃபயர் படத்தை ஸ்ரீ ரஞ்சன் இயக்கியுள்ளார். புகைப்படங்களை பார்த்தவுடன் இது அந்த வில்லங்கம் பிடித்த இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் படம் என்று யூகித்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

லெஸ்பியன்

லெஸ்பியன்

அஃபயர் படம் மூலம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான பிரசாந்தி ஹீரோயின் ஆகியுள்ளார். அவரும், கீதாஞ்சலியும் லெஸ்பியனாக நடித்துள்ளனர். இருவரும் லெஸ்பியன் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார்களாம்.

திகில்

திகில்

பெண்ணும், பெண்ணும் சேர்வது மட்டும் படம் அல்ல. கொலை, கொலைகள், ரத்தம் என திகிலுக்கும் அஃபயரில் குறைச்சல் இருக்காது என்கிறார்கள்.

இந்தி படங்கள்

இந்தி படங்கள்

எத்தனையோ கதை இருக்க பெண்ணும், பெண்ணும் ஃபயர் ஆவதை ஏன் படமாக்கினீர்கள் என்று இயக்குனர் ஸ்ரீ ரஞ்சனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், பாலிவுட்காரர்களான மகேஷ் பட், ஏக்தா கபூர் போன்றோர் தில்லான படங்களை எடுப்பதை பார்த்து வியந்து நானும் அஃபயரை எடுத்துள்ளேன் என்றார்.

அதிருது

அதிருது

படத்தின் புகைப்பங்கள், டீசர், டிரெய்லரே சும்மா அதிருது படம் இன்னும் எப்படி இருக்குமோ என தெரியவில்லையே என ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கிறார்கள்.

English summary
Tollywood fans are eagerly waiting for the movie Affair to hit the screens. Do you want to know why, check out the trailer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil