»   »  தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை… அக்டோபர் 7க்கு அடித்துக்கொள்ளும் ஹீரோக்கள்…

தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை… அக்டோபர் 7க்கு அடித்துக்கொள்ளும் ஹீரோக்கள்…

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை போன்ற பெருநகரங்களையும், விடுமுறை நாட்களையும் குறிவைத்துதான் இப்போதெல்லாம் படங்கள் ரிலீஸ் ஆகின்றன (ஒரே விதிவிலக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி. அவர் படம் வெளியாகும் நாள்தான் விடுமுறை நாள்). இல்லையென்றால் கல்லா கட்ட முடியாதே...

அப்படி இந்த ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை நாட்களாக வருகின்றன. 7ம் தேதி வெள்ளிக்கிழமை, 8ம் தேதி சனிக்கிழமை, 9ம் தேதி ஞாயிறு, பத்தாம் தேதி ஆயுத பூஜை, 11ம் தேதி மொகரம். எனவே அன்றைய தேதியில் களம் இறங்கத்தான் கடும் போட்டி...

முந்திக்கொண்ட ரெமோ

முந்திக்கொண்ட ரெமோ

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புது இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ரெமோ. சிவா பெண் வேஷம், பிசி ஸ்ரீராம் கேமரா, ரசூல் பூக்குட்டி ஒலிக் கலவை, ஹாலிவுட் மேக்கப் என பெரிய ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் இருப்பதால்
பெரியதாக கல்லா கட்ட வேண்டிய நெருக்கடி ரெமோக்கு. அதனாலேயே முந்திக்கொண்டு போன மாதமே அக்டோபர் 7 ல் வருகிறோம் என அறிவித்துவிட்டனர்.

ஜீவாவின் கவலை வேண்டாம்

ஜீவாவின் கவலை வேண்டாம்

சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஜீவா பெரிதும் நம்பியிருப்பது கவலை வேண்டாம் படத்தை. ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா நடித்திருக்கும் இந்த படத்தை இயக்கியிருப்பது யாமிருக்க பயமே டிகே. இந்த படமும் அக்டோபர் 7 ஆம் தேதி களம் இறங்க காத்திருக்கிறது.

போகன்

போகன்

ரோமியோ ஜுலியட் லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் படம். கூடுவிட்டு கூடு பாயும் கதை என இப்போது ஒரு தகவல் பரவுகிறது. இப்படத்தையும் அக்டோபர் 7ல் இறக்கத் திட்டமிடுகின்றனர்.

கத்திச் சண்டை

கத்திச் சண்டை

விஷால் - சுராஜ் இணையும் படம். ஆனால் எதிர்பார்ப்பு வடிவேலுக்குதான். ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம் பிடித்து சும்மா இருந்த வடிவேலு நீண்ட நாள் கழித்து காமெடியன் அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தில் சூரியும்இருக்கிறார்.

இந்த நான்கு படங்கள் தான் இப்போது அக்டோபர் 7 ஐத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதில் எத்தனை களம் இறங்கும், எத்தனை பின்வாங்கும், எத்தனை பட்டியலில் சேரும் என்பது இனிதான் தெரிய வரும்.

English summary
Leading heroes are targeting October holidays to release their new biggies.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil