»   »  விருது மற்றும் வசூலில் பட்டையைக் கிளப்பிய 'டாப் 5' திரைப்படங்கள்

விருது மற்றும் வசூலில் பட்டையைக் கிளப்பிய 'டாப் 5' திரைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இந்திய சினிமாவுலகில் மலையாள படங்களுக்கு என்று ஒரு தனி மவுசு எப்போதும் உண்டு. அதற்குக் காரணம் தமிழ், தெலுங்கு சினிமாக்களைப் போல மசாலாப் படங்களாக இல்லாமல் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான்.

மலையாள உலகைப் பொறுத்தவரை படங்களின் பட்ஜெட் எப்போதுமே கம்மிதான். தாம், தூம் என்று அவர்கள் பணத்தை வாரி இறைப்பதில்லை அதற்கு ஈடாக நல்ல பல தரமான படங்களை ரசிகர்களை திருப்திப்படுத்தும் வண்ணம் கொடுத்து விடுவார்கள்.

அந்த வகையில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் மற்றும் அவற்றின் வசூல் குறித்து ஒரு பார்வை.

திரிஷ்யம்

திரிஷ்யம்

இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மோகன்லால் - மீனா நடிப்பில் கடந்த 2013 ம் ஆண்டில் வெளியான இப்படம் கேரள சினிமாவில் சரித்திரம் படைத்தது. வெறும் 4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 75 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. மலையாளப் படங்கள் 15 கோடிகளை வசூலித்தாலே பெரிய விஷயம் என்னும்போது 75 கோடிகளை வசூலித்த திரிஷ்யம் ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகிலும் இதுவரை இல்லாத வசூலைப் பெற்று சரித்திரம் படைத்தது.

150 நாட்கள்

150 நாட்கள்

அதிகபட்ச சாதனையாக 150 நாட்கள் ஓடி சாதனை படைத்த இப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. இதில் இந்தி தவிர மற்ற மொழிகளில் படம் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரள அரசின் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் திரிஷ்யம் வாங்கிக் குவித்தது.

பிரேமம்

பிரேமம்

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ஆட்டோகிராப் பாணியிலான ஒரு கதைதான் இந்த பிரேமம். கதை பழசு என்றாலும் அதை சொன்ன விதம், நிவின் பாலியின் நடிப்பு, அல்போன்ஸ் புத்திரனின் இயக்கம் மற்றும் பாடல்கள் ஆகியவை காரணமாக வசூலில் பட்டையைக் கிளப்பியது பிரேமம். இந்தப் படத்தின் பட்ஜெட்டும் 4 கோடிதான் ஆனால் வசூலித்த தொகை 63 கோடி. திரிஷ்யம் போலவே இப்படத்தின் ரீமேக்கிலும் தமிழ், தெலுங்குலகினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெங்களூர் டேஸ்

பெங்களூர் டேஸ்

நஸ்ரியா நசீம், பகத் பாசில், நிவின் பாலி, துல்கர் சல்மான், பார்வதி, இஷா தல்வார் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நல்ல விமர்சனங்கள் மற்றும் வரவேற்பு ஆகியவை காரணமாக வசூலில் இப்படம் குறை எதுவும் வைக்கவில்லை. 9 கோடியில் எடுக்கப்பட்ட பெங்களூர் டேஸ் பாக்ஸ் ஆபீஸில் 50 கோடிகளுக்கும் குறையாமல் வசூல் செய்தது. மலையாளத்தில் வெற்றி பெறும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்ய்யப்பட வேண்டும் என்ற விதிக்கு இப்படமும் விதிவிலக்கல்ல, தமிழில் தற்போது இதன் ரீமேக் உருவாகி வருகிறது.

ட்வெண்டி 20

ட்வெண்டி 20

ட்வெண்டி 20 மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் பிரபலமாக ஆரம்பித்த சமயம் வெளியானதால் படத்தின் தலைப்பை ட்வெண்டி 20 என்றே வைத்து விட்டனர் போலும். மோகன்லால், மம்முட்டி, திலீப், சுரேஷ் கோபி மற்றும் ஜெயராம் என்று மலையாள முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் இணைந்து நடித்த படமிது. 7 கோடி செலவில் ஜோஷியின் கைவண்ணத்தில் உருவான இப்படம் சுமார் 7 வருடங்களுக்கு முன்னரே 30 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது . 50க்கும் அதிகமான மலையாள நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

ஒரு வடக்கன் செல்பி

ஒரு வடக்கன் செல்பி

நிவின் பாலி, மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான ஒரு வடக்கன் செல்பி மலையாளத்தில் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 4.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 21 கோடிகள் வரை வசூலித்துத் தந்தது. மேலும் 2015 ம் ஆண்டின் முதல் லாபகரமான படம் என்ற பெயரையும் ஒரு வடக்கன் செல்பி தக்க வைத்துக் கொண்டது.

மேலே சொன்ன 5 படங்களில் 3 படங்கள் இளம் மலையாள நடிகர் நிவின் பாலியின் நடிப்பிலும், 2 படங்களும் மோகன்லால் நடிப்பிலும் உருவான படங்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.

English summary
All Time Highest Grossing Malayalam Films List - Drishyam,Premam, Bangalore Days,Twenty:20 and Oru Vadakkan Selfie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil