twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்.ஜி.கே., முதல் மிஸ்டர் லோக்கல் வரை.. 2019-ல் பல்பு வாங்கிய டாப் 10 படங்கள்!

    |

    சென்னை: 2019ம் ஆண்டு கமர்ஷியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்த படங்கள் குறித்து பார்த்து விட்டோம்.

    தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி ரிலீசுக்குப் பிறகு ரசிகர்களே விமர்சித்த படங்கள் குறித்து பார்க்கலாம். இந்த பட்டியலில் சூர்யா, விக்ரம், ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

    2019ம் ஆண்டில் அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரிலீசுக்குப் பிறகு பல்பு வாங்கிய டாப் 10 படங்களை இங்கே காண்போம்.

    2019ஆம் ஆண்டில் உங்களுக்கு பிடித்த படம் எது.. ஓட்டு போட்டு ஷேர் பண்ணிக்குங்க மக்களே!

    10.கீ

    10.கீ

    ப்ளூவேல் கேமை விட பயங்கரமான கேம் என்று செம பில்டப் கொடுக்கப்பட்டு வெளியான ஜீவாவின் கீ படம் தியேட்டருக்கு வந்த சுவடும் சென்ற சுவடும் தெரியாமல் ஃப்ளாப் ஆனது. ஜிப்ஸி படத்தில் இதனை ஜீவா ஈடு செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    9.ஐரா

    9.ஐரா

    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த ஆண்டு பிகில், விஸ்வாசம் என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். அதே போல, ஐரா, கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் என அவர் நடிப்பில் மூன்று டிசாஸ்டர் படங்களும் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது. சர்ஜுன் இயக்கத்தில் முதல் முறையாக டபுள் ஆக்‌ஷன் நயன்தாரா, பேய்ப்படம் ஒரு நயன்தாரா கருப்பழகி என பல பில்டப்புடன் வந்த படம் ரிலீசுக்குப் பிறகு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    8.வந்தா ராஜாவாதான் வருவேன்

    8.வந்தா ராஜாவாதான் வருவேன்

    செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு கம்பேக் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட படம் தான் வந்தா ராஜாவாதான் வருவேன். ஆனால், கம்பேக் ஆன வேகத்திலேயே நடிகர் சிம்புவுக்கு இந்த படம் கொடுத்த ஃபிளாப்பால் இந்த வருஷம் பல சிக்கல்களை சந்தித்தார். அடுத்த ஆண்டு மாநாடு நடத்தி ஆட்சியைப் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    7.தேவ்

    7.தேவ்

    கைதி, தம்பி என இந்த ஆண்டு இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான தேவ் படம், பையா படம் போல இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜாத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவான தேவ் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

    6.கொலையுதிர் காலம்

    6.கொலையுதிர் காலம்

    சக்ரி டொலட்டி இயக்கத்தில் ஹாரர் த்ரில்லராக இந்த ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அவதூறாக பேசியிருந்தார். அதற்கு பிறகு இந்த படத்தின் ரிலீஸ் குறித்து நயன்தாராவே கண்டுகொள்ளவில்லை. படம் வெளியான பின்பு ரசிகர்களும் இந்த படத்தை கண்டுகொள்ளவில்லை. பில்லா 2, கொலையுதிர் காலம் என அடுத்தடுத்து ஃப்ளாப் படங்களை கொடுத்துள்ளார் சக்ரி டொலட்டி.

    5.மிஸ்டர் லோக்கல்

    5.மிஸ்டர் லோக்கல்

    வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்குகிறார் என்றதும் சீமராஜா தோல்விக்குப் பிறகு நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மிகப்பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தில் யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர் என பலர் இருந்தும் காமெடியில் கூட இந்த படம் ஒர்க்கவுட் ஆகவில்லை.

    4.சங்கத்தமிழன்

    4.சங்கத்தமிழன்

    விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. முதல்முறையாக டபுள் ஆக்‌ஷனில் விஜய்சேதுபதி கலக்குவார் என எதிர்பார்த்த நிலையில், சங்கத்தமிழன் படம் தோல்வியைத் தழுவியது. பல படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி அடுத்த ஆண்டு தனது ரசிகர்களுக்கு வெயிட்டான ட்ரீட் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    3.எனை நோக்கிப் பாயும் தோட்டா

    3.எனை நோக்கிப் பாயும் தோட்டா

    இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த படம் ரிலீசானதே பெரிய விஷயம் என்றாலும், இந்த ஆண்டு அசுரன் எனும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நடிகர் தனுஷுக்கு எனை நோக்கிப் பாயும் தோட்டா தோல்விப் படமாகவே அமைந்துள்ளது.

    2. கடாரம் கொண்டான்

    2. கடாரம் கொண்டான்

    ஸ்கெட்ச் படத்தின் தோல்விக்குப் பிறகு கடாரம் கொண்டான் படம் விக்ரமுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. மலேசியா பேக் டிராப், ஸ்டைலிஷ் விக்ரம் என படம் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ராஜேஷ் எம். செல்வாவின் சொதப்பலான ஸ்க்ரீன் ப்ளே சியான் விக்ரமின் சின்சியர் நடிப்பை விரயமாக்கியது.

    1.என்.ஜி.கே

    1.என்.ஜி.கே

    சர்கார், விஸ்வாசம் படங்களுக்கு போட்டியாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர், பல ரிலீஸ் தேதி தள்ளிப் போய், அந்த கேப்பில் சூர்யா அவசர அவசரமாக காப்பான் படத்தையும் முடித்து விட்டு, என்.ஜி.கே படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். புதுப்பேட்டை படத்தை பீட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட என்.ஜி.கே படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் வெட்டப்பட்டு, பல காட்சிகள் புரியாமல் போனதால், சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்க வேண்டிய படம் தோல்வியைத் தழுவியது.

    English summary
    Here is the list of top 10 flop movies of 2019 in Kollywood. Top Heroes Suriya, Vikram, Vijay Sethupathi, Sivakarthikeyan movies also in the disaster movies list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X