twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்துடன் மோதிய கோலிவுட் நடிகர்கள்.. விஜயகாந்த் முதல் தனுஷ் வரை!

    |

    சென்னை: பாக்ஸ் ஆபிஸில் நடிகர் ரஜினிகாந்துடன் மோதிய டாப் கோலிவுட் நடிகர்கள் குறித்து ஓர் பார்வை.

    தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். உலகம் முழுக்கவும் ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த், நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்றார்.

    என்ன டப்புன்னு இப்படி கேட்டுட்டாப்ல.. 'எனக்கு வேற ஏதாவது வேலை கிடைக்குமா? அமிதாப்பச்சன் கேள்வி! என்ன டப்புன்னு இப்படி கேட்டுட்டாப்ல.. 'எனக்கு வேற ஏதாவது வேலை கிடைக்குமா? அமிதாப்பச்சன் கேள்வி!

    எளிதில் உயரவில்லை

    எளிதில் உயரவில்லை

    நடிகர் ரஜினிகாந்த் எளிதில் உச்ச நடிகராக உயரவில்லை. பல்வேறு தடைகளையும் அவமானங்களையும் கடந்துதான் இந்த அந்தஸ்தை அடைந்ததாக தெரிவித்தார். பல நட்சத்திரங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்துடன் மோதுவதைத் தவிர்த்தாலும், சிலர் அவரை எதிர்கொண்டனர். 1990 க்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதிய கோலிவுட் நடிகர்கள் யார் என்பது குறித்து ஓர் பார்வை..

     நடிகர் விஜயகாந்த்

    நடிகர் விஜயகாந்த்

    நடிகர் விஜயகாந்த் மாநில மக்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவர் ஆவார். நடிகர் விஜயகாந்துக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. நடிகர் விஜயகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பலமுறை மோதியுள்ளார். 1990க்குப் பிறகு ரஜினிகாந்துடன் அதிக முறை மோதியவர் இவர்தான். விஜயகாந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் பெரியண்ணா, கருப்பு நிலா, ஹானஸ்ட் ராஜ், சின்ன கவுண்டர் ஆகிய படங்கள் ரஜினியின் தளபதி, படையப்பா, பாஷா, வீரா, மன்னன் ஆகிய படங்களுடன் மோதின.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    அடுத்து கமல்ஹாசன்.. இவர் ரஜினிகாந்தின் நடிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியைக் கொண்டவர். இவர் தனது சிறந்த நடிப்பு திறமையால் பார்வையாளர்களை பல முறை பிரமிக்க வைத்துள்ளார். இரு நடிகர்களும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் என்றாலும், அவர்கள் பாக்ஸ் ஆபிஸில் 'சதி லீலவதி' Vs 'பாஷா', 'குருதி புனல்' Vs 'முத்து', 'சந்திரமுகி' மற்றும் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படங்களுடன் மோதினர்.

    நடிகர் பிரபு

    நடிகர் பிரபு

    அடுத்து நடிகர் பிரபு.. ரஜினிகாந்தை தனது மூத்த அண்ணன் என குறிப்பிட்டு வரும் பிரபு சிலமுறை அவருடன் பாக்ஸ் ஆபிஸில் மோதியுள்ளார். நடிகர் பிரபு தனது படங்களான தாலாட்டு கேட்குதம்மா, கட்டுமரக்காரன் ஆகிய படங்கள் ரஜினிகாந்தின் தளபதி மற்றும் பாஷா படங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் மல்லுக்கட்டியிருக்கிறார்

    நடிகர் சரத்குமார்

    நடிகர் சரத்குமார்

    அடுத்து நடிகர் சரத்குமார்.. சரத்குமார் நடித்த ரகசிய போலீஸ் படமும் ரஜினிகாந்துடன் பாக்ஸ் ஆபீஸில் மல்லுக்கட்டியது. 1995ஆம் ஆண்டு ஆர் எஸ் இளவரசன் இயக்கத்தில் தீபாவளியின் போது ரஜினிகாந்தின் முத்து படத்திற்கு போட்டியாக ரிலீஸ் செய்யப்பட்டது. ரகசிய போலீஸ் படம் நல்ல விமர்சனங்களை பெற்ற போதும் முத்து படத்திற்கு அதனால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    நடிகர் மம்மூட்டி

    நடிகர் மம்மூட்டி

    அடுத்து மலையாள நடிகரான மம்மூட்டியும் பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்துடன் மோதியிருக்கிறார். மலையாள நடிகராக இருந்த போதும் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ள மம்மூட்டி தமிழிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். மம்மூட்டியின் மக்களாட்சி படம் ரஜினியின் முத்து படத்துடன் மோதியது. ஆர்கே செல்வமணி இயக்கிய இப்படத்தில் மம்மூட்டி அரசியல்வாதியாக நடித்திருப்பார்.

    நடிகர் அரவிந்த் சுவாமி

    நடிகர் அரவிந்த் சுவாமி

    அடுத்து நடிகர் அரவிந்த் சுவாமி.. தளபதி படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடித்துள்ளார் அரவிந்த் சுவாமி. இவர் தனது தாலாட்டு படத்தின் மூலம் ரஜினி காந்தின் வள்ளி படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதினார். வள்ளி படத்தில் நடிகர் ரஜினிகாந்து கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் பிரபு தேவா

    நடிகர் பிரபு தேவா

    அடுத்த நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா.. 1990 களில் வெற்றிகரமான ஹீரோவாக இருந்த பிரபுதேவா, ரஜினிகாந்தின் 'வீரா' உடன், பவித்ரன் இயக்கிய 'இந்து' என்ற படத்தின் மூலம் மோதினார். இந்து படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதும் வீரா படத்திற்கு பிரபு தேவாவால் ஈடு கொடுக்க முடியவில்லை.

    நடிகர் அஜித்

    நடிகர் அஜித்

    அடுத்து நடிகர் அஜித்.. அஜீத் ரஜினிகாந்தின் 'பில்லா' படத்தை ரீமேக் செய்து, பாக்ஸ் ஆபிஸில் புதிய வெற்றியை பதிவு செய்தார். அடுத்த ஜென்ரேஷன் நடிகரான அஜித் 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரஜினியுடன் மோதினார். அஜித்தின் 'விஸ்வாசம்' மற்றும் ரஜினிகாந்தின் 'பேட்ட' ஆகியவை ஒரே தேதியில் வெளியிடப்பட்டன, இருவரும் அவரவர் ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டனர்.

    நடிகர் தனுஷ்

    நடிகர் தனுஷ்

    அடுத்து நடிகர் தனுஷ்.. ரஜினிகாந்தின் மருமகனான தனுஷ், மாமனாருடன் பாக்ஸ் ஆபிஸில் மோதியிருக்கிறார். கடந்த பொங்கலின் போது துணிச்சலாக ரஜினியுடன் மோதியுள்ளார். தனுஷ் கடந்த ஆண்டு பொங்கலின் போது தனது பட்டாஸ் படத்தின் மூலம் ரஜினியின் தர்பார் படத்துடன் மோதினார்.

    English summary
    Top kollywood actors clashed with Rajinikanth in Box office. Actors Vijayakanth, Kamal, Prabu, Sarathkumar clashed with Rajinikanth on screen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X