»   »  டோலிவுட்டில் சம்பளத்தில் பாகுபலியை முந்திய மகேஷ் பாபு

டோலிவுட்டில் சம்பளத்தில் பாகுபலியை முந்திய மகேஷ் பாபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: டோலிவுட் ஹீரோக்களில் மகேஷ் பாபு தான் அதிகபட்சமாக ஒரு படத்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் பெறுகிறார்.

பாலிவுட், கோலிவுட் ஹீரோக்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள் டோலிவுட் ஹீரோக்கள். நடிப்பிலும் சரி, சம்பளத்திலும் சரி. கடந்த ஆண்டு ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் அனைத்து உட்காரர்களையும் தெலுங்கு திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலக ஹீரோக்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. பாகுபலி படத்திற்கு பிரபாஸ் ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் அவர் பாகுபலிக்காக சில ஆண்டு கால்ஷீட் அளித்ததால் அந்த சம்பளமாம். இல்லை என்றால் படத்திற்கு ரூ. 18 முதல் 19 கோடி தான் வாங்குகிறாராம்.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

பிரின்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் மகேஷ் பாபு முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ரூ.25 கோடி வாங்கியுள்ளார். ஸ்ரீமாந்துடு படத்திற்கு பிறகே அவர் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

பவன் கல்யாண் படம் ஒன்றுக்கு ரூ. 22 கோடி வாங்குகிறார். பவன் கல்யாண் நடித்து முடித்துள்ள சர்தார் கப்பார் சிங் படத்தின் வினியோக உரிமை ரூ. 20 கோடி சென்றுள்ளது.

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர் டெம்பர் படத்திற்கு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அவர் தற்போது படம் ஒன்றுக்கு ரூ.20 கோடி வாங்குகிறார்.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி படம் மூலம் உலக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த பிரபாஸ் படம் ஒன்றுக்கு ரூ.18 முதல் 19 கோடி சம்பளம் பெறுகிறார்.

ராம் சரண்

ராம் சரண்

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா படம் ஒன்றுக்கு ரூ.17 கோடி வாங்குகிறார். ஆனால் அவரது சம்பளம் படத்தின் பட்ஜெட்டை பொறுத்து அவ்வப்போது மாறும்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

அடுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்த பிறகு அல்லு அர்ஜுன் தனது சம்பள்ததை உயர்த்தியுள்ளார். அவர் தற்போது ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறார்.

English summary
Among the Tollywood heroes, prince Mahesh Babu is the highest paid actor with Rs. 25 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil