For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய டாப் ஹீரோக்களின் பிளாக்பஸ்டர் படங்கள்...ஓர் ஸ்பெஷல் ரவுண்ட் அப்

  |

  சென்னை : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகின்றன. இவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனங்களை கவர்ந்து பேசப்படுகிறது. பெரிய அளவில் வெற்றியும் பெறுகிறது. அதிலும் டாப் ஹீரோக்கள் படங்கள் மட்டுமே அதிகம் வெற்றி அடைகின்றன. பல படங்கள் வருவதே தெரிவதில்லை. சில படங்கள் மட்டுமே கதைக்காக பேசப்படுகின்றன.

  ஆனால் சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக டாப் ஹீரோக்களின் படங்கள் பல ரசிகர்களை கவர்ந்து பிளாக்பஸ்டர் ஆகின்றன. ஆனால் அந்த படங்கள் வெற்றி பெற்ற பிறகு தான் கதை திருட்டு விவகாரம் கிளம்பி, கோர்ட் வரை செல்கின்றன. இதில் நிஜமாகவே மற்ற படங்களில் இருந்து காட்சிகளும், கதைகளும் திருடப்பட்டனவா அல்லது எதிர்பாராத விதமாக ஒரே போன்ற சிந்தனை இரு டைரக்டர்களுக்கு தோன்றியதா என்பது தெரியவில்லை. அப்படி சமீபத்தில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய டாப் ஹீரோக்களின் பிளாக்பஸ்டர் படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

  என்னடா ஃப்ரேமுக்குள்ள மானிட்டர் தெரியுது.. வலிமை பட எடிட்டிங் தவறுகளை சுட்டிக்காட்டிய ரசிகர்கள்!என்னடா ஃப்ரேமுக்குள்ள மானிட்டர் தெரியுது.. வலிமை பட எடிட்டிங் தவறுகளை சுட்டிக்காட்டிய ரசிகர்கள்!

  கத்தி

  கத்தி

  துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்த படம் கத்தி. கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயிகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற சோஷியல் செமேஷுடன் எடுக்கப்பட்டது. இந்த படம் ரிலீசான போது இதில் வரும் வசனங்கள் பல கடும் எதிர்ப்பை சந்தித்தன. அதோடு டைரக்டர் கோபி நயினார் இது தன்னுடைய கதை என கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்த கதையை ஆரம்பத்தில் தன்னிடம் கேட்டு விட்டு ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் மீது வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

  எந்திரன்

  எந்திரன்

  ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக்கப்பட்ட மெகா பட்ஜெட் சயின்ஸ் ஃபிக்சிங் படம் எந்திரன். இந்த படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. ஆனால் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நண்பன் இது தன்னுடைய கதை என்று உரிமை கோரினார். இந்த கதை வேறு ஒரு பெயரில் 1996 ம் ஆண்டு பத்திரிக்கை ஒன்றில் வெளியானது. இந்த வழக்கு கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று, பிறகு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.

  96

  96

  விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்திருந்த 96 படம் சிறந்த ரொமான்டிக் காதல் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பிரேம் குமார் இயக்கிய இந்த படம் அனைவரையும் கவர்ந்திருந்தது. ஆனால் டைரக்டர் பாரதிராஜாவின் முன்னாள் அசிஸ்டென்டான சுரேஷ் என்பவர், 96 படத்தின் கதை தன்னுடையது என்றும், வேறு ஒரு டைரக்டர் மூலம் பிரேம்குமார் இதை திருடி விட்டார் என்றும் குற்றம்சாட்டினார். இதே போன்ற ஒரு கதையை 92 என்ற பெயரில் தான் பதிவு செய்திருந்ததாகவும் கூறினார்.

  சர்கார்

  சர்கார்

  விஜய் நடித்த சர்கார் வேறு விதமாக பல பிரச்சனைகளை ரிலீசுக்கு முன்பே சந்தித்தது. இந்த படத்தின் டீசர், டிரைலரை பார்த்து விட்டு இது தன்னுடைய கதை என சொன்னார் வருண் ராஜேந்திரன் என்பவர். இதை சங்கத்தில் பதிவு செய்திருப்பதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கவும் செய்தார். பிறகு டைரக்டர் கே.பாக்யராஜ் தலையிட்டு இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். ஏ.ஆர்.முருகதாசும் படத்தின் டைட்டில் கார்டில் கிரெடிட்டட் என வருண் ராஜேந்திரனில் பெயரை சேர்த்தார்.

  வலிமை

  வலிமை

  2022ம் ஆண்டை வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றியுடன் துவக்கி உள்ளார் அஜித். ஆக்ஷன் படமான வலிமை, இதுவரை ரிலீசான படங்களின் முதல் நாளை வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்து, இரண்டாவது வாரத்திலேயே 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. ஆனால் இந்த படம் 2016 ம் ஆண்டு வெளிவந்த மெட்ரோ படத்தை போலவே இருப்பதாக சோஷியல் மீடியாவில் போடப்பட்ட மீம்ஸ் செம வைரலாகின. வலிமை மற்றும் மெட்ரோ படத்தில் வரும் பல சீன்களை ஒப்பிட்டு மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது. இதனால் மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர், வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூரிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு கோர்ட் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

  English summary
  Here we discussed about kollywood top heroes blockbuster movies which face plagiarism controversy in recent years. From Katthi to Valimai many blockbuster tamil movies face court cases.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X