விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் எது தெரியுமா ?
சென்னை : தமிழ் சினிமாவை தாண்டியும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படும் தமிழ் ஹீரோக்களில் விஜய்யும் ஒருவர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர் தான்.
Recommended Video
விஜய்யின் 48 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். விஜய் நடிக்கும் படக்குழுவினரும் ஸ்பெஷல் அப்டேட்களை வெளியிட்டு, இந்த நாளை இன்னும் ஸ்பெஷல் ஆக்கி வருகின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படக்குழு இதுவரை இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. தளபதி 66 படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த சமயத்தில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த டாப் 5 படங்களை பற்றி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இங்கே பார்க்கலாம்.

பூவே உனக்காக
சாக்லேட் பாய் ரோல்களில் நடித்து வந்த விஜய்யை ரசிகர்கள் மத்தியில் கமர்ஷியல் ஹீரோவாக அடையாளம் காட்டிய படம் பூவே உனக்காக. விக்ரமன் இயக்கிய இந்த படம் தான் விஜய்யின் முதல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். விஜய்யின் குடும்ப சென்டிமென்ட், காமெடி ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். எவர் க்ரீன் பாடல்களாகவும் அமைந்தன.

காதலுக்கு மரியாதை
காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர் என்றாலும் வித்தியாசமான காதல் கதை. மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து, பிறகு பெற்றோர் மற்றும் குடும்பத்திற்காக காதலை தியாகம் செய்ய முடிவு செய்வது என ஷாலினியும், விஜய்யும் போட்டி போட்டு காதலையும், சென்டிமென்ட் நடிப்பையும் வெளிப்படுத்திய படம். ஃபாசில் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இந்த படம், தமிழ் சினிமாவின் டாப் 10 காதல் படங்களில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும்
டைரக்டர் எழில் இயக்கத்தில் சென்டிமென்ட் ரொமான்டிக் படமாக எடுக்கப்பட்டது துள்ளாத மனமும் துள்ளும். சிம்ரனுடன் இணைந்து நடித்த விஜய், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆக்ஷன், டான்ஸ் என்பதை தாண்டி விஜய்க்கு அமைதியாக சென்டிமென்ட்டான நடிப்பும், ஆர்ப்பாட்டம் இல்லாத காதலும் பண்ண வரும் என காட்டிய படம்.

கில்லி
தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு படத்தின் ரீமேக் படம் தான் கில்லி. டைரக்டர் தரணி இயக்கத்தில் விஜய், கபடி வீரராக நடத்திருந்த படம், விஜய்யை மாஸ் ஹீரோவாக காட்டி பிளாக் பஸ்டர் வெற்றியை குவித்த படம். விஜய்யின் விளையாட்டு வீரர் ரோல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. விஜய்யின் முதல் 50 கோடி வசூல் படம் இது தான். த்ரிஷா, பிரகாஷ் ராஜின் நடிப்பு, வித்தியாசாகரின் இசை ஆகியன இப்போது வரை ரசிகர்களால் மறக்க முடியாத படமாக கில்லியை வைத்துள்ளது.

துப்பாக்கி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2012 ம் ஆண்டு ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் துப்பாக்கி. விஜய்யின் முதல் 100 கோடி வசூல் படம் இது தான். அனிருத் - விஜய் இணைந்து பணியாற்றிய முதல் படமும் இது தான். விஜய்யை மாஸ் ஆக்ஷன் ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்திய படம் துப்பாக்கி.


Click it and Unblock the Notifications











