For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த ஆண்டு அதிகம் ஏமாற்றிய டாப் 5 இயக்குநர்கள் இவங்க தான்.. அடுத்த வருஷம் கம்பேக் கொடுப்பாங்களா?

  |

  சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சிம்பு என எந்த நடிகராக இருந்தாலும் சிறப்பான இயக்குநர்கள் அமைந்தால் மட்டுமே திரையில் நடிகர்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அல்லது இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க முடியும் என்பதற்கு இந்த ஆண்டு மிகப்பெரிய உதாரணங்கள் அமைந்தன.

  இந்த ஆண்டு ரசிகர்கள் ரொம்பவே பல பெரிய படங்களுக்கு காத்திருந்து கடைசி நேரத்தில் படம் வெளியான பின்னர் இப்படி நம்ம ஹீரோவுக்கு சொதப்பல் படத்தை கொடுத்துட்டாரே இயக்குநர் என ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த ஆண்டு பல இயக்குநர்களை பக்கம் பக்கமாக திட்டித் தீர்த்துள்ளனர்.

  அந்த வரிசையில் இடம் பிடித்துள்ள இயக்குநர்கள் அடுத்த ஆண்டு அந்த பிரச்சனைகளை சரி செய்து கம்பேக் கொடுக்கவும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு சொதப்பிய டாப் 5 இயக்குநர்கள் யார் யாரென இங்கே பார்ப்போம் வாருங்கள்..

  மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் ! மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !

  அனுதீப் கேவி - பிரின்ஸ்

  அனுதீப் கேவி - பிரின்ஸ்

  தெலுங்கில் ஜதி ரத்னலு எனும் தரமான படத்தை இயக்கி ஹிட் அடித்த இயக்குநர் அனுதீப் கேவியை நம்பி பைலிங்குவலில் அசத்தலாம் என நினைத்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு தரமான சம்பவத்தை செய்து டாக்டர், டான் படங்களில் எடுத்த பெயரை டோட்டலாக காலி செய்து விட்டார். பிரின்ஸ் படத்தை ஓடிடியில் கூட பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் புலம்பித் தீர்த்து விட்டனர்.

  அஜய் ஞானமுத்து - கோப்ரா

  அஜய் ஞானமுத்து - கோப்ரா

  சியான் விக்ரம் பல கெட்டப்புகளில் நடிக்கிறார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இர்ஃபான் பதானை எல்லாம் நடிக்க வைத்து பெரிய சம்பவம் செய்யப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை குழப்போ குழப்பு என குழப்பி சியான் விக்ரமின் அத்தனை உழைப்பையும் வீணாக்கி விட்டார் அஜய் ஞானமுத்து என ரசிகர்கள் திட்டித் தீர்த்து விட்டனர்.

  பாண்டிராஜ் - எதற்கும் துணிந்தவன்

  பாண்டிராஜ் - எதற்கும் துணிந்தவன்

  சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியானாலும் உலகளவில் ஏகப்பட்ட விருதுகளை வென்று சூர்யாவுக்கு மிகப்பெரிய பெயரை தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு எடுத்துக் கொடுத்தது. கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் பண்ணது போல சூர்யாவுக்கு எதற்கும் துணிந்தவன் சூப்பர் ஹிட் படமாக வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சொதப்பலான ஸ்க்ரீன் பிளே காரணமாக மறுபடியும் அஞ்சான் எஃபெக்டில் ஒரு படத்தை கொடுத்து ஏமாற்றி விட்டார் இயக்குநர் பாண்டிராஜ்.

  நெல்சன் - பீஸ்ட்

  நெல்சன் - பீஸ்ட்

  இந்த ஆண்டு அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படமாகவே விஜய்யின் பீஸ்ட் மாறிவிட்டது. கடுமையான விமர்சனங்கள் வந்தாலும், ஹீரோ விஜய்க்காக படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. கோலமாவு கோகிலா, டாக்டர் பட ட்ரீட்மென்ட்டை மட்டும் இயக்குநர் நெல்சன் கொடுத்திருந்தால் இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை பீஸ்ட் பெயரை போலவே பண்ணியிருக்கும். ஆனால், இயக்குநர் நெல்சன் கிடைத்த வாய்ப்பை வேஸ்ட் பண்ணிவிட்டார். வரும் 2023ல் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் மூலம் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஹெச். வினோத் - வலிமை

  ஹெச். வினோத் - வலிமை

  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார். பெண்களை மையப்படுத்திய கதை, பிங்க் ரீமேக் படம் என பொறுத்துக் கொண்ட அஜித் ரசிகர்கள் 2 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு தல தெறிக்கவிடப் போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அம்மா சாப்பிட்டு ஆறு நாள் ஆச்சு, அட்வைஸ் கிளைமேக்ஸ் என பெரிய பிளாக்பஸ்டர் படமாக வர வேண்டிய வலிமையை சொதப்பி விட்டார் என ட்ரோல்கள் பறந்தன. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த நிலையில், படம் மட்டும் பட்டாசாக இருந்திருந்தால் இந்த ஆண்டு கோலிவுட் சினிமாவுக்கு இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட்டாக இந்த படம் அமைந்திருக்கும். வலிமை மிஸ் ஆனாலும், மீண்டும் நம்பிக்கை வைத்து அஜித் துணிவு படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள நிலையில், அடுத்த வருஷம் ஹெச். வினோத் தூள் கிளப்புவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த லிஸ்ட்டில் இல்லாத உங்களை அதிகம் ஏமாற்றிய இயக்குநர்கள் யாராவது இருந்தா கமெண்ட் பண்ணுங்க..

  English summary
  Top 5 Directors who missed the Blockbuster chance this year due to their week screenplay list is here. Beast, Valimai, Etharkum Thunindhavan, Prince and Cobra movie directors spotted in the list.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X