»   »  இந்த ஆண்டின் டாப் டென் மெகா ஹிட் படங்கள்

இந்த ஆண்டின் டாப் டென் மெகா ஹிட் படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் வெற்றிபெற்ற படம் என்பதற்கு ஒரு வரையறை சொல்வார்கள். ஊரில் கடைக்கோடியில் இருக்கும் டூரிங் டாக்கீஸில் படம் வெளியாகும்போது அந்த தியேட்டரில் கடலை விற்பவர் கூட 'ஆஹா... இந்த படத்தால நமக்கு நல்ல லாபம்' என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கலெக்‌ஷன் அள்ளும் படங்கள் தான் வெற்றி பெற்ற படங்கள் எனலாம். இந்த ஆண்டு அப்படி கலெக்ஷன் அள்ளிய டாப் டென் படங்களை ஒரு அலசல் பார்ப்போம்.

10. விசாரணை

10. விசாரணை

பொதுவாக விருதுகளையும் நல்ல விமர்சனங்களையும் குவிக்கும் படங்கள் வசூலில் படுத்துக்கொள்ளும். ஆனால் விசாரணை வசூலிலும் ஏமாற்றவில்லை. மிக்க் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட விசாரணை ஏ செண்டரில் நன்றாகவே போனது. பி, சி யில் சுமாராக போனது. ஆனால் போட்ட காசை விட மூன்று மடங்குக்கு வசூலித்ததே பெரிய விஷயம்தான்.

9. அப்பா

9. அப்பா

விசாரணை போல கல்ட் படமாக இல்லாவிட்டாலும் அப்பா ஒரு நல்ல படம்தான். ஒரு நல்ல கருத்தை ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசித்து உணரும் விதமாக சொல்லியிருந்தார் சமுத்திரகனி. மேக்கிங்கில் சில சில குறைகள் இருந்தாலும் கூட சொன்ன கருத்துக்காகவே மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். விசாரணையும், அப்பாவும் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டால் கூட லாபம் பார்க்க முடியும் என்பதை நிரூபித்தன. ஜோக்கர் படமும் இதில் சேரும். ஆனால் விசாரணை, அப்பா படங்களை ஒப்பிடும்போது ஜோக்கர் வசூலில் பின் தங்கியது.

8. ரெமோ

8. ரெமோ

சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு இரண்டு ஹிட்கள். ரஜினி முருகனை அடுத்து பார்ப்போம். இதுவரை பி, சி செண்டர்களில் பட்டையை கிளப்பி கொண்டிருந்த சொந்த படம் எடுத்தால் தான் ஏ செண்டர் பக்கமும் போக முடியும் என்று தனது மேனேஜரை தயாரிப்பாளராக்கி இறங்கினார். பிசி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, பிரம்மாண்ட புரமோஷன் என மாஸ்டர் ப்ளான் ரெடியானது. ஆனால் இத்தனைக்கும் ஏற்ற கதை வேண்டுமே? அது இல்லை. ஆனாலும் கூட சிவகார்த்திகேயன், யோகிபாபு, சதீஷ் ஆகியோரின் ஒன்லைன்கள் ரசிகர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர்களாக இருந்ததால் படம் தப்பித்தது. ஆனால் ஓடியதை விட ஓட்டியது அதிகம். அவர்கள் சொல்லும் அளவுக்கு இல்லையென்றாலும் கூட சிவகார்த்திகேயன் படங்களில் இந்தப் படம் அதிக வசூல்தான். செலவும் அதிகம்.

7. தர்மதுரை

7. தர்மதுரை

ரஜினியின் சூப்பர் ஹிட் டைட்டிலை தவிர வேறு எந்த எதிர்பார்ப்புமே இல்லை. ஆனால் யாருமே எதிர்பார்க்காமல் ஓடிய படம். ஸ்லோவான கதை, பழகிய காட்சிகள் என்றாலும் கூட சீனு ராமசாமி கொண்டு வந்த நேட்டிவிட்டியும், விஜய் சேதுபதியின் பெர்ஃபார்மன்ஸும் படத்தை காப்பாற்றின. சுமாராக போகும் என எதிர்பார்க்கப்பட்ட தர்மதுரை ஃபீல் குட் மூவி என்ற பெயரால் நன்றாகவே போனது. இந்த ஆண்டு விஜய் சேதுபதிக்கு தான் அதிக படங்கள் ரிலீஸாகின. அவற்றில் வசூலில் முதலிடம் பிடித்தது தர்மதுரைதான்.

6. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

6. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

கமர்ஷியல் ஹிட்டை சுவைக்க ஏங்கிக்கொண்டிருந்த விஷ்ணுவிஷால் சரியாக தேர்ந்தெடுத்தார் எழிலை. எழில் வழக்கமான சூரி, சிங்கமுத்து, ரவிமரியா கூட்டணியோடு ரோபோ ஷங்கரும் இணைய ஒரு செம காமெடி படம் தயாரானது. ஆங்காங்கே தொய்வுகள் இருந்தாலும் அந்த ‘அன்னிக்கு காலைல ஆறு மணி இருக்கும்...' என்ற ரோபோ ஷங்கரின் ரிப்பீட் டயலாக் காமெடிக்கே ரிப்பீட் ஆடியன்ஸ் குவிந்தார்கள். காமெடி கமர்ஷியல்னா என்கிட்ட வாங்க... மினிமம் கேரண்டி உண்டு என்பதை நிரூபித்தார் எழில்.

5. ரஜினிமுருகன்

5. ரஜினிமுருகன்

இந்த ஆண்டின் முதல் சூப்பர் ஹிட் படம். ஒரு வருடமாக பெட்டியிலேயே தூங்கிக்கொண்டிருந்த ரஜினிமுருகனை ஏகப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு பிறகு பொங்கலுக்கு தூசி தட்டினார்கள். பாலாவின் தாரை தப்பட்டை, கெத்து, கதகளி என ஜாம்பாவான்கள் பயமுறுத்தினாலும் இறங்கி அடித்தான் ரஜினிமுருகன். மற்ற படங்களில் காமெடியே இல்லாத வறட்சி இந்த நான் ஸ்டாப் ஸ்டேண்ட் அப் காமெடியை ஜெயிக்க வைத்தது. ஃபேமிலி ஆடியன்ஸ் முதல் இளவட்டங்கள், குட்டீஸ் வரை அனைவருக்கும் ஆளுக்கு கொஞ்சம் சேர்த்து மிக்ஸ் ஆக்கி தரும் பொன்ராம் ஃபார்முலா மீண்டும் சக்சஸ் ஆனது.

4. இறுதிசுற்று

4. இறுதிசுற்று

இந்த ஆண்டின் அபூர்வ ஹீரோயின் ஓரியண்டட் ஹிட். துரோகி என்ற ஃப்ளாப்புக்கு பிறகு சுதா கொங்கரா, ரீ எண்ட்ரி மாதவன், ரியல் குத்துச்சண்டை வீராங்கனை ஹீரோயின் என அதிகம் எதிர்பார்ப்பே இல்லாமல் களத்தில் இறங்கிய இறுதிசுற்று ஏ,பி,சி,டி என எல்லா மைதானத்திலும் வெற்றியை தனதாக்கியது. விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. இந்தியில் இதுபோன்ற ஸ்போர்ட்ஸ் படங்கள் ஆல்ரெடி நிறைய பார்த்து சலித்து விட்டதால் தமிழில் மட்டும் சூப்பர் ஹிட் ஆனது.

3. தெறி

3. தெறி

அட்லீயின் சத்ரியன் ரீமேக். கதைக்காக அதிகம் மெனக்கடவே இல்லை அட்லீ. விஜய்யும் எப்போதும் போல அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மகேந்திரன், நைனிகா இருவரும் படத்தை ஃப்ரெஷாக்கினார்கள். ஜுனியர் மீனா குழந்தைகள் ஆடியன்ஸுக்கு பொறுப்பு எடுத்துக்கொண்டார். யூனிஃபார்ம் போட்டால் காமெடி போலீஸாகவே இதுவரை தெரிந்துவந்த விஜய் இதில் கொஞ்சம் மாறியிருந்தார். எல்லாவற்றையும் விட படத்தை சூப்பர் ஹிட் ஆக்கியது தாணுவின் சொல்லி அடிக்கும் புரமோஷன்.

2. பிச்சைக்காரன்

2. பிச்சைக்காரன்

இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட். பிச்சைக்காரன் என்ற நெகட்டிவ் டைட்டில், சுட்டு போட்டாலும் நடிப்பே வராத விஜய் ஆண்டனி, ஃபார்ம் போன பேட்ஸ்மேனாக இயக்குநர் சசி, இவர்கள் இருவரைத் தவிர மற்ற எல்லோருமே தெரியாத முகங்கள், அதே பழைய தாய்ப்பாச செண்டிமெண்ட்ஸ். இவ்வளவு இருந்தாலும் கூட திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டான் பிச்சைக்காரன். ஏக்நாத்தின் நூறு சாமிகள் இருந்தாலும் வரிகள் உருக வைத்தன. ஒரு மாஸ் ஹீரோ நடிக்க வேண்டிய கதையை செலக்ட் செய்த்தில் விஜய் ஆண்டனி மாஸ் ஹீரோ லிஸ்டில் நுழைந்தார். இங்கு மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நாற்பது கோடிகளை குவித்தான் பிச்சைக்காரன். சசியும் மீண்டும் ஃபார்முக்கு வந்தார்.

1. கபாலி

1. கபாலி

‘நான் யானை இல்லை... குதிரை. விழுந்தா டக்குனு எழுந்துடுவேன்' என்று ரஜினி சொன்னதை நிரூபித்தார். எத்தனை பெரிய நெருக்கடி வந்தாலும், 'இனி ரஜினி அவ்வளவு தான்' என்ற எதிரிகளின் கொக்கரிப்புகளுக்கு வெற்றி மூலம்தான் பதில் சொல்வார் சூப்பர் ஸ்டார். லிங்கா பிரச்சினையில் நண்டு சிண்டுகளெல்லாம் ரஜினிக்கு எதிராக பேசி பப்ளிசிட்டி தேடிக்கொள்ள ரஜினியோ பொறுமை காத்தார். தலைவருக்காக சகித்துக்கொண்டனர் ரசிகர்கள். பெரிய மனதுடன் பணத்தை கொடுத்த பிறகும் ரஜினியை பின் தொடர்ந்தனர் சில சுயநலக்காரர்கள். ஆனால் கபாலி மூலம் அவர்களைக் காணாமல் போகச் செய்தார் ரஜினி. ஸ்டைல், ஆக்‌ஷனில் மட்டுமல்லாமல் நீண்ட காலம் கழித்து பெர்ஃபார்மென்ஸிலும் பின்னி எடுக்க, அவை மட்டுமல்லாமல் ரஜினி பேசிய அரசியலும் உலக லெவல். ஒடுக்கப்பட்டோரின் ஒட்டு மொத்த குரலாகவே ரஜினியை பார்த்தார்கள். ரஜினி ரசிகர்களைத் தாண்டி அனைத்து தரப்புக்கும் பிடித்த ஒரு மறக்க முடியாத காவியமானது கபாலி!

English summary
Here is the list of top 10 highest collecting movies of Tamil Cinema in the year 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil