»   »  சினிமாவையே மறக்க செய்த பிக்பாஸ்... எரிச்சலில் முன்னணி நடிகர்கள்!

சினிமாவையே மறக்க செய்த பிக்பாஸ்... எரிச்சலில் முன்னணி நடிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவைப் பொறுத்த வரை லைம்லைட்டிலும் செய்திகளிலும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மார்க்கெட்டில் மதிப்பு. இது தெரிந்து தான் நடிகர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக, ஜாலியாக இருந்தாலும் ரசிகர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆனால் அவர்களுடைய திட்டத்திற்கு சமீபகால அச்சுறுத்தல் பிக்பாஸ்.

சினிமா

சினிமா

நாட்டில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், உயிரே போவது போல இருந்தாலும் கூட அதை பற்றியெல்லாம் கவலையேபடாமல் சினிமாவைப் பற்றி பேசுவதுதான் தமிழர்களின் வழக்கம். குறிப்பாக நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் வாழ்வாதாரமே பறிபோன பின்னும் கூட சினிமா அலசல்தான் பிரதானமாக உள்ளது.

அஜித், விஜய் படங்கள்

அஜித், விஜய் படங்கள்

இப்போது பிக் பாஸ். அஜித், விஜய் படங்கள் கூட பின்னுக்கு போய்விட்டன பிக்பாஸுக்கு கிடைத்த வரவேற்பில்.

அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது விவேகம். விஜய்யின் மெர்சல் வருவதற்குள் பிக்பாஸ் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.

60வது நாளில் விவேகம்

60வது நாளில் விவேகம்

ஆனால் விவேகம்தான் பிக்பாஸால் அதிகம் பாதிக்கப்படும் போல தெரிகிறது. ஆகஸ்ட் 24-ம் தேதி விவேகம் ரிலீஸ் ஆகும்போது பிக் பாஸுக்கு 60 வது நாள். அதற்குப் பிறகும் 40 நாட்கள் பிக் பாஸ் ஓடவிருக்கிறது.

எரிச்சல்

எரிச்சல்

இதனால் அந்த சேனல் மீதே எரிச்சலில் இருக்கிறார்களாம் முன்னணி நடிகர்கள். ஆனால் வெளியிலும் காட்டிக் கொள்ள முடியாத சூழல்.

English summary
Top actors are disappoiting with bigboss program due to the low audience in cinema halls.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil