twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2021 ல் அதிகம் சம்பளம் வாங்கிய டாப் 10 நடிகர்கள்... இதில் உங்க ஃபேவரைட் ஹீரோ இருக்காரா ?

    |

    சென்னை : தென்னிந்திய மொழி படங்களுக்கு, குறிப்பாக தமிழ் படங்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான அண்ணாத்த, மாநாடு போன்ற பல படங்கள் பிற மாநிலங்களில் மட்டுமின்றி, பிறகு நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவித்துள்ளன.

    6 நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை.. ரிஸ்க் எடுத்த நாயகன்.. வெளியானது 'மீண்டும்' படத்தின் ட்ரெயிலர்! 6 நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை.. ரிஸ்க் எடுத்த நாயகன்.. வெளியானது 'மீண்டும்' படத்தின் ட்ரெயிலர்!

    உலகம் முழுவதும் மவுசு அதிகரித்து வருவதால் தென்னிந்திய நடிகர்கள், குறிப்பாக தமிழ் நடிகர்கள் பலர் தங்களின் சம்பளத்தை உயர்த்தி உள்ளனர். பல நாளிதழ்கள், ஆன்லைனில் வெளியான புள்ளி விபரங்களின் அடிப்படையில் 2021 ம் ஆண்டு அதிகமான தொகையை சம்பளமாக வாங்கிய டாப் 10 நடிகர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பிரபாஸ்

    பிரபாஸ்

    பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமான பலரின் ஃபேவரைட் ஹீரோ ஆகி விட்டார். அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் போட்டி போட்டு வருகின்றனர். பாகுபலி படத்திற்கு பிரபாஸிற்கு ரூ.35 முதல் 45 கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர் நடித்து வரும் பான் இந்தியன் படமான ஆதிபுருஷ் படத்திற்கு பிரபாஸிற்கு ரூ.150 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

     விஜய்

    விஜய்

    லாபத்தில் கிடைக்கும் பங்கையும் சேர்த்து விஜய் ஒரு படத்திற்கு ரூ.45 முதல் 55 கோடி வரை மட்டுமே சம்பளமாக வாங்கி வந்தார். பிகில் படத்தில் தனது சம்பள தொகையை ரூ.50 கோடியாக உயர்த்தினார் விஜய். மாஸ்டர் படத்திற்கு இந்த சம்பள தொகை இரண்டு மடங்காக்கப்பட்டு, ரூ.100 கோடி சம்பளமாக பேசப்பட்டது. தற்போது தில் ராஜு தயாரிக்கும் தளபதி 66 படத்திற்காக விஜய்க்கு ரூ.125 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ரஜினி எந்திரன், தர்பார் உள்ளிட்ட படங்களுக்கு ரூ.118 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வி அடைந்ததால் அதற்கு பிறகு ரஜினி தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளார். கடைசியாக நடித்த அண்ணாத்த படத்திற்கு ரஜினி ரூ.58 கோடிகளை மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளார்.

    அஜித்

    அஜித்

    அஜித் ஒரு படத்திற்கு சராசரியாக ரூ.40 முதல் 45 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடிக்க அஜித்திடம் டீல் பேசி உள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். தொடர்ச்சியாக மூன்று படங்களுக்கும் சேர்த்து ரூ.120 கோடி வரை அஜித்திற்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

     கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    பல பிளாக் பஸ்டர் படங்களை 1990 களில் இருந்து கொடுத்து வரும் கமல் ஒரு படத்திற்கு ரூ.15 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால் தற்போது நடித்து வரும் இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடிக்க கமலுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் உயர்த்தி பேசப்பட்டுள்ளதாம்.

    சூர்யா

    சூர்யா

    தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளில் அதிக வரவேற்பை பெற்ற படங்களை கொடுத்தவர் என்றால் அது சூர்யா தான். ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த சூர்யா, தற்போது ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

    தனுஷ்

    தனுஷ்

    முதலில் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த தனுஷ், அசுரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தினார். பட்டாஸ் படத்திற்காக ரூ.15 கோடி சம்பளம் வாங்கிய தனுஷ், தற்போது சம்பள தொகையை ரூ.17 கோடி வரை உயர்த்தி உள்ளார்.

    விக்ரம்

    விக்ரம்

    தொடர்ந்து படங்கள் நடித்து வந்த போது ரூ.8.5 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார் விக்ரம். கடாரம் கொண்டான் படத்திற்கு ரூ.9 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார். ஆனால் அதற்கு பிறகு நடிக்கும் படங்களுக்கு ரூ.15 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம் விக்ரம்.

    கார்த்தி

    கார்த்தி

    கைதி படத்திற்கு முன்பு வரை ஒரு படத்திற்கு ரூ.6.5 கோடி முதல் 8 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்தார் கார்த்தி. ஆனால் கைதி படத்திற்கு பிறகு இவர் நடித்த பல படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றி ஆனதாலும், பொன்னியின் செல்வன் போன்ற மெகா பட்ஜெட் படங்களில் நடிக்க கமிட் ஆனதாலும் தனது சம்பளத்தை ரூ.8 முதல் 10 கோடி வரை கார்த்தி உயர்த்தி உள்ளார்.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    ஒரு டஜனுக்கும் அதிகமான படங்களை கைவசம் வைத்து, பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்க ரூ.8 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். உப்பன்னா படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தி விட்டாராம் விஜய் சேதுபதி. ஆனால் ஷாகிப் கபூருடன் நடிக்கும் படத்திற்கு விஜய் சேதுபதிக்கு ரூ.55 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்திற்கு முன்பு வரை ஒரு படத்திற்கு ரூ.7.5 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார் விஜய் சேதுபதி.

    English summary
    Here we listed out top 10 highest paid actors in south indian cinema in the year 2021. Prabhas is in top position in this list. He had been paid Rs.150 crores for his upcoming film Adhipurush.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X