Don't Miss!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- News
"சீனே மாறிடுச்சே".. ஒருத்தருமே கிட்ட இல்லயாம்.. தனித்து விடப்பட்டாரா சசி.. காரணமே "அவர்"தான் போலயே
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
2021ல் தமிழில் மாஸ் காட்டிய ரீமேக் படங்கள்... மக்கள் மனதை வருடிய ஹிட் லிஸ்ட்
சென்னை: மற்ற மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் அவ்வப்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகிறது
அவ்வாறு வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெறுகிறது .
சென்னைக்கு
வெளியே
உறவினர்
மூலம்
பள்ளிக்கூடம்
கட்டும்
டாப்
நடிகர்..
எல்லாம்
அதற்கான
மூவ்வாம்?
அந்த வகையில் கடந்த 2021ல் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்ற சிறந்த 3 படங்களை பற்றி இங்கு நாம் காண்போம்

நெற்றிக்கண்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா நடித்து தயாரித்த திரைப்படம் நெற்றிக்கண். இயக்குனர் மிலிந் ராவ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் 2011ஆம் ஆண்டு கொரிய மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற பிளைன்ட் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். நயன்தாரா முதல்முறையாக பார்வையற்ற பெண்ணாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அஜ்மல் இதில் வில்லனாக மிரட்டி இருப்பார் . முற்றிலும் த்ரில்லர் கதை களத்தில் உருவான நெற்றிக்கண் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. 2021ல் வெற்றி பெற்ற மிகச்சிறந்த ரீமேக் படமாக நெற்றிக்கண் உள்ளது

ஓமணப் பெண்ணே
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரிது வர்மா நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் பெல்லி சூபுளு. விஜய் தேவரகொண்டாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது. பெல்லி சூபுளு தமிழில் ஓமணப் பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் லீட் ரோலில் நடித்திருந்தனர். இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியிருந்தார். அழகான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவான ஓமணப் பெண்ணே நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. எதிர்பார்த்தது போலவே காதலர்களை இந்த படம் வெகுவாக கவர்ந்தது. 2021ல் வெற்றிபெற்ற மிகச்சிறந்த ரீமேக் படமாக ஓமன பெண்ணே ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.
Recommended Video

டெடி
அனைவரையும் யோசிக்க வைக்கும் வித்தியாசமான கதைகளை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டெடி. ஆர்யா, சாயிஷா,சதீஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான டெடி பிரபல ஹாலிவுட் திரைப்படமான டெட் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோச்சடையான் படத்திற்கு பிறகு மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் டெடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. காதல்,காமெடி,ஆக்ஷன், என முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான டெடி நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ள டெடி 2021ல் வெற்றி பெற்ற மிகச்சிறந்த ரீமேக் படமாக உள்ளது.

கதை அம்சம் உள்ள
ரீமேக் படங்கள் என்று வரும்பொழுது சில இயக்குனர்கள் அப்படியே ஒரிஜினல் வெர்சன் எப்படி இருக்கிறதோ அப்படியே எடுப்பார்கள் . ஆனால் சிலர் கதையில் சிறு சிறு மாற்றங்கள் கொண்டு வந்து மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் எப்போதும் ரீமேக் செய்ய பட வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமும் கூட. ஒவ்வொவருவரும் தங்களது தாய்மொழியில் படங்களை பார்க்கும் பொழுது உணர்வு பூர்வமாக இருக்கும் . பல நல்ல ரீமேக் படங்கள் ரசிகர்களை மிக பெரிய அளவில் மகிழ்வித்து உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.