ட்ரைலர் ஹிட்டு... படம் ஃபிளாப்: 2022ம் ஆண்டில் ரசிகர்களை ஏமாற்றிய டாப் ஹீரோஸ் மூவிஸ்
சென்னை: தமிழில் 2022ம் ஆண்டு ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகின.
ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் அதன் டீசர், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
2022ல் சில ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியடைந்தது.
அப்படி ட்ரெய்லர் ஹிட் அடித்து திரைப்படமாக தோல்வியான பட்டியலை இப்போது பார்க்கலாம்.

முதலிடத்தில் விஜய்யின் பீஸ்ட்
2022ம் ஆண்டு வெளியான திரைப்படங்களின் ட்ரெய்லர்களில் அதிகம் வீயூஸ் கிடைத்ததில் விஜய்யின் பீஸ்ட் தான் முதலிடத்தில் உள்ளது. 24 மணி நேரத்தில் 29 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த பீஸ்ட் ட்ரெய்லர், மொத்தம் 59 மில்லியன் பார்வைகளை கடந்தும் மாஸ் காட்டியுள்ளது. அதேபோல் பீஸ்ட் ட்ரெய்லர், 3.2 மில்லியன் லைக்ஸ்களை வாரி குவித்துள்ளது. ஆனால், இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வசூலில் 100 கோடியை கடந்தாலும், விஜய்யின் கேரியரில் அவரது ரசிகர்களிடம் கூட இந்தப் படம் ஹிட்டாகவில்லை என்பதே உண்மை.

அஜித்தின் வலிமைக்கு வந்த சோதனை
இதனைத் தொடர்ந்து கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் பட ட்ரெய்லர், 43 மில்லியன் பார்வைகளை கடந்தது. ஆனால், இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அஜித்தின் வலிமை திரைப்படம் தான் பிளாப் வரிசையில் இரண்டாவது உள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த இந்தப் படமும், வசூலில் 100 கோடி ரூபாயை கடந்தது. ஆனால், ரசிகர்களிடம் நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன. வலிமை படத்தின் ட்ரெய்லர், 33.6 மில்லியன் பர்வைகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணாச்சியின் தி லெஜெண்ட்
இதற்கு அடுத்தபடியாக ட்ரெய்லரில் புதிய சாதனை படைத்தது 'தி லெஜெண்ட்' திரைப்படம் தான். அண்ணாச்சியின் நடிப்பில் உருவான இந்தப் படத்திற்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் ட்ரெய்லரில் மட்டும் சூப்பர் ஹிட் அடித்த தி லெஜண்ட், திரையரங்குகளில் மோசமான தோல்வியைத் தழுவியது. தி லெஜ்ண்ட் ட்ரெய்லர் 32 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. சிம்புவின் வெந்து தணிந்தது காடு 20 மில்லியன் பார்வைகளை தாண்டியது போல, படமாகவும் வெற்றிப் பெற்றது.

மகான், பொன்னியின் செல்வன்
அதேபோல் விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தின் ட்ரெய்லரும் 20 மில்லியன் பார்வைகளை கடந்தது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும், ஓடிடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றே சொல்லப்படுகிறது. மேலும், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பட ட்ரெய்லர் 18 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்திருந்தது.

கடைசி இடத்தில் கோப்ரா, டான்
இந்த வரிசையில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்தின் ட்ரெய்லர் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தும் படுதோல்வியடைந்தது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், பல கெட்டப்புகளில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் 14 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. ஆனால், படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை.


Click it and Unblock the Notifications











