Just In
- 4 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 6 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 7 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிர்ச்சி.. டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
சென்னை: பலராலும் ரசிக்கப்படும் டாம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் ஜீன் டைச் காலமானார். அவருக்கு வயது 95.
இன்றும் பலராலும் ரசிக்கப்படும் கார்ட்டூன்களில் முக்கியமானது டாம் அண்ட் ஜெர்ரி. எலியும் பூனையும் ஒன்றை ஒன்று துரத்தும் கார்ட்டூன்களை பார்த்து ரசிக்காத குழந்தைகள் இருக்கமாட்டார்கள்.
இந்நிலையில் டாம் அண்ட் ஜெர்ரியை இயக்கிய இயக்குநர் ஜீன் டைச் திடீரென மரணமடைந்துள்ளார். அனிமேட்டர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

அலாதி பிரியம்
சிகாகோவில் பிறந்த ஜீன் டைச், முன்ரோ, 'டாம் டெர்ரிஃபிக்', 'பாப்பாய்' உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார். தன்னுடைய இளம் வயதில் வட அமெரிக்காவில் ஏர்ஃபேர்ஸில் பணியாற்றிய டைச், ராணுவத்திலும் வேலை பார்த்திருக்கிறார். விமானம் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்ட டைச், விமானம் ஓட்டுவதற்கனா பயிற்சியையும் பெற்றார்.

அனிமேஷன் ஸ்டுடியோ
தொடர்ந்து இசை சம்பந்தப்பட்ட துறையிலும் பணியாற்றினார் டைச். 1955 ஆம் ஆண்டு அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கிய டைச்சுக்கு அப்போதுதான் புரிந்தது இதுதான் நமக்கான வேலை என்று. ஆர்வத்துடன் அனிமேஷன் துறையில் பணியாற்றிய டைச், 'சிட்னி தி எலிஃபண்ட்', 'க்ளிண்ட் க்ளாபர்' உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கினார்.

ஆஸ்கர் வின்னர்
ஆஸ்கர் அவார்டுக்கு பரிந்துரைக்கப்படும் அளவுக்கு கொடி கட்டி பறந்தார் டைச். இதனை தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு டைச் சொந்தமாக அனிமேஷன் கம்பெனியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் விளம்பர படங்களை உருவாக்கி கொடுத்தார். பின்னர் 1960-ஆம் ஆண்டு டைச் உருவாக்கிய 'முன்ரோ' என்ற கார்ட்டூன், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.

திடீர் மரணம்
தொடர்ந்து இவர் இயக்கிய அனிமேஷன் குறும்படங்கள் பல ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஜீன் டைச், பராகுவேவில் இருக்கும் தனது அபார்ட்மென்ட் வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு காலமனார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

ரசிகர்கள் சோகம்
இந்நிலையில் டைச் மரணமடைந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள அவரது பதிப்பாளராள பீட்டர் ஹிம்மல், ஜீன் டைச்சின் மரணம் எதிர்பாரத ஒன்று என தெரிவித்துள்ளார். டைச்சின் மரணம் திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.