Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 3 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொன்மகள் வந்தாள் டூ மூக்குத்தி அம்மன் வரை.. 2020ல் ஹீரோயின்களை முன்னிலைப்படுத்திய டாப் 10 படங்கள்!
சென்னை: பொன்மகள் வந்தாள் திரைப்படம் முதல் மூக்கு அம்மன் வரை பல படங்கள் ஹீரோயின்களை முன்னிலைப் படுத்தி வந்தது.
2020ஆம் ஆண்டின் பெரும்பாலான நாட்களை கொரோனா தான் முடக்கி போட்டிருந்தது. இதனால் ரிலீஸுக்கு தயாராக இருந்த பல படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
சில படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. அவற்றில் ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தி வந்த படங்கள் குறித்து ஓர் பார்வை..
நீங்க என்ன செய்தாலும் எவிக்ஷனில் இருந்து தப்ப முடியாது.. அனிதாவை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்!

பொன்மகள் வந்தாள்
ஜோதிகா நடிப்பில், அவரது கணவர் சூர்யாவின் தயாரிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் பொன்மகள் வந்தாள். இந்த ஆண்டில் நேரடியாக அமேஸான் பிரைம்மில் வெளியான முதல் படம் என்கிற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு திரைத்துறையினரின் ஒரு தரப்பு எதிர்ப்பையும் மீறி, ஓடிடி தளத்தில் இந்தப்படம் வெளியிடப்பட்டது. ஜேஜே ஃபெரிடிரிக் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் லாயராக பட்டையை கிளப்பியிருந்தார் ஜோதிகா. இப்படம் முழுக்க முழுக்க ஜோதிகாவை மைய்யப்படுத்தியிருந்தது.

பெண்குயின்
ஈஸ்வர் காத்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தம் திரில்லர் திரைப்படம் பெண்குயின். இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் அமேஸான் பிரைமில் வெளியானது. மறுமணம் செய்து கொண்ட ஒரு தாயாக நடித்த கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

க பெ ரணசிங்கம்
பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் க பெ ரணசிங்கம். கே.ஜெ.ஆர் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்று உயிரிழந்த தனது கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவரப் போராடும் சாமானியப் பெண்ணான அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படம் ஜீ5 தளத்தில் வெளியானது.

டேனி
பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் இந்த ஆண்டு ஜீ5 தளத்தில் வெளியான படம் டேனி. இந்தப் படத்தில் வரலட்சுமி மர்ம கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார். இந்தப் படத்தில் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு நாயும் (டேனி) இணைந்து நடித்தது.

மிஸ் இந்தியா
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான படம் மிஸ் இந்தியா. அறிமுக இயக்குநரான ஒய். நரேந்திரநாத் இப்படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் எஸ். கொனேரு தயாரித்துள்ள இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆனது. இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். பிசினஸில் கலக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

சைலன்ஸ்
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவான படம் சைலன்ஸ். மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவானது. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் மாதம் வெளியானது. இந்தப் படமும் ஹீரோயின்களை மைய்யப்படுத்தியே இருந்தது.

வெல்வெட் நகரம்
அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான படம் வெல்வெட் நகரம். முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவான இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார்.

ஓ மை கடவுளே
இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ஓ மை கடவுளே. இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு தனது 'அக்ஸ்ஸ் பிலிம் பேக்டரி' மூலம் தயாரித்தார். இந்தப் படம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்தது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
இந்த ஆண்டு லாக்டவுனுக்கு முன்பாக திரையரங்கில் வெளியான திரைப்படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரித்து வர்மா திருடியாக நடிக்க பல டிவிஸ்ட்டுகளுடன் ரசிக்ரகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இப்படம்.

மூக்குத்தி அம்மன்
ஆர்.ஜே பாலாஜி மற்றும் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான படம் மூக்குத்தி அம்மன். நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். நயன்தாராவுக்காகவே உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.