»   »  ஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள்! - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா?

ஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள்! - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
மெர்சல் டீமுக்கு தமிழ் ராக்கர்ஸ் கொடுத்த அதிர்ச்சி !!-வீடியோ

சென்னை : இப்போதெல்லாம் திரைப்படங்களின் ப்ரொமோஷன்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப் போன்ற சமூக ஊடகங்களின் வழியேதான் அதிகளவில் மேற்கொள்ளப் படுகின்றன.

படங்களின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதில் தொடங்கி படம் திரையிடப்படும் வரை படக்குழுவின் ஒவ்வொரு அறிவிப்பும் ட்ரெண்ட் செய்யப்படுகின்றன.

படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சமூக ஊடகங்களில் மாஸ் காட்ட வேண்டியிருப்பது இப்போது எழுதப்படாத விதியாகிவிட்டது.

யாருக்கு மாஸ் :

யாருக்கு மாஸ் :

படம் தியேட்டர்களில் எத்தனை நாட்கள் ஓடுகிறது என இருந்த ரசிகர்களின் போட்டி இப்போது யூ-ட்யூப் ஹிட்ஸ், லைக்ஸ் யாருடைய படம் அதிகம் ட்ரெண்ட் ஆவது எனக் கால ஓட்டத்தில் மாறிவிட்டது. அந்த வகையில் இதுவரை வந்த தென்னிந்திய ப் படங்களில் ஒரே நாளில் அதிக ஹிட்ஸ் அடித்த டீசர்கள் எவை எனப் பார்க்கலாம்.

Peace Bro :

சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்தின் டீசர் பல திரைப்படங்களின் டீசர் சாதனைகளை முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறது. இந்தப் படத்தின் டீசரை 24 மணி நேரத்தில் 11 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.

விவேகம் :

அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டீசர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை ஒரே நாளில் 6 மில்லியன் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.

கபாலி :

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெருத்த எதிர்பார்ப்போடு வெளியான 'கபாலி' டீசர் ஒரே நாளில் 5.1 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டிருக்கிறது.

ஜெய் லவ குசா :

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் 'ஜெய் லவ குசா'. இந்தப் படத்தின் டீசரை முதல் நாளில் 4.98 மில்லியன் பேர் யூ-ட்யூபில் பார்த்திருக்கிறார்கள்.

ஸ்பைடர் :

மகேஷ்பாபுவின் நடிப்பில் தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகவிருக்கும் படம் 'ஸ்பைடர்'. இந்தப் படத்தில் தெலுங்கு டீசரை ஒரே நாளில் 4.4 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.

English summary
The promotions of movies are largely through social media nowadays. Movies how many days running in theaters now have become YouTube's hits. 'Mersal' Teaser is the biggest hit in South Indian film teasers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil