»   »  2015: டாப் 10 தோல்விப் படங்கள்.. ஒரு பார்வை!

2015: டாப் 10 தோல்விப் படங்கள்.. ஒரு பார்வை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதான் ஆரம்பித்த மாதிரி இருக்கிறது 2015... ஆனால் முழுசாக 12 மாதங்கள் முடியப் போகின்றன.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இந்த ஆண்டு சில ஆரோக்கியமான படங்கள், வசூல் குவிப்புகள் நிகழ்ந்தாலும், எதிர்பாராத தோல்விப் படங்கள் ஏராளம்.


கடந்த 2014-ஐப் போலவே இந்த ஆண்டும் ஏராளமான படங்கள் வெளியாகின. அந்தக் கணக்கை தனியாகப் பார்க்கலாம். அதற்கு முன், இந்த 2015-ல் பெரும் தோல்வி, எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பத்துப் படங்களைப் பார்க்கலாம்.


இவற்றில் சிலவற்றை பிரமாண்ட வெற்றி, குவிகிறது வசூல் என முதல் 30 நாட்கள் தந்தியில் விளம்பரம் செய்திருப்பார்கள். அவர்கள் திருப்திக்காக அவர்கள் காசில் பண்ணிக் கொண்ட விளம்பரம் அது. நமக்கென்ன இருக்கிறது!


1. புலி

1. புலி

விஜய் - ஸ்ருதி ஹாஸன் - ஹன்சிகா நடித்த இந்தப் படத்தை சிம்பு தேவன் இயக்கியிருந்தார். ஆரம்பத்தில் இந்தப் படம் பெரிய வசூலைக் குவித்ததாக சொல்லி வந்த அதன் தயாரிப்பாளர்கள், கடைசியில் இந்தப் படத்தால் தங்களுக்கு பெரும் நஷ்டம் என்றும் நயா பைசா தேறவில்லை என்றும் அறிக்கையே விட்டுவிட்டார்கள். ஒரு படத்தின் தோல்வி குறித்து அதன் தயாரிப்பாளர்களே இப்படி அறிக்கை விட்டது இதுதான் முதல் முறை. அதனால் இந்தப் படத்துக்கு இந்த லிஸ்டில் முதலிடம்!


2. உத்தம வில்லன்

2. உத்தம வில்லன்

கமல் ஹாஸன் திரைக்கதை எழுதி நடிக்க, அவரது நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கி. இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. நடிகர் கமலின் சொந்த வாழ்க்கைக் கதை எனும் அளவுக்கு திரைக்கதை அமைந்திருந்தது. ஆனால் வெகு ஜனங்களுக்கு இந்தப் படம் பிடிக்காமல் போய்விட்டது. விமர்சகர்களுக்கும் வெகுஜனங்களின் ரசனைக்கும் உள்ள இடைவெளியை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய படம் உத்தம வில்லன்.


இந்தப் படத்தின் வசூல் ரீதியிலான பெரும் தோல்வி, அதன் தயாரிப்பாளரான லிங்குசாமி பிரதர்ஸை பெரும் சிக்கலில் தள்ளிவிட, அதிலிருந்து மீளப் போராடி வருகிறார்கள். அந்த அளவு நஷ்டம் தந்த படம் இந்த வில்லன்.
3. 10 எண்றதுக்குள்ள

3. 10 எண்றதுக்குள்ள

ஐ படத்திலேயே விக்ரம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டார் எனும் அளவுக்கு எதிர்மறை விமர்சனங்கள். உடனடியாக ஒரு அதிரடி ஆக்ஷன் படம் தரலாம் என்ற முடிவோடு அவர் ஒப்புக் கொண்ட படம் 10 எண்றதுக்குள்ள. பத்து நாட்கள் கூட பாக்ஸ் ஆபீஸில் தாக்குப் பிடிக்க முடியாத இந்தப் படம் கடந்த ஆண்டின் மிகப் பெரிய தோல்விப் படங்களில் ஒன்று.


4. என்னை அறிந்தால்

4. என்னை அறிந்தால்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை அதன் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ சொல்லாமல், படம் பார்த்த சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மனம் போன போக்கில் அடித்துவிடும் போக்கு நிலவும் காலமிது. என்னை அறிந்தால் படம் பெரிய ஹிட், 100 கோடியை வசூலித்து குவித்துவிட்டது என்றெல்லாம் சிலர் பேஸ்புக், ட்விட்டர்களில் மீம்ஸ்கள் போட்டுத் தள்ள, பல ஆன்லைன், தொலைக்காட்சி ஊடகங்கள் அதையே செய்தியாக்கிவிட்ட பரிதாபம் இந்தப் படத்துக்கு நடந்தது.


அஜீத் நடிக்க, கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படம், கவுதம் மேனன் இழந்த நல்ல பெயரை சம்பாதிக்க ஓரளவு உதவியது. ஆனால் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் சம்பாதிக்க உதவவில்லை. அதனால் ப்ளாப் லிஸ்டில் சேர்ந்திருக்கிறது!


5. காக்கிச் சட்டை

5. காக்கிச் சட்டை

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த படம் இது. சிவகார்த்திகேயனின் முதல் பெரிய பட்ஜெட் படமும் கூட. வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த வெற்றி மிதப்பில் கொஞ்சம் அகலக் கால் வைத்தால் வழுக்கிய படம். தயாரிப்பாளருக்கு ரூ 12 கோடி வரை நஷ்டம் என்றார்கள். ஆனால் நஷ்டம் குறித்து யாரும் வாய் திறக்கவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் உஷாராக சொந்தப் படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.


6. மாஸ்.. மாசிலாமணி... மாசு

6. மாஸ்.. மாசிலாமணி... மாசு

தலைப்பிலேயே இத்தனை தடுமாற்றத்துடன் வந்த வெங்கட் பிரபு - சூர்யாவின் இந்தப் படமும் ஏதோ ஒரு வெளிநாட்டுப் படத்தின் காப்பிதான் என்பதை, சமீபத்தில் வந்த ஓம் சாந்தி ஓம் பார்த்தபோது புரிந்தது. என்ன காப்பியடித்தாலும், படம் எடுபடவில்லை. சிங்கம் 2-ல் நிமிர்ந்து நின்ற சூர்யாவுக்கு அஞ்சான் பெரிய அடி. அடுத்தது இந்த மாசு.


7. எலி

7. எலி

நடிச்சா ஹீரோதான்... காமெடியன் வேஷமே இப்போதைக்கு வேணாம் என்ற முரட்டுப் பிடிவாதத்துடன் வடிவேலு பண்ணிய படம் இந்த எலி. படத்தை இயக்கியவர் யுவராஜா வடிவேலா என்று கேட்கும்படி இருந்தன காட்சிகள். சிரிப்பு நடிகர் படத்தில் மருந்துக்கும் சிரிப்புக் காட்சிகளே இல்லை என்றால் எப்படி எடுபடும்? அப்படி விழுந்ததுதான் எலியும். படம் மெகா நஷ்டம். வடிவேலு மீது தயாரிப்பாளர் வழக்குப் போடும் அளவுக்குப் போய்விட்டது விவகாரம்!


8. மாரி

8. மாரி

தனுஷின் தன்னம்பிக்கை கொஞ்சம் ஓவர்டோஸாகிவிட்டதன் விளைவுதான் மாரி படம். தனுஷை ரவுடியாக கஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்டாலும், படத்தின் பலவீனமான திரைக்கதை காலை வாரிவிட்டது. இருந்தாலும் அதை ஏற்க மனசில்லாமல், மாரி பார்ட் 2 எடுக்கப் போகிறேன் என அறிவித்திருக்கிறார் தனுஷ்.
9. வலியவன்

9. வலியவன்

என்னடா இந்தப் படத்தை டாப் டென் லிஸ்டில் கொண்டு வராங்களேன்னு யோசிக்கிறீங்களா... காரணம் இருக்கு. எங்கேயும் எப்போதும் படம் இயக்கிய சரவணனின் மூன்றாவது படம் இது. முதல் படம் வெற்றி, அடுத்த படமான இவன் வேற மாதிரி சுமார். அடுத்ததாக இந்த வலியவனில், மார்க்கெட்டே இல்லாத ஜெய், ஆன்ட்ரியாவை வைத்து ரூ 17 கோடிகளை வாரியிறைத்தார்கள். படம் வெளியான சுவடே தெரியாமல் போனது. பெரிய நஷ்டம். பட்ஜெட் மற்றும் ஸ்க்ரிப்ட் என அனைத்து வகையிலுமே ஒரு படத்தை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு வலியவன் ஒரு சாட்சி.


10. இஞ்சி இடுப்பழகி

10. இஞ்சி இடுப்பழகி

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படத்தில் அனுஷ்கா, ஆர்யா நடித்திருந்தனர். அனுஷ்காவின் உடம்பை நம்பி (உடல் பருமனை) எடுக்கப்பட்ட இந்தப் படம், பலவீனமான திரைக்கதை, பிரச்சார நெடி காட்சிகள் போன்றவற்றால் எடுபடாமல் போனது.


English summary
Here is the top 10 flop movies list of the year 2015 in Tamil Cinema.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil