»   »  தமிழ் சினிமா 2017: டாப் 5 சீனியர் ஹீரோயின்கள்!

தமிழ் சினிமா 2017: டாப் 5 சீனியர் ஹீரோயின்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா மொத்தமாக மாறி இருக்கிறது. பெண்ணியத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்கள், கேரக்டர்கள் உருவாக்கப்படுகின்றன. அறம், தரமணி, அருவி, மகளிர் மட்டும் என்று வரிசையாக பெண்களை முன்னிறுத்தும் படங்கள் வெளியாகி ஹிட் அடிக்கின்றன. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் இன்னும் உருவாகியும் வருகின்றன. இந்த சூழலில் 2017 ஆம் ஆண்டின் டாப் 5 சீனியர் ஹீரோயின்களை வரிசைப்படுத்தினோம்.

நயன்தாரா

நயன்தாரா

2017ம் ஆண்டின் தொடக்கம் நயன் தாராவுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. மார்ச் இறுதியில் வெளியான நயனின் டோரா படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நயன் தாராவின் மார்க்கெட் கன்னாபின்னாவென்று எகிறி இருந்ததால் படம் பெரிய அளவில் பிசினஸ் ஆனது. லேடி சூப்பர் ஸ்டார், கட் அவுட் என்று நயனை உச்சிக்கு கொண்டு சென்றது இந்த படத்தின் புரொமோஷன். ஆனால் படம் ஏ சர்டிஃபிகேட் வாங்கியதால் குடும்ப ரசிகர்களைக் கவர இயலாமல் போனது. பேய் படங்களுக்கு குழந்தைகள்தான் முக்கிய ரசிகர்கள். அவர்கள் வராவிட்டால் எப்படி? எனவே பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

நயனை கழுகுகள் சூழ்ந்தன. நயன்தாரா அவ்வளவுதான்... திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விடுவார் என்ற ரீதியில் செய்திகள் வந்தன. அவர் சொந்தமாக தயாரித்த அறம் படத்துக்கும் சோதனைகள் தொடர்ந்தன. சோர்ந்துபோய் முடங்கி விடுவார் என்று நினைத்தவர்களுக்கு தனது அறம் படம் மூலம் அதிர்ச்சியைத் தந்தார். நயனை நாம் ஏன் தன்னம்பிக்கை பெண்ணாக போற்றுகிறோம் என்பதற்கு அறம் படமே சாட்சி. ஆட்சியர் மதிவதனியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் இப்படி ஒரு படத்தை தயாரித்ததற்கும் சேர்த்தே போற்றப்பட்டார். நயனின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்து முன்பை விட உயரத்துக்கு போயிருக்கிறது. ஆண்டுக்கு ஒரு படமாவது அறம் போல தரட்டும் இந்த மகராசி! ஒரு சோஷியல், ஒரு த்ரில்லர், ஒரு கமர்ஷியல், ஒரு ஹாரர் என்று வரிசையாக பட்டியல் போட்டு தனது கேரியரை அமைத்துக்கொள்ளும் நயனுக்கு வாழ்த்துக்கள்!

அனுஷ்கா

அனுஷ்கா

நயனாவது தோல்விகளுக்கு பிறகும் முடங்கி விடாமல் வெளியில் வந்தார். ஆனால் அனுஷ்காவின் உடல் எடை அவரை வீட்டுக்குள்ளேயே அடக்கி வைத்துவிட்டது. இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக எந்த ஹீரோயினும் செய்ய தயங்கும் ரிஸ்க்கை எடுத்து எடையை ஏற்றினார். ஆனால் குறைக்க முடியவில்லை. விளைவு அனுஷ்கா அவ்வளவுதான் என்று செய்திகள் கிளம்பின. வெளி இடங்களுக்கு குண்டாக வரும் அனுஷ்காவை ஃபோட்டோ எடுத்து பரிதாபத்தை ஏற்படுத்தின மீடியாக்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான அனுஷ்கா நடித்த பாகுபலி 2 படம் அனுஷ்காவின் கேரியரை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இப்போது அனுஷ்கா தந்திருப்பது இன்ப அதிர்ச்சி. எடையை வெகுவாக குறைத்து மீண்டும் பழைய அனுஷ்காவாக ஸ்லிம் உடலுக்கு மாறி இருக்கிறார். அனுஷ்காவும் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டுதான். லீட் ரோலில் நடிக்கும் பாகுமதி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜோதிகா

ஜோதிகா

திருமணத்துக்கு பின்னர் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அவரது இரண்டாவது படம் என்பதாலும், குற்றம் கடிதல் பிரம்மாவின் இயக்கம் என்பதாலும் மகளிர் மட்டும் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப இந்த படத்தின் ஆடியோ விழாவில் தமிழ் சினிமாவில் நிலவும் ஆணாதிக்கத்தை பற்றி அதிரடியாக பேசி அசத்தினார் ஜோதிகா. மகளிர் மட்டும் படமும் பெண்மையை தூக்கி பிடிக்கும் ஒரு பெண்ணிய படைப்பாகவே இருந்தது. ஜோதிகா அடுத்து நடிக்கும் நாச்சியார் படமும் இப்போதே சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு படம் என்றாலும் கதைப் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறார் ஜோதிகா.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

தரமணி, துப்பறிவாளன், அவள் என மூன்று படங்கள் ரிலீஸாகி இருந்தாலும் ஆண்ட்ரியாவின் கேரியருக்கே தரமணி ஒரு படம் போதும். சிங்கிள் மதராகவே வாழ்ந்து காட்டியிருந்தார் ஆண்ட்ரியா. மொத்த படத்தையும் தாங்கியிருந்த ஆண்ட்ரியாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இத்தனை நாட்களாக தங்க ஊசியை வைத்து பல் குத்திக்கொண்டிருந்த தமிழ் சினிமா கமர்ஷியல் இயக்குநர்களுக்கும் இது நெருக்கடியை தந்தது. இனி ஆண்ட்ரியா பெண்ணியம் போற்றும் கேரக்டர்களில் வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

அமலாபால்

அமலாபால்

அகல் விளக்கு என்ற ஒரு கேரக்டர். திருட்டுப்பயலே 2 படத்தில். முகநூல் அடிமையாகி அதன் மூலம் பிரச்னையாகி சமாளிக்க முடியாமல் திணறும் கேரக்டரை நன்றாக செய்திருந்தார் அமலாபால். திருமணமாகி விவாகரத்து பெற்று விட்டால் நடிகைகள் அம்மா, அண்ணி கேரக்டருக்கு தான் லாயக்கு என்பதை உடைத்து ஹீரோயினாகவும், லீட் ரோல்களிலும் தேர்ந்தெடுத்து கமர்ஷியல், பெர்ஃபார்மன்ஸ் இரண்டு ஏரியாக்களிலும் பயணிக்கிறார் அமலாபால்.

- ஆர்ஜி

English summary
Here is the list of top 5 senior heroines of Tamil cinema 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X