»   »  எப்ப வருவாங்களோ: ஐடி ரெய்டு பயத்தில் தூக்கத்தை தொலைத்த ஹீரோக்கள்

எப்ப வருவாங்களோ: ஐடி ரெய்டு பயத்தில் தூக்கத்தை தொலைத்த ஹீரோக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: எந்த நேரத்தில் வருமான வரித்துறையினர் வந்து சோதனை நடத்துவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் சில டோலிவுட் ஹீரோக்கள்.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Tollywood heroes scared of IT raids

தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதை சம்பந்தப்பட்டவர்களே அறிவித்துள்ளனர். சும்மாவே வருமான வரித்துறையினர் சோதனைக்கு வருவார்கள் இவர்கள் வேறு ரூ.100 கோடி என்று சொல்லிவிட்டார்களா நிச்சயம் ரெய்டு தான் என டோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

எந்த நேரத்தில் ரெய்டு நடக்குமோ என்ற பயத்தில் வெற்றி படங்களை கொடுத்த சில தெலுங்கு ஹீரோக்கள் உள்ளனர். ஹீரோக்களை விட தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் தான் ரெய்டு பயத்தில் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.

ரெய்டில் இருந்து தப்பிக்கும் வழிகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்களாம்.

English summary
According to reports, some Tollywood actors are scared that IT department will conduct raid in their places as their recent movies are hits.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil