»   »  லேட்டா வந்தாலும் 'இது நம்ம ஆளு' ஹிட்டடிக்கும் ஏன் தெரியுமா?

லேட்டா வந்தாலும் 'இது நம்ம ஆளு' ஹிட்டடிக்கும் ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, ஜெய், சூரி இணைந்து நடித்திருக்கும் இப்படத்துக்கு குறளரசன் இசையமைத்திருக்கிறார்.


பாண்டிராஜ்-டி.ராஜேந்தர் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்நிலையில் பாக்ஸ் ஆபீஸில் இப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்பதற்கான 5 காரணங்களை இங்கே பார்க்கலாம்.


சிம்பு-நயன்தாரா

சிம்பு-நயன்தாரா

3 வருடங்கள் கடந்தாலும் கூட சிம்பு-நயன்தாராவின் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருவரும் ஏற்கனவே நிஜமான காதலர்கள் என்பது தான் ரசிகர்களின் இந்த அபரிமிதமான ஆர்வத்துக்குக் காரணம்.இதனால் கண்டிப்பாக இப்படம் ஹிட்டடிக்கும் என்று கூறுகின்றனர்.


பாண்டிராஜ்

பாண்டிராஜ்

முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற பாண்டிராஜின் படம் என்பதும் ரசிகர்களின் காத்திருப்புக்குக் காரணமாக உள்ளது. பாண்டிராஜின் எல்லாப் படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


350 திரையரங்குகள்

350 திரையரங்குகள்

நாளை தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 350 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் வேறு போட்டிப் படங்கள் இல்லாதது, அதிகத் திரையரங்குகள் போன்றவை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளன.


குடும்பத்துடன்

குடும்பத்துடன்

தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்றிருப்பதால் இது நம்ம ஆளு படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். இதுதவிர சூரி-சந்தானம் காமெடியும் குடும்ப ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நீண்ட வருடங்களாக

நீண்ட வருடங்களாக

ரசிகர்கள் நீண்ட வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்து ஒருவழியாக நாளை 'இது நம்ம ஆளு' வெளியாகிறது. இதனால் தாமதமாக வெளியாகும் இப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே ரசிகர்கள் போட்டிபோட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.


இந்த 5 காரணங்களும் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. எனினும் ரசிகர்களின் ரசனையை நாம் எப்போதும் சரியாக கணிக்க முடியாது என்பதால் வழக்கம்போல பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
Idhu Namma Aalu: Here are 5 reasons why this long awaited flick might do exceedingly well at the box office across Tamil Nadu and perhaps all over the world.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil