For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  2019ம் ஆண்டின் சிறந்த டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ! முதலிடத்தில் எந்த படம் தெரியுமா?

  |

  சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

  அதில், கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. ரிலீஸ் ஆகமுடியாமல் கிடப்பில் கிடந்த சில திரைப்படங்கள் இந்த ஆண்டு ரிலீசாகியுள்ளன.

  இந்த ஆண்டு ரிலீசாகும் என எதிர்பார்த்த சில திரைப்படங்கள் இன்னும் ரிலீசாகாமல் அடுத்த ஆண்டாவது ரிலீஸ் ஆகிவிடுவோம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.

  சூப்பர்ஸ்டார், தல அஜித், தளபதி விஜய், தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளையும் படைத்துள்ளன.

  இதில், அதிகப்படியான ரசிகர்களின் மனங்களை கவர்ந்த 2019ம் ஆண்டில் வெளியான சிறந்த 10 படங்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

  2019ஆம் ஆண்டில் உங்களுக்கு பிடித்த படம் எது.. ஓட்டு போட்டு ஷேர் பண்ணிக்குங்க மக்களே!

  10. பக்ரீத்

  10. பக்ரீத்

  ஒட்டகத்தை வைத்து முதன்முறையாக ஒரு முழு நீள படத்தை தமிழில் கொடுக்க முடியும் என்று பக்ரீத் படத்தின் மூலம் சாதித்துக் காட்டியுள்ளார் இயக்குநர் ஜெகதீசன் சுப்பு. பல வருஷங்களாக சினிமாவில் சிறந்த படத்தை கொடுக்க முடியாமல் போராடி வந்த நடிகர் விக்ராந்துக்கு மிகப்பெரிய வரவேற்பை பக்ரீத் பெற்றுத் தந்தது. விமர்சன ரீதியாக இந்த படம் சாதித்தாலும், வசூல் ரீதியாக சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  9. ஆடை

  9. ஆடை

  மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஆடை படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. யூடியூப் சேனல்களில் செய்யப்படும் பிரான்க் ஷோக்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி வெளியான ஆடை படத்தில், அமலா பால் ஆடையின்றி நடித்து மிரட்டியிருந்தார்.

  8. தடம்

  8. தடம்

  மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த தடம் படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நடிகர் அருண் விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்தது மட்டுமின்றி தொடர்ந்து பல பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

  7. ஒத்த செருப்பு சைஸ் 7

  7. ஒத்த செருப்பு சைஸ் 7

  நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி தனி ஒருவனாக நடித்து அசத்தியிருந்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. பார்த்திபனின் இந்த புதிய பாதைக்கு தியேட்டரில் கூட்டம் கூடவில்லை என்றாலும், உலக அரங்கில் பல விருதுகளும் பாராட்டுக்களும் தொடர்ந்து குவிந்து வண்ணம் இருக்கிறது.

  6. நேர்கொண்ட பார்வை

  6. நேர்கொண்ட பார்வை

  எச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை பெண்களுக்கான படமாக உருவாகி இருந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற நோ மீன்ஸ் நோ வசனம், தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தது.

  5. கோமாளி

  5. கோமாளி

  16 ஆண்டுகள் கோமாவில் இருந்த ஒரு நோயாளி குணமடைவது, 90ஸ் கிட்ஸ் விஷயங்கள், கூகுள் மேப் பரிதாபங்கள், மொபைல் போன் டார்ச்சர்கள், கிளைமேக்ஸ் சென்டிமென்ட் என பல விசயங்களை அழகாக அடுக்கி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார். ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

  4. பேரன்பு

  4. பேரன்பு

  பிளாஸ்டிக் சைல்ட் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு மம்முட்டி, சாதானாவின் நடிப்பால் ரசிகர்களை திணறடித்த படம் பேரன்பு. உலகளவில் இந்த படமும் பல விருதுகளை குவித்து வந்தாலும், தியேட்டர்களில் மிகப்பெரிய வசூலை ஈட்ட முடியாமல், விமர்சன ரீதியாக மட்டுமே இந்த படம் வெற்றிப் பெற்றது.

  3. சூப்பர் டீலக்ஸ்

  3. சூப்பர் டீலக்ஸ்

  ஆரண்ய காண்டம் படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜா குமராராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், ஃபகத் ஃபாசில், சமந்தா, மிருணாளினி ரவி என பலர் நடிப்பில் உருவான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம், தமிழ் சினிமாவின் இத்தனை ஆண்டுகால கோட்பாடுகளை உடைத்து புது மாதிரியான ஒரு படமாக இந்த ஆண்டு வெளியானது. உலகளவில் பல விருதுகளையும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.

  2. கைதி

  2. கைதி

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் நடிகர் கார்த்திக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. யூகிக்க முடியாத கதையும் படு வேகமாக நகரும் திரைக்கதை, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என ஒரே இரவில் கலந்து கட்டி கொடுத்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கைதி படம் பெற்றது.

  1. அசுரன்

  1. அசுரன்

  பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் சாதிய ரீதியிலான பிரிவினைகளுக்கு எதிராக சுழட்டிய சாட்டை தான் அசுரன். தனுஷ், மஞ்சுவாரியர், டீஜெ, கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் தனுஷின் அசுர வேட்டை நடிப்புக்கு தீனி போட்டது மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியது.

  English summary
  2019 KTown saw many more Blockbuster movies and many more Good movies, here is the top 10 list of best movies in Tamil cinema this year.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X