»   »  தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்.. தென்னிந்திய நடிகர்களில் 2வது இடம்!

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்.. தென்னிந்திய நடிகர்களில் 2வது இடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ் வாய்ந்த 10 நடிகர்கள் யார் என்று சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில், கீழே வரும் 10 நடிகர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் மக்கள்.

பணம், புகழ், இளமை, நடிப்பு மற்றும் மக்கள் மத்தியில் இவர்களின் படங்களுக்கு உள்ள செல்வாக்கு, படங்களின் வசூல், வாங்கும் சம்பளம் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் சாண்டல்வுட் மற்றும் மல்லுவுட் நடிகர்களுக்கு இந்தப் பட்டியலில் இடமில்லை( இதே ஹீரோயினா இருந்தா கேரள நடிகைகள் முதல்ல இருப்பாங்க).

யாரெல்லாம் இந்தப் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர், அவர்களின் தரவரிசை என்ன என்பதை காணலாம்.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி நாயகன் பிரபாஸ் இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்று இருக்கிறார், தெலுங்கு மற்றும் தமிழில் உள்ள மூத்த நடிகர்கள் அனைவரையும் ஓரங்கட்டி நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். 35 வயதாகும் டோலிவுட்டின் ரிபல் யங் ஸ்டாருக்கு, பாகுபலி படத்திற்குப் பின்னர் ரசிகர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். பாகுபலி 2 வுக்கு பின்னர் சாரின் புகழ் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றனவாம், நீங்க கலக்குங்க ஜீ..

விஜய்

விஜய்

தமிழ் சினிமாவின் இளைய தளபதிக்கு இந்தப் பட்டியலில் 2 வது இடம் தமிழில் விஜய் நடிக்கும் படங்கள் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன, சமீபத்தில் ஜில்லா ஆந்திராவில் வெளியாகி நன்கு கல்லா கட்டியது. இதனால் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் செல்வாக்கு பெற்ற 2 வது நபராக விஜய் திகழ்கிறார். தற்போது சாரின் புலிக்காக ஆல் இந்தியாவும் வெய்ட்டிங்கில் இருக்கிறது.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

தெலுங்கு தேச இளம் நடிகர்களில் அல்லு அர்ஜுனிற்கு ஒரு தனியிடம் உண்டு, 32 வயதாகும் அல்லு அர்ஜுன் தெலுங்கில் அதிகம் ஹிட் கொடுக்கும் நடிகராகத் திகழ்கிறார். திருமணம் ஆனாலும் கூட தெலுங்கு இளம்பெண்கள் அல்லுவின் மீது பைத்தியமாக இருக்கிறார்கள், சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த சன் ஆப் சத்தியமூர்த்தி திரைப்படம் உலகமெங்கும் சுமார் 900 மில்லியன்களை வசூலித்து சாதனை புரிந்தது.

மகேஷ்பாபு

மகேஷ்பாபு

டோலிவுட்டின் இளவரசர் என்று அழைக்கப்படும் மகேஷ்பாபுவிற்கு இந்தப் பட்டியலில் 4 வது இடம், தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த மகேஷ் பாபு சமீபத்திய தோல்விகளால் சற்று கீழிறங்கி இருக்கிறார். தற்போது ஸ்ரீமந்துடு (தமிழில் செல்வந்தன்) மூலமாக மீண்டும் பார்முக்குத் திரும்பி இருக்கிறார் இளவரசர்.

ராம் சரண்

ராம் சரண்

மகதீரா நாயகன் ராம் சரண் இந்தப் பட்டியலில் 5 வது இடம் பிடித்திருக்கிறார், தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தற்போது சிரஞ்சீவி நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். மாவீரன்(மகதீரா தமிழ் பதிப்பு) மூலம் தமிழிலும் கணிசமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் ராம் சரண்.

தனுஷ்

தனுஷ்

தமிழ் நடிகர் தனுஷ் இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 6, வேலையில்லாப் பட்டதாரி படத்தின் வெற்றி மற்றும் காக்கா முட்டை படத்தை தயாரித்தது போன்ற காரணங்களால் தனுஷின் புகழ் அதிகரித்து இருக்கிறது.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

ஆந்திர சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை வைத்திருக்கும் பவன் கல்யாண் 7 வது இடத்தைப் பிடித்திருக்கிறார், 43 வயதானாலும் இன்னும் இளம் நடிகர்களுக்கு நடிப்பில் மட்டுமல்லாது வசூலிலும் டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பவன் கல்யாண். கடந்த வருடத்தில் இவர் கட்சி தொடங்கியபோது கூகுள் ஆண்டவரே கதறும் அளவிற்கு இவரை இணையத்தில் வலைவீசித் தேடியிருக்கின்றனர் ரசிகர்கள்.

ரவி தேஜா

ரவி தேஜா

ரவி தேஜா நடித்த படங்களுக்கு ஆந்திர ரசிகர்களிடம் அபரிமிதமான வரவேற்பு இருப்பதால் 47 வயதிலும் யங் ஹீரோக்களுக்கு டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ரவி தேஜா. அடுத்தடுத்து இவரின் நடிப்பில் வெளிவர இருக்கும் பெங்கால் டைகர் மற்றும் கிக் 2 படங்களின் வரவை இப்போதே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ஆந்திர வாலாக்கள்.

விக்ரம்

விக்ரம்

சீயான் இந்தப் பட்டியலில் 9 வது இடத்தைப் பிடித்திருக்கிறார், வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் நடித்தாலும் கூட இவரின் நடிப்புக்கு தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் அடிமையாகி இருக்கின்றனர். அடுத்ததாக விக்ரம் நடித்து வெளிவர இருக்கும் 10 எண்றதுக்குள்ள திரைப்படம் அக்கட சீமையிலும் வெளியாக இருக்கின்றது.

அஜீத்குமார்

அஜீத்குமார்

தல அஜீத் இந்தப் பட்டியலில் 10 வது இடத்தைப் பிடித்திருக்கிறார் சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ஆந்திராவில் வெளியாகி அங்கு நல்ல வசூலைக் குவித்ததால் ஆந்திராவிலும் அஜீத்திற்கு ரசிகர்கள் உருவாக ஆரம்பித்துள்ளனர். தற்போது அஜீத்தின் நடிப்பில் உருவாகி வரும் அஜீத் 56 திரைப்படத்திற்கு பின் இது இன்னும் உயரலாம்.

English summary
Top 10 South Indian Actors List.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil