»   »  நீங்க எல்லாம் நல்லா வருவீங்க…

நீங்க எல்லாம் நல்லா வருவீங்க…

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

சினிமா உலகம் கவர்ச்சிகரமானது.. திரைவானில் தினம் தினம் புதிய நட்சத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

சிலர் மட்டுமே இந்த உலகில் வெற்றி பெருகின்றனர். ஒரு சிலரோ ஒரு சில திரைப்படங்களுடன் மறைந்துவிடுகின்றனர்.

அறிமுகமான படம் சூப்பர் ஹிட் ஆனதில் தொடங்கி கைவசம் வரிசையாய் படங்களை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நடிகைகள், நடிகையர்கள் தான் மக்கள் மனதில் நிற்கின்றனர்.

விமர்சனத்தில் நீங்க எல்லாம் நல்லா வருவீங்க என்ற பாராட்டு ஒருசில நடிகர் நடிகையர்களுக்கு மட்டுமே கிடைக்கும். திரைவானில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் புதிய நடிகர், நடிகையர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

அறிமுகம் என்னவோ கும்கியில்தான். ஆனால் முதலில் வெளிவந்தது சுந்தரபாண்டியன். கவிதை பேசும் கண்கள் என்றும்... கவர்ச்சியை நம்பாத நடிகை என்றும் பேசப்படும் லட்சுமி மேனன் கையில் அரைடஜன் படங்கள் உள்ளன.

நஸ்ரியா நஷீம்

நஸ்ரியா நஷீம்

நேரம் படத்தில் அறிமுகம்... இப்போது ராஜா ராணி படமும் சூப்பர் ஹிட்... நையாண்டி தயார் நிலையில் உள்ளது. இளம் நாயகர்கள் முதலில் டிக் செய்யும் நடிகையாக மாறிவிட்டார் நஸ்ரியா நஷீம்

ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகம். ஆனாலும் துறுதுறு நடிப்பில் பலரது மனதில் இடம்பிடித்துவிட்டார் ஸ்ரீதிவ்யா.

நந்திதா

நந்திதா

அட்டகத்தியில் அறிமுகம்... எதிர்நீச்சல். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வரிசையாய் சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ஹிட் நடிகை என்று பெயரெடுத்துள்ளார்.

பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்த்

180, வாமனன் படங்களில் நடித்தவர் பிரியா ஆனந்த். ஸ்ரீதேவியுடன் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்திலும் நடித்திருந்தார். எதிர்நீச்சல் திரைப்படம்தான் அவரை அடையாளப்படுத்தியது. இதைத் தொடர்ந்து பல படங்களில் புக் ஆகியுள்ளார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகம், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வரிசையாய் படங்கள் ஹிட் ஆகவே சூப்பர் ஹிட் நடிகராக உயர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி.

சிவா

சிவா

ரேடியோ ஜாக்கியான சிவாவிற்கு சென்னை 600028 படம்தான் அறிமுகம், தற்போது வணக்கம் சென்னை வரை பல படங்களில் நடித்து தனி ரசிகர் வட்டத்தைப் பெற்றுள்ளார்.

சிவகார்த்திக்கேயன்

சிவகார்த்திக்கேயன்

டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரான சிவகார்த்திக்கேயன் மெரினா தொடங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரை வரிசையாய் ஏழு படங்களிலும் பேசப்படும் வெற்றியை பெற்றுள்ளார்.

தினேஷ்

தினேஷ்

சின்னச் சின்ன வேடங்களில் நடித்த தினேஷ் அட்டகத்தி படத்தில் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அறிமுக படத்திலேயே நல்ல பெயர் கிடைத்துள்ளது.

விமல்

விமல்

பசங்க படத்தில் அறிமுகம் அதைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற வாகைசூடவா படத்தின் ஹீரோ என பேசப்பட்ட விமல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

தாத்தா சிவாஜி, அப்பா பிரபு என பலமான திரை உலக பின்னணி. கும்கி படத்தில் அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். தொடர்ந்து பிரபல இயக்குநர்களின் படங்களில் புக் ஆகி புதுமுக ஹீரோ சூப்பர் ஹீரோவாக உயர்ந்துவருகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    kollywood is always at its glamorous best it witnessed many fresh faces which show the sign of promising future. Actors and actresses entered the k’town to make it big this year. Few of them did taste success, while others are happy about their mark in kollywood.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more