நாளை மாநாடு 100 வது நாள்...கண்டுகொள்ளாமல் சைலன்ட் ஆன படக்குழு...இது தான் காரணமா ?
சென்னை : சிம்பு நடித்த மாநாட படம் ரிலீசாகி நாளையுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. ஆனால் இதை பற்றி மாநாடு படக்குழு இதுவரை சத்தமே இல்லாமல் அமைதி காத்து வருகிறது. இதற்கு சில முக்கிய பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து நீண்ட போராட்டம், பலமுறை ஒத்திவைப்பிற்கு பிறகு ரிலீசான படம் மாநாடு. சிம்புவின் கம் பேக் படம் என்றே வர்ணிக்கப்படும் மாநாடு நவம்பர் 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது.

சக்சஸ் மீட்டிற்கு வராத சிம்பு
முதல் நாளே ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவை மாநாடு படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்த படம் 25வது நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்தது. இதை முன்னிட்டு சக்சஸ் மீட் வைத்து, படத்தில் நடித்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விழாவில் படத்தின் ஹீரோவான சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட சிலர் கடுமையாக விமர்சித்து மேடையில் பேசி இருந்தனர்.

நோட்டீஸ் அனுப்பிய டி.ராஜேந்தர்
சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங்கில் பிஸியாக இருப்பதால் தான் கலந்து கொள்ள முடியவில்லை என கூறப்பட்டது. ஆனால் படத்தின் சேட்டிலைட் உரிமம் விற்பனை தொடர்பான விவகாரத்தில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த காரணத்தால் தான் சிம்பு அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் கூறப்பட்டன.

அந்த விழா நடத்தவேயில்லையே
இதற்கிடையில் சிம்பு தலைமையில் தனியாக ரசிகர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஜனவரி 6 ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அந்த விழா நடத்தப்படவில்லை. அதற்குள் சிம்பு அடுத்தடுத்த படங்களின் ஷுட்டிங், பிக்பாஸ் அல்டிமேட் என பிஸியாகி விட்டார்.

100வது நாள் கொண்டாட்டம் இல்லையா
இதில் மற்றொரு பிரச்சனையாக விநியோகஸ்தர்கள் சரியான கணக்கு தராததால் மாநாடு படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என சரியாக சொல்ல முடியவில்லை என மாநாடு படத்தின் 50 வது நாளில் ஒரு ட்வீட்டை போட்டு அதிர வைத்தார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. அதற்கு பிறகு மாநாடு படம் பற்றி பேசுவதையே அனைவரும் நிறுத்தி விட்டனர். இப்போது 100வது நாளும் வந்து விட்டது. படத்தின் ரிலீஸ் அன்றைக்கே கேக் வெட்டி கொண்டாடியவர்கள். தற்போது 100 வது நாளை கொண்டாடுவது, ஸ்பெஷல் அறிவிப்பு ஏதும் இல்லாமல் டைரக்டர் வெங்கட் பிரபு தனது அடுத்த படமான மன்மத லீலை படத்திலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்த படத்தின் தயாரிப்பிலும் பிஸியாக உள்ளனர்.
Recommended Video

இது தான் காரணமா
லேட்டஸ்ட் தகவலின் படி, வெளியில் தெரியா விட்டாலும் டி.ராஜேந்தர் - சுரேஷ் காமாட்சி இடையேயான பிரச்சனை இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறதாம். அந்த கோபம் மற்றும் மன வருத்தம் காரணமாகவே 100வது நாள் கொண்டாட்டம் பற்றி எந்த பிளானும் இல்லாமல் இருக்கிறார்களாம். மாநாடு படம் தொடர்பாக பல பஞ்சாயத்துக்கள் ஏற்கனவே ஓடிக் கொண்டிருப்பதால் 100வது நாளை யார் கொண்டாடுவது என்ற குழப்பம் வேறு ஓடிக் கொண்டிருக்கிறதாம். மாநாடு படம் பற்றி யாரும் பேசாததற்கு அது தான் முக்கிய காரணமாம். இன்னும் சில பல காரணங்கள் ஓடிக் கொண்டிருப்பதால் நாளை 100வது நாளில் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் தான் வழக்கம் போல் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











