Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த ஆண்டின் சிறந்த இயக்குநர் யார்? டாப் 10 இயக்குநர்கள் பட்டியல் இதோ.. இளைஞர்கள் படையெடுத்த 2020!
சென்னை: 2020ம் ஆண்டு குறைந்த அளவிலான திரைப்படங்களே வெளியானாலும், இம்முறை ஏகப்பட்ட புதுமுக இயக்குநர்கள் தங்கள் திறமைகளை கோலிவுட்டில் காட்டி உள்ளனர்.
சீனியர் இயக்குநர்களும் தங்கள் இடத்தை விட்டுக் கொடுக்காமல் இளைஞர்களுக்கு நிகராக போட்டிப் போட்டுள்ளனர்.
இந்தியாவையே சில தமிழ் இயக்குநர்கள் இம்முறை திரும்பி பார்க்க வைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள இயக்குநர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே காண்போம்.

10. பட்டாஸ் – துரைசெந்தில்குமார்
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான பட்டாஸ் படத்தை இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கி இருந்தார். இரு வேடங்களில் நடிகர் தனுஷ் கலக்கி இருந்தார். சினேக, மெஹ்ரின் பிர்சடா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரான இவர், தனுஷின் தயாரிப்பில் வெளியான சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். காக்கிச் சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

9. தர்பார் - ஏ.ஆர். முருகதாஸ்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இன்னும் கொஞ்சம் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இந்த படத்தை இயக்கி இருந்தால், இந்த ஆண்டின் டாப் மூன்று இயக்குநர்களில் இடம்பிடித்து இருப்பார். தர்பார் படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும், விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

8. சைக்கோ – மிஷ்கின்
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு அந்த அளவுக்கு பேசப்படவில்லை. ஏகப்பட்ட சைக்கோ படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால், மிஷ்கினின் இயக்கத்திற்கு இந்த ஆண்டு 8வது இடம் கிடைத்துள்ளது.

7. தாராளபிரபு – கிருஷ்ணா மாரிமுத்து
இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தன்யா ஹோப் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளியது. பாலிவுட்டில் 2012ம் ஆண்டு வெளியான விக்கி டோனர் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற விதத்தில் தரமாக ரீமேக் செய்து அசத்தி உள்ளார் கிருஷ்ணா மாரிமுத்து.

6. ஓ மை கடவுளே – அஸ்வத் மாரிமுத்து
அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான காமெடி ரோலர் கோஸ்டர் படமான ஓ மை கடவுளே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. திரும்ப திரும்ப இந்த படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். அசோக் செல்வன், விஜய்சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோரின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது.

5. அந்தகாரம் – விக்னராஜன்
இயக்குநர் அட்லி தயாரிப்பில் இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் வெளியான அந்தகாரம் திரைப்படம் ரசிகர்களை இந்த ஆண்டு மிரட்டி பாராட்டுக்களை குவித்து வருகிறது. நெட்பிளிக்ஸில் வெளியான இந்த திரைப்படத்தை அந்த அளவுக்கு ராவாக இயக்குநர் விக்னராஜன் இயக்கி அசத்தி உள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் வினோத் கிஷனின் நடிப்பு சூப்பர்.

4. ஆர்.ஜே. பாலாஜி, என்.ஜே. சரவணன்
சாமியை வைத்தே போலி சாமியார்களை காலி செய்ய வேண்டும் என்கிற திரைக்கதையை என்டர்டெயின்மென்ட் கலந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைத்து ஒரு பக்கா கமர்ஷியல் படமாக கொடுத்த இயக்குநர்கள் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இணைந்து கலக்கிட்டாங்க.. இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ஆர்.ஜே. பாலாஜிக்கு பாராட்டுக்கள்.

3. தேசிங் பெரியசாமி
இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு அறிமையான இயக்குநர் தேசிங் பெரியசாமி. அறிமுக படத்தையே பாலிவுட் ரேஞ்சுக்கு இயக்கி அசத்திவிட்டார். வழக்கமான ஹீரோ, வில்லன் ஸ்க்ரிப்ட் இல்லாமல், பிளான் பண்ணி பக்காவா கொள்ளை அடிப்பவர்கள் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற கதையை துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், கெளதம் மேனன் என பக்காவான காஸ்டிங்குடன் இயக்கி அசத்தி உள்ளார். அடுத்த படத்துக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!

2. பெ. விருமாண்டி
இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான க/பெ. ரணசிங்கம் திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளியது. வெளிநாட்டில் இறந்து போன கணவரின் உடலை திரும்பி மீட்டு வர கைக் குழந்தையுடன் ஒரு மனைவி போராடிய நிஜ கதையை படமாக இயக்கி பாராட்டுக்களை அள்ளியுள்ளார்.

சுதா கொங்கரா
இறுதிச்சுற்று படத்தின் மூலமே தனது வலிமையை நிரூபித்து இருந்த இயக்குநர் சுதா கொங்கரா, சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இன்னமும் மெருகேறி உள்ளார். இந்த ஆண்டு தமிழ் சினிமாவை இந்தியாவே திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இவர் இயக்கிய தங்கம் படமும் பாராட்டுக்களை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.