twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேது முதல் சித்ரா வரை.. 2020ல் தமிழ் சினிமாவை உலுக்கிய டாப் 10 மரணங்கள்!

    |

    சென்னை: 2020 ஆம் ஆண்டில் பல பிரபலங்களை பறிகொடுத்து மீளாத் துயரில் ஆழ்ந்தது தமிழ் சினிமா.

    2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே இந்த 2020ஆம் ஆண்டு பெரும் சோகமான ஆண்டாக அமைந்தது.

    இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என தென்னிந்திய சினிமாவிலும் பல நட்சத்திரங்களின் திடீர் மரணம் ரசிகர்களை உலுக்கியது. 2020ஆம் ஆண்டு விடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு மரணமடைந்த திரை நட்சத்திரங்கள் குறித்த ஒரு தொகுப்பு..

    சேது ராமன்

    சேது ராமன்

    கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகரான சேதுராமன் ஒரு தோல் சிகிச்சை நிபுணர் ஆவர். கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். 34 வயதில் அவரது திடீர் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர் சேதுராமன் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் விசு

    நடிகர் விசு

    இந்த ஆண்டு உலுக்கிய மரணங்களில் விசுவின் மரணம் ஒன்று. எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் விசு. அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் குடும்பச் சித்திரங்கள்தான். சிறு நீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 70 வயதான நடிகர் விசு சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 22ஆம் தேதி காலமானார்.

    சிரஞ்சீவி சர்ஜா

    சிரஞ்சீவி சர்ஜா

    தென்னிந்திய சினிமாவை உலுக்கிய மரணங்களில் ஒன்று நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம். நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சர்ஜா வாயுபுத்ரா என்ற கன்னட் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். சிரஞ்சீவி சர்ஜா 2018ஆம் ஆண்டுதான் பிரபல நடிகையான மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரு உயிரிழக்கும் போது அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஃபுளோரன்ட் பெரைரா

    ஃபுளோரன்ட் பெரைரா

    நடிகர் விஜய்யின் புதிய கீதை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் நடிகர் ஃபுளோரண்ட் பெரைரா. கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான இவர் என்கிட்ட மோதாதே, வேலையில்லா பட்டதாரி 2, ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி இவர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

    சச்சிதானந்தன்

    சச்சிதானந்தன்

    ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மற்றுமொரு மரணம் இயக்குநர் சச்சிதானந்தத்தின் மரணம். கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. 48 வயதே ஆன இவர் 2015-ம் ஆண்டு பிருத்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்த அனார்களி படத்தை இயக்கிய சச்சி, சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

    ஜெயப்பிரகாஷ் ரெட்டி

    ஜெயப்பிரகாஷ் ரெட்டி

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாகவும், காமெடி வில்லனாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் கோலோச்சியவர். 74 வயதான ஜெயப்பிரகாஷ் ரெட்டி கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் சூர்யாவின் ஆறு, அர்ஜூனின் சின்னா, தனுஷின் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் தவசி

    நடிகர் தவசி

    'கிழக்குச் சீமையிலே' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார் தவசி. நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படத்திலும் தவசி நடித்துள்ளார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் நடிகர் தவசி. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற டயலாக்கின் மூலம் பெரும் பிரபலமானார். தமிழில் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தவசி கடந்த நவம்பர் 23 ஆம் தேதி காலமானார்.

    பாடகர் எஸ்பிபி

    பாடகர் எஸ்பிபி

    ஒட்டு மொத்த இசைப்பிரியர்களையும் 2020ஆம் ஆண்டில் உலுக்கிய மரணம் பாடும் நிலா என்றழைக்கப்படும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மரணம். லேசான கொரோனா அறிகுறியுடன் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா நெகட்டிவான நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி திடீரென தனது 74 வயதில் காலமானார்.

    வடிவேல் பாலாஜி

    வடிவேல் பாலாஜி

    சின்னதிரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலு போல் காமெடி செய்வதால் 'வடிவேல்' பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.
    விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடி நிகழ்ச்சிகளான 'அது இது எது', 'கலக்கப் போவது யாரு', உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனது 42 வயதில் உயிரிழந்தார்.

    Recommended Video

    இதுவரை தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகர், நடிகைகள் | Filmibeat Tamil
    சித்ரா தற்கொலை

    சித்ரா தற்கொலை

    பிரபல விஜேவும் சீரியல் நடிகையுமான சித்ரா டிசம்பர் 9ஆம் தேதி நசரத்பேட்டை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது காதலரான ஹேமந்தை பதிவு திருமணம் செய்து கொண்டார் சித்ரா. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபலங்களை அழைத்து இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

    English summary
    Top 10 cinema celebrities death in Tamil cinema. Actress Sethuraman to Chithra Tamil cinema lost many stars in 2020.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X