»   »  காக்கா முட்டை, சைவம் சுட்டீஸ்கள்+ பெற்றோர்களுக்கேற்ற 'டாப் 5' வெகேஷன் படங்கள்

காக்கா முட்டை, சைவம் சுட்டீஸ்கள்+ பெற்றோர்களுக்கேற்ற 'டாப் 5' வெகேஷன் படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹையா! சம்மர் தொடங்கியாச்சு என்று குட்டீஸ்களும், இவங்களை ஒரு மாசம் சமாளிக்கணுமே என்று பெற்றோர்களும் அலுத்துக்கொள்ளும் கோடை விடுமுறை 'ஆன் தி வே' என்று வந்து கொண்டேயிருக்கிறது.

இந்த ஒரு மாத காலத்தில் பிள்ளைகள் படுத்தும் பாட்டால் பள்ளிக்கூடமும், ஆசிரியர்களும் உங்கள் கண்களுக்குத் தெய்வமாய்த் தெரிந்தாலும் ஆச்சரியமில்லை.


கோடை விடுமுறையில் குழந்தைகளை சிறப்பு வகுப்புகள் அனுப்பலாமா? என்று யோசிப்பதற்குப் பதிலாக அவர்களுடன் சேர்ந்து உங்கள் பொழுதுகளை உபயோகமாக எப்படிக் கழிப்பது என்று சிந்தியுங்கள்.


இதனால் உங்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான பாசம், நெருக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும். இந்த விடுமுறையை குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில் சில படங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.


மகிழ்ச்சி, சக உயிர்களின் மீதான அன்பு, சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இப்படங்களை வரிசைப்படுத்தியுள்ளோம். மறக்காமல் குழந்தைகளுடன் இணைந்து இப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்...


காக்கா முட்டை

காக்கா முட்டை

பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தருவதில்லை என்பதை அழுத்தமாக எடுத்துரைத்த 'காக்கா முட்டை' பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று. பணம், ஆடம்பரம் ஆகியவை உண்மையான மகிழ்ச்சியைத் தருவதில்லை என்று உங்கள் குழந்தை உணர்வது, அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வழிவகுக்கும்.


பசங்க

பசங்க

இப்படம் சிரிப்பதற்கான தருணங்களை வழங்குவதோடு ஒற்றுமை, போட்டி குறித்து உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கும். மேலும் ஒரு நல்ல பெற்றோராக நீங்கள் திகழவும் இப்படம் வழிகாட்டும்.


பசங்க 2

பசங்க 2

'பசங்க' படத்தை கிராமத்துப் பாணியில் எடுத்த பாண்டிராஜ் பசங்க 2' வை நகரக் குழந்தைகளை மையமாகக்கொண்டு எடுத்திருக்கிறார். இதில் வரும் குட்டீஸ்களின் குறும்பு அவர்களை மகிழ்விக்கும். அதேநேரம் பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி கையாளுவது என்பது குறித்தும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். ஒரே கல்லில் 2 மாங்காய்!


சைவம்

சைவம்

சக உயிர்களான பறவைகள், விலங்குகள் மீது உங்கள் குழந்தை அன்பு செலுத்த வேண்டும் எனில் இப்படத்தை மறக்காமல் பாருங்கள். பிற உயிர்களின் மீது இரக்கம், பரிவு காட்டுவது போன்ற பண்புகள் உங்கள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை சிறந்திட பெரிதும் உதவக்கூடும்.


36 வயதினிலே

36 வயதினிலே

எல்லா உணவுப் பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தவிர்க்க இயற்கை விவசாயத்தின் மீது பெரும்பாலானவர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த நேரத்தில் இப்படத்தைப் பார்ப்பது இயற்கை விவசாயம், நகர்ப்புற விவசாயம் குறித்து உங்கள் குழந்தை அறிந்து கொள்ள உதவி செய்யும். இது கண்டிப்பாக அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படத்தைப் பார்த்து உங்கள் குழந்தை ஒரு குட்டி விவசாயியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


English summary
We Present to you Top 5 Films you can Watch with your Kids this Holiday Season.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil