For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிவகார்த்திகேயனின் ’டான்’ பார்க்க ரெடி ஆகிட்டீங்களா? இந்த 5 காரணங்களுக்காக படத்தை பார்க்கலாம்!

  |

  சென்னை: கோலிவுட்டின் எதிர்காலமாக உருவாகி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்தின் மூலம் வெகு விரைவிலேயே 100 கோடி வசூல் செய்த நாயகனாக மாறி விட்டார்.

  Recommended Video

  இந்த படத்துக்கு DON-னு ஏன் பேர் வச்சாங்க தெரியுமா Sivakarthikeyan Super Speech at Don press Meet

  முன்னணி நடிகர்கள் வரிசையில் பல நடிகர்களை பின்னுக்குத் தள்ளி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் நாளை (மே 13) வெளியாகிறது.

  சமீபத்தில், அந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் டான் படத்தை பார்க்க முக்கியமாக உள்ள டாப் 5 காரணங்கள் என்ன என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

  அனுமதியின்றி கார் பந்தயம் நடத்தியதாக பிரபல நடிகர் மீது வழக்கு...ரசிகர்கள் கோவம் அனுமதியின்றி கார் பந்தயம் நடத்தியதாக பிரபல நடிகர் மீது வழக்கு...ரசிகர்கள் கோவம்

  அட்லி அஸிஸ்டண்ட்

  அட்லி அஸிஸ்டண்ட்

  இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லி தமிழ் சினிமாவில் ராஜா ராணி மூலம் அறிமுகமானார். நடிகர் விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்கி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கி வருகிறார். அவரது உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தி டான் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ள நிலையில், படத்தில் ரிச் விஷுவல் மற்றும் எமோஷனல் கனெக்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  டாக்டர் ஜோடி

  டாக்டர் ஜோடி

  இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அழகு பதுமையாக நடித்த பிரியங்கா மோகன் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் படத்தில் நடித்துள்ளார். டாக்டர் படத்தை விட டான் படத்தில் பிரியங்கா மோகனுக்கு நடிக்க நிறைய ஸ்கோப் உள்ள நிலையில், செல்லம்மா டான் படத்தில் லேடி டானாக கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பிரைவேட் பார்ட்டியை தியேட்டரில் பார்க்கவே ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  ராக்ஸ்டார் அனிருத்

  ராக்ஸ்டார் அனிருத்

  தமிழ் சினிமா படங்கள் சமீப காலமாக ஹிட் ஆகிறதோ இல்லையோ, அனிருத் போடும் பாடல்கள் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு செல்கின்றன. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனிருத்தின் இசைக்கு நடனமாடி வருகின்றனர். தனுஷ் அனிருத் கூட்டணிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி தொடர்ந்து ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்துள்ளன. டான் படத்திலும் ஜலபுல ஜங், பே, பிரைவேட் பார்ட்டி என ஒவ்வொரு பாடல்களும் வெறித்தனமாக ஹிட் அடித்துள்ளன. பின்னணி இசையிலும் அனிருத் பின்னி எடுத்திருப்பார்.

  ஸ்ட்ராங்கான வில்லன்

  ஸ்ட்ராங்கான வில்லன்

  மாநாடு படத்தில் சிம்புவுடன் செத்து செத்து விளையாடி தலைவரே.. தலைவரே என பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய எஸ்.ஜே. சூர்யா டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆப்போசிட்டான ரோலில் நடித்துள்ளார். மெர்சல் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய போதே எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பால் மிரண்டுப் போன சிபி சக்கரவர்த்தி இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவை வேறலெவலில் பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது நடிப்புக்காகவே தியேட்டருக்கு பல ரசிகர்கள் கிளம்பி போவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழ்நாட்டின் டான்

  தமிழ்நாட்டின் டான்

  ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்கள் தமிழ்நாட்டின் டானாக நடித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய டானாக கேங்ஸ்டர் மட்டும் டான் இல்லை வாழ்க்கையில் நம்பிக்கையுடன் ஜெயிக்கும் ஒவ்வொரு மனிதனும் டான் தான் என Monday Motivational மாதிரி தனது வாழ்க்கையையே மாற்றி உள்ள நடிகர் சிவகார்த்திகேயனுக்காகவும் அவரது காமெடி, நடிப்பு, நடனம் என அத்தனை என்டர்டெயின் மென்ட் விஷயங்களுக்காகவும் டான் திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கலாம். இவை மட்டுமின்றி குக் வித் கோமாளி பிரபலங்களான சிவாங்கி, புகழ் காமெடி கலாட்டா, ஆர்ஜே விஜய், பாலசரவணன் நடிப்பு, சமுத்திரகனியின் அப்பா பாசம் என பல சூப்பரான விஷயங்கள் டான் படத்தில் உள்ளன.

  English summary
  Sivakarthikeyan’s Don movie will release on theaters tomorrow in a grand manner. Priyanka Mohan pairs opposite to Sivakarthikeyan after Doctor. Ciby Chakaravarthy’s directorial debut movie will expected to entertain to Tamil Cinema audience.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X